#Thread #Shared @rajinikanth

ரஜினி பூத் கமிட்டி போட சொன்னாரே??

அப்படி என்றால் என்ன என்பது இங்கு பலருக்கு தெரியாது நம்மில் பல காவலர்களுக்கு தெரியாது..அவர்களுக்காக ஒரு சின்ன விளக்கம்.
நீங்கள் ஒட்டு போட சென்ற ஒரு பள்ளியின் ரூமிற்கு வெளியில் வட்டம் போட்டு ஒரு எண் எழுதப்பட்டிருக்கும். நம்முடைய ரூமிற்கு வெளியில் 114/146 என்ற எண் இருந்தது. இதில் 114 என்பது நம்முடைய சட்டமன்ற தொகுதி எண் 146 என்பது நம்முடைய பூத் எண் ஆகும்.பூத் எண்ணை பாகம் எண் என்றும் கூறுவார்கள்.
அந்த ரூமில் polling Agent என்று பேட்ஜ் அணிந்து ஒரு 4 அல்லது 6 பேர் இருப்பர்.அவர்கள் தான் அங்கீகரிப்பட்ட/பதிவு செய்யப்பட்ட கட்சிகளின் பூத் கமிட்டி ஏஜென்ட்..இவர்கள் பெரும்பாலும் திமுக/அதிமுக வை சேர்ந்தவர்கள் தான்.
அவசர அவசரமாக கட்சி ஆரம்பித்த கமலுக்கோ,தினகரனுக்கோ,சீமானுக்கோ ஒரு இடத்தில் கூட பூத் ஏஜெண்ட்கள் இல்லை..ஒரு கட்சிக்கு ஒரு பூத்துக்கு 2 பூத் ஏஜெண்ட்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர்..
நீங்கள் ஓட்டு போடும் முன் ஒரு அலுவலர் உங்கள் எண்ணை சத்தமாக சொல்லுவார். பூத் ஏஜென்ட் அந்த எண்ணை சரி பார்ப்பார்.சரியாக இருந்தால் மட்டுமே வாக்களிக்க முடியும்.பூத் ஏஜென்ட் எதிர்ப்பு தெரிவித்தால் வாக்களிக்க முடியாது.
சரி விஷயத்திற்கு வருவோம்..தலைவர் @rajinikanth
ஒவ்வொரு பூத்துக்கும் 30 நபர்களை சேர்க்க சொல்லி இருக்கிறார்.அதாவது ஒவ்வொரு ரூமிற்கு 30 பேர்.இரண்டு பேர் மட்டுமே அனுமதிக்கப்படும் ரூமிற்கு எதற்கு 30 பேர் என்று கேள்வி எழலாம்..
அது தான் ரஜினி செய்யப்போகும் மிகப்பெரிய அரசியல் புரட்சி.அதை பற்றி தற்போது கூற விரும்பவில்லை..சராசரியாக ஒவ்வொரு பள்ளியிலும் 10 முதல் 20 பூத் உள்ளன..ஒவ்வொரு பள்ளியிலும் நம்முடையடைய ஆட்கள் 300 முதல் 600 வரை இருக்கும்.
தமிழ்நாடு முழுவதும் 65000 பூத் உள்ளது.65000*30 பேர் என்றால் 1950000 பூத் கமிட்டி உறுப்பினர்கள்.இந்த 30 பேர் ஆளுக்கு 10 ஓட்டு சேகரித்தா கூட 300 ஒட்டு ஒவ்வொரு ரூமிற்கும் வரும்.இதில் 65000*300 என்றால் 1.95 கோடி வாக்குகள் ஆகும்.. தமிழகத்தில் மொத்தம் பதிவாகும் வாக்குகளே 4.5 கோடி தான்.
கிட்டத்தட்ட 40% வாக்குகளை குறிவைக்கிறார் தலைவர்..இதை தாண்டியும் கூட வாக்குகளை பெறலாம்.இதில் சரி பாதி குறைந்தால் கூட 1 கோடி வாக்குகள் வரும்.அதாவது 30% வாக்குகள் ஆகும்..தமிழகத்தில் 30% வாக்குகள் வாங்கினால் அதே வெற்றியை தேடி தரும்..
இந்த 65000 பூத்தில் நாம் ஏற்கனவே 85% பூத்களுக்கு 30 பேரை சேர்த்து விட்டோம்..மீதமுள்ள 15% பூத்களையும் விரைவில் முடித்து தலைவரின் கரங்களை வலுப்படுத்துவோம்🤘🤘

வெற்றி நமதே🤘🤘 @rajinikanth
You can follow @vishalshivah.
Tip: mention @twtextapp on a Twitter thread with the keyword “unroll” to get a link to it.

Latest Threads Unrolled:

By continuing to use the site, you are consenting to the use of cookies as explained in our Cookie Policy to improve your experience.