எல்லாரும் வாங்க 'பிஸ்கோத்' படத்தோட கதை சொல்றேன்..
படத்தோட ஆரம்பத்துல சந்தானம் ஐஞ்சு வயசு பையன். அவர் அப்பா சின்னதா ஒரு பிஸ்கெட் தயாரிக்கற பேக்டரி வைச்சுருக்காரு. ஆனந்த்ராஜ் அவரோட நண்பர். பிஸ்கட் பேக்டரில வொர்க்கிங் பார்ட்னர்.
சந்தானம் தன் அப்பா கூட கடைகளுக்கு பிஸ்கெட் போட போகும் போது, ஒரு கடைக்காரர் ஏற்கனவே உள்ள பிஸ்கெட்டே விக்கல அதனால புதுசா எதுவும் வேண்டாம்னு சொல்லுவாரு.
உடனே சந்தானம் 'பிஸ்கெட் ஜாடியை உள்ள வைச்சுருந்தா வர்றவங்களுக்கு எப்படி தெரியும் எடுத்து முன்னால வையி..'ன்னு இதுவரை யாருக்குமே தெரியாத ஒரு பிஸினஸ் சீக்ரெட்டை சொல்ல, கடைக்காரரும் ஜாடியை எடுத்து வெளியே வைக்க, உடனே ஒரு கஸ்டமர் வந்து பிஸ்கெட் வாங்கிட்டு போக..
கடைக்காரர் உனக்கு அறிவு ஜாஸ்தின்னு சொல்ல சந்தானம் எனக்கு அறிவு அளவா தான் இருக்கு உனக்கு கம்மியா இருக்கறதால எனக்கு அதிகமா இருக்கற மாதிரி தெரியுதுன்னு காமெடி பஞ்ச்(சர்) ஒன்னு அடிக்க.. அமர்களமா ஆரம்பிக்குது படம்.
சரி, விமர்சனம் பண்ண இதுதான் சரியான படம்னு நானும் நிமிர்ந்து உட்காந்தேன்.
அடுத்த சந்தானம் ஐடியா:
அந்த ஸ்டார்ட்டிங் சீன் ஒரு சாம்பிள் தான் இன்னும் இதுபோல பல சீன் வரப்போகுதுன்னு தமிழ் சினிமா பாத்து பழகின ஒரு குழந்தைக்கு கூட தெரிஞ்சுருக்கும் உங்களுக்கும் தெரிஞ்சுருச்சு தானே..? வாங்க அந்த ஐடியாக்களை பார்ப்போம்.
அந்த ஐடியாக்களை பார்க்கறதுக்கு முன்ன சந்தானம் குழந்தையா இருக்கும் போதே எவ்வளவு ஹியூமர் சென்ஸ் உள்ளவர்னு காமிக்க ஒரு சாம்பிள் சீன் பார்த்துருவோம்.
அவர் உக்காந்து டிராயிங் போட்டு இருப்பாரு. அவர் அப்பா 'என்ன வரையற..?'ன்னு கேட்பாரு.

சந்தானம் 'குரங்கு படம் வரையறேன் இதோ இந்த அங்கிள் (ஆனந்த்ராஜ்) முகத்தை பார்த்து தான் வரைஞ்சேன்..' ன்னு அடிச்ச ஜோக்குக்கு எங்க பக்கத்து வீட்ல இருந்து எல்லாம் வந்து சிரிச்சுட்டு போனாங்க..
சரி சிரிச்சது போதும், நம்ம குழந்தை சந்தானத்தோட அடுத்த பிரில்லியன்ட் ஐடியாவை பாப்போம் வாங்க
எதிர்பார்த்து போலவே பிஸ்கெட் பேக்டரி நஷ்டத்துல போக ஆரம்பிக்கும் பிஸ்கெட் பேக்டரியை க்ளோஸ் பண்ணிட்டு ஐஸ்க்ரீம் பேக்டரி ஆரம்பிக்கலாமான்னு ஆனந்த்ராஜ் கேட்பாரு..
நான் ஜஸ்க்ரீம் கேட்டா சளி புடிச்சுக்கும் இருமல் வரும்னு சொல்லி நீங்க வாங்கி தராத மாதிரி தானே எல்லா குழந்தைகளோட அப்பாக்களும் சொல்லுவாங்க அப்புறம் எப்படி ஐஸ் விக்கும்னு நம்ம ஐடியா குடோன் சந்தானம் கேட்க வழக்கம் போல எல்லாரும் அசந்து போயி மறுபடியும் சந்தானத்தை பாராட்ட ஆரம்பிக்க..
இப்ப பிஸினஸை சரி செய்ய சந்தானம் என்ன ஐடியா தரப்போறார்னு தெரிஞ்சுக்க எல்லாரும் ஆர்வமா இருக்கீங்க.. அப்படித்தானே ? ஐடியா ரெடி !
வழக்கமா போடற மாதிரி ரவுண்டு ரவுண்டா பிஸ்கெட் போடாம கழுகு காக்கான்னு பறவை ஷேப்ல போட்டா குழந்தைகளுக்கு புடிக்கும்னு உலக பிஸ்கெட் வரலாற்றில் முதல்முறையா யாருமே முயற்சிக்காத புதுமையான ஐடியா ஒன்னு தருவாரு அவங்களும் அதை பாராட்டி சீராட்டி பாலோ பண்ணி பேக்டரி பெரிய லெவல்ல டெவலப் ஆயிரும்..
அடுத்து நம்ம எல்லாம் எதிர்பார்த்த மாதிரியே சந்தானத்தோட அப்பா ஒரு நாள் தலைசுத்தி விழுவாரு. செக் பண்ணா ஹைப்பர் டென்சன். அடுத்து ஒரு நாள் தூங்கப்போறதுக்கு முன்ன சந்தானத்துக்கு குட்டி கதை ஒன்னு சொல்வாரு.
ஒரு குட்டி கொசு அதோட அம்மா கொசு கிட்ட போயி அம்மா அம்மா என்னை பார்த்தா மனுசங்க எல்லாம் சந்தோசமா கை தட்டி வரவேற்கறாங்கன்னு சொல்லுச்சாம் அதுக்கு அம்மா கொசு அவங்க நம்மளை வரவேற்கலை அடிச்சு கொல்ல தான் டிரை பண்றாங்கன்னு சொல்லுச்சாம்

நீங்க நம்பலேன்னாலும் இதான் அந்த கதை.
இது போல நீயும் எல்லாம் கிட்டயும் ஜாக்கிரதையா இருக்கனும் இல்லேன்னா ஏமாத்திருவாங்கன்னு சொல்லுவாரு..
இதை கேட்டு வெடிச்சது நம்ம கொசுவோட இதயம் மட்டுமில்ல அந்த கு..கு..கு..குட்டி சந்தானத்தோட அப்பாவோட நெஞ்சுந்தான்.. ஆமா அவர் சொன்ன கதையை கேட்டு அன்னைக்கு நைட்டு அவருக்கே ஹார்ட் அட்டாக் வந்துரும்.
இந்த கதையை கேட்டு சந்தானத்துக்கு என்ன புரிஞ்சுதோ தெரியல ஆனா நமக்கு ரெண்டு விஷயம் தெளிவா புரியும்.
1. சந்தானத்தோட அப்பா அன்னைக்கு நைட்டே சாகப்போறாரு
2. சந்தானத்தை யாரோ ஏமாத்த போறாங்க
கட் பண்ணா ரெண்டும் நடந்துருக்கும்.
அப்பா சாக, ஆனந்த்ராஜ் பேக்டரியை தனக்கு சொந்தமாக்கிட்டு சந்தானத்தை ஒரு சாதாரண லேபரா அதே பேக்டரிலயே வேலைக்கு வைச்சுருப்பாரு..
இவ்வளவு நேரம் பிளாக்&ஓயிட்ல நகர்ந்த கதை இப்ப கலருக்கு மாறும் அதாவது சந்தானம் பெரியவனா வளர்ந்துட்டாரு.

புதுமையா யோசிச்சுருக்காங்களாம்..
சந்தானம் சின்ன வயசுலயே அப்படி இப்ப பெரியவனாகியாச்சு பேக்டரியை டெவலப் பண்ண என்ன எல்லாம் (மூட்டபூச்சியை கொல்லும் நவீன டெக்னாலஜி) ஐடியா தர்றார்னு பார்ப்போம் வாங்க..
ஏதோ சின்ன கோளாறு சரி பண்ணாம புது மெசின் வாங்கவும் மெசின் வர்ற வரை பேக்டரிக்கு லீவும் விடவும் தத்தி மேனேஜர் முடிவு பண்ண சந்தானம் பாய்ஞ்சு போயி (போற வழில இன்னும் ரெண்டு சின்ன சின்ன மெசின்ல வருங்காலத்துல வர இருந்த கோளாறை எல்லாம் on the way ல சரி பண்ணிட்டே வேற போவாரு)..
அந்த மெசினை சரி பண்ணி பேக்டரிக்கு வர இருந்த மிகப்பெரிய நஷ்டத்தை சரி பண்ணுவாரு.
இதுபோக ஓய்வு நேரத்துல ஒரு முதியோர் இல்லத்துக்கு தன்னாலான உதவி எல்லாம் செஞ்சு ஆதர்ச இளைஞனா வலம் வர்றாரு. அந்த இல்லத்துக்கு ஒருநாள் சௌகார் ஜானகி வந்து சேர்றாங்க. அவங்களுக்கு ஒரு விசித்திர சக்தி இருக்கு. ஒரு கதை சொன்னா அதுல வர்றதெல்லாம் நிஜத்துல நடக்கும்.
இதை ஒரு சாக்கா வைச்சுட்டு பாகுபலி டைட்டானிக்னு பழைய பட பாணில பாதி படம் பிளேடு போடுவானுக. அதெல்லாம் திட்ட கூட முடியாது அவ்வளவு மொக்கையா போகும்.
வழக்கமா சத்யராஜ் தான் சின்ன குழந்தைக்கு கூட புரியற மாதிரி ஈசியான ஒரு கேரக்டர்ல நடிச்சுட்டு என் கேரக்டரையே புரிஞ்சிக்க மாட்டேங்கறீங்களேன்னு தேவையில்லாம பில்டப் குடுப்பாப்ல இதுல ஆனந்த்ராஜ் கேரக்டரை நிஜமாவே புரிஞ்சுக்க முடியாது
பிரண்டு செத்ததும் ஏமாத்தி பேக்டரி முதலாளி ஆகிட்டு பிரண்டு பையனை லேபரா வேலை வாங்கி கொடுமை பண்ணுவாப்ல ஆனா பிரண்டு செத்துட்டானேன்னு அப்பப்போ நினைச்சு நினைச்சு நிஜமா பீல் பண்ணுவாப்ல..
ஆனா இதுவரை பிஸ்கட் தொழிலில் முதல்முறையாக யாரும் தராத புதுமையான ஐடியாவா கம்பு ராகி மாதிரி சிறு தானியம் யூஸ் பண்ணி பிஸ்கட் தயாரிக்கலாம்னு சந்தானம் சொன்னதை கேட்டு அசந்து போயி சந்தானத்தை பேக்டரிக்கு மேனேஜர் ஆக்கிருவாப்ல..
இதை பார்த்து நமக்கு ஆனந்த்ராஜ் மேல கூட கோபம் வராது இவனெல்லாம் ஏமாத்தற அளவு ஏமாளியா ஒருத்தன் இருந்துருக்கானேன்னு செத்துப்போன சந்தானத்தோட அப்பா மேல தான் கோபம் வரும்..
நடுநடுவுல ஹீரோயின் கூட டூயட் பாடி கிளைமாக்ஸ் பைட் எல்லாம் போட்டு அனாதை ஆசிரமத்துக்கு பேக்டரி நிலத்தை காப்பாத்தி குடுத்து.. படம் ஒரு வழியா முடிஞ்சு.. 🙏
இவ்வளவு நீளமான விமர்சனம் தேவையான ஹேட்டர்ஸ் கேட்பாங்க கால்வாசி தான் சொன்னேன் அதுக்கே இவ்வளவு கோபம் வருதுன்னா முழு படமும் பார்த்த எனக்கு எப்படி இருக்கும் ? ரொம்ப பேசுனீங்கன்னா விமர்சனத்துக்கு செகண்ட் பார்ட் ரிலீஸ் பண்ணிருவேன் பீ கேர்புல்..
You can follow @GreeseDabba2.
Tip: mention @twtextapp on a Twitter thread with the keyword “unroll” to get a link to it.

Latest Threads Unrolled:

By continuing to use the site, you are consenting to the use of cookies as explained in our Cookie Policy to improve your experience.