என்னை பாதித்த சம்பவம்..😔
.
நேற்று நள்ளிரவு ஒரு 2 மணி இருக்கும்.. வேலைய முடிச்சிட்டு சாப்ட கிளம்பி வந்தேன் .. வழக்கம் போல மொபைல் யுஷ் பண்ணிட்டு நடந்து வந்து ஒரு இடத்தில நின்னேன்..
அப்போ பக்கத்துல ஒரு பையன் என்னோட வயசு இருக்கும்.. அவனா பெருசா கண்டுக்கல..
மொபைல் அஹ் ஸ்குரோல் பண்ணிட்டு இருந்தேன் .. அப்போ அவன் கிட்ட வந்து என்னமோ சொன்னான் நா கவனிக்கல..
திரும்ப அண்ணன்னு கூப்ட்டான் நா திரும்பி பார்த்தேன் அப்போ தான் நல்ல கவனிச்சேன்..
நல்ல படிச்ச பையன் போல..
ஒரு பேக் மாட்டி இருந்தான்..
கைலா பட்டன் மொபைல் வச்சு இருந்தான்..
நா என்னய தம்பின்னு கேட்டேன்..
ரொம்ப குரல் தாழ்ந்து என்னமோ சொன்னான் சரியா கேக்கல..
என்ன தம்பின்னு மறுபடியும் கேட்டேன் அப்போ ஒரு 50 ரூபா இருக்குமான்னு னு கேட்டான்..
எனக்கு தூக்கி வாரி போட்ட மாதிரி இருந்துச்சு..
சரின்னு எதுக்கு பா தம்பிண்ணு கேட்டேன்.. அப்போ அவன் சொன்னான்...
அண்ணா நா காளையார்கோவில் லா இருந்து தினமும் இங்க தா சிம்மக்கல் லா ஒரு spare parts கடைக்கு வேலைக்கு வரேன் ..
வேலை முடிச்சு வீட்டுக்கு போக பைல 50 ரூபா வச்சு இருந்தேண்ணா அதா காணம்.. சாயங்காலம் 7 மணி லா இருந்து இங்க நிக்கிறேண்ணே யார் கிட்டயும் கேக்க கூச்சமா இருக்கு...
போன் வேர ஸ்விட்ச் ஆஃப் ஆய்டுச்சினு அந்த பட்டன் ஃபோன என்கிட்ட காமிச்சா.. ஒரு 50 ரூபா குடுங்கண்ணா நாளைக்கு இங்க உன்கல பாத்த திருப்பி தரேன்னு சொன்னான்... எனக்கு அந்த நிமிசம் மனசு லேசா வலிக்க ஆரம்பித்தது.. கிட்ட தட்ட ஒரு 8 வருசம் முன்னாடி வேலை செஞ்ச காசு வெறும் 200 ரூபாய்காக......
காலைல 9 மணில இருந்து சாயங்காலம் 6 மணி வரைக்கும் ஒரே இடத்தில பசியோடு காத்திருந்த என்னை நானே பாத்த மாதிரி இருந்துச்சு..
அடுத்த நிமிசம் யோசிக்கவே இல்ல பைல இருந்து ஒரு 100 ரூபாய குடுத்து போய்ட்டு வாடன்னு சொன்னேன்... அவன் வேனாம்ன்னா 50 போதும் னு சொன்னான்.....
என்கிட்டயும் 50 ரூபா தாள் இல்லடா தம்பி.. சும்மா வச்சுக்கோனு சொல்லி பத்திரமா போய்ட்டு வான்னு சொன்னேன்...
பாவம் கை நடுங்கி கிட்டே தயங்கி தயங்கி வாங்கினான்.. வாங்கிட்டு ரொம்ப நன்றின்னான்னு தமிழ் ல சொன்னான்... உங்கள மறக்கவே மாட்டேன் அன்னன்னு சொல்லி கையா பிடிச்சு கிட்டான்...
பாவம் கிறங்கி போய் கண்ணு எல்லாம் உள்ள போய் , கண் கலங்காத குறையா எம் முன்னாடி நின்னான்... சரிடா தம்பி இருக்கட்டும் டா னு சொல்லி வழி அனுப்பி விட்டேன்.. அவனும் போய் பஸ் லா ஏறிடான் அப்போ என்ன திரும்பி பார்த்து கை அசைசான்.. அவன் கண்ணுல அப்படி ஒரு உண்மை...
பஸ் போனதும் நானா நெனச்சு பார்த்தேன்... என்னடா வாழ்க்கை இதுன்னு.. மூணு வேளை சாப்பாட்டுக்காக வும் , தன்மானத்துக்காகவும் ஒரு மனுஷன் எவ்ளோ எல்லாம் கஷ்ட பட வேண்டி இருக்குன்னு..😔
இவளோ பேசுனா நா அவன் சாப்ட்டானான்னு கேக்க மறந்துட்டேன்.. ரொம்ப வருத்தமா இருந்துச்சு...
நம்ம நிம்மதியா ,கஷ்டமில்லாம இருக்கோம் னு இவளோ நாள நெனச்சிட்டு இருந்தேன்.. ஆன நம்மள சுத்தி பல பேருக்கு பல வித கஷ்டம் இருக்கும்ன்னு இப்போ தான் தெரிஞ்சுகிட்டேன்..😔😔
.
ஆன இப்போ இருக்குற மன நிலை லா என்ன சொல்றதுன்னு தெரியல.. அந்த பையன் நெனப்பா வே இருக்கு..😔
இன்னிக்கு நா அவனுக்கு உதவி செஞ்சேன்.. அதுக்கு காரணம் அன்னிக்கு என்ன ஒருத்தன் இதே நிலமை லா நிக்க வச்சது தா..
அவன் எனக்கு பண்ணாத தப்பி தவறி கூட நா இவனுக்கு செய்ய கூடாதுன்னு நெனச்சேன்..
.
ஒன்னு மட்டும் உண்மை..
"கொடுமையிலும் கொடுமை இளமையில் வறுமை"
இத கடந்து வரணும்..
அதுக்கு அவமானங்களை தாங்குற மனபக்குவமும் , பசியை தாங்குறா வலிமையும் வேணும்...
.
.
.
இவன் உங்கள் பொன்னியின் செல்வன்..😔🙏
You can follow @RajVijayDhoni.
Tip: mention @twtextapp on a Twitter thread with the keyword “unroll” to get a link to it.

Latest Threads Unrolled:

By continuing to use the site, you are consenting to the use of cookies as explained in our Cookie Policy to improve your experience.