நில அளவீடு

435.6 சதுர அடி = 1 சென்ட்

2400 சதுர அடி = 5.5 சென்ட் = 1 கிரவுண்ட்

100 சென்ட் = 1 ஏக்கர்

2.47 ஏக்கர் = 1 ஹெக்டேர்

முக்கியமான பகுதிகளில் சதுர அடி (Square Feet) சார்ந்து விலை இருக்கும்

சராசரி பகுதிகளில் சென்ட், கிரவுண்ட், ஏக்கர் சார்ந்து விலை இருக்கும்
எந்த ஒரு சொத்திலும் வில்லங்கம் இருக்கிறதா இல்லையா என்பதை அறிய வில்லங்க சான்றிதழ் (Encumbrance Certificate) நமக்கு உதவும்.

சொத்தின் மதிப்பு, சொத்தை எழுதிக்கொடுப்பவர், எழுதி வாங்கியவர், பதிவு செய்யப்பட்ட ஆண்டு, பதிவு எண் போன்ற விவரங்களை இதன் மூலம் அறியலாம்.
2009 இல் தான் பவர் ஆப் அட்டர்னி பதிவு செய்யும் முறை சட்டபூர்வமானது. அவ்வகையில் பழைய பவர் ஆப் அட்டர்னி விவரங்களை EC மூலம் அறிய இயலாது ஏனெனில் நாட்டில் நடக்கும் பல்வேறு நில மோசடிகளுக்கு பவர் ஆப் அட்டர்னி முறை முக்கிய பங்கு வகிக்கிறது.
சொத்தை வாங்குவதற்கும் சொத்தை நிர்வகிப்பதற்கும் கொடுக்கப்படுவது பவர் அதிகாரம். சொத்தை விற்பனை செய்வதற்கு, விற்பனை "ஒப்பந்தம்" போடுவதற்கு என்று பல வகை பவர் உண்டு. பவர் எழுதி கொடுத்தவரே அதனை ரத்து செய்யும் அதிகாரமும் உள்ளது அதனால் பவர் சொத்தை வாங்குவதற்கு தனி கவனம் செலுத்த வேண்டும்.
இந்தியாவில் சொத்து சேர்ப்பது கடமையாகி போனது. ஒருவருக்கு ஒரு வீடு பாலிசியை தாண்டி நில முதலீடு இங்கே அதிகம் அதனால் தான் நில விலையும் நில வில்லங்கமும் இந்தியாவில் அதிகமாக உள்ளது. ஒழுங்குபடுத்தப்பட்ட துறையாக நிலத் துறை காட்சி அளித்தாலும் இந்தியாவில் நிலத் துறை UNORGANIZED தான்.
பல்வேறு வெளிநாடுகளில் தனி நபர் சொத்து என்பது சாதாரண விடயம் மேலும் அங்கே பொருளாதாரத்தின் விகிதாசார அடிப்படையில் சொத்துக்கள் விலையும் குறைவே. ஆனால் இந்தியாவில் பல கோடி மக்களுக்கு இன்னும் ஒரே ஒரு சொந்த வீடு என்பது பகல் கனவாகவே உள்ளது காரணம் அவ்வளவு விலை ஏறி இருக்கிறது.
You can follow @chockshandle.
Tip: mention @twtextapp on a Twitter thread with the keyword “unroll” to get a link to it.

Latest Threads Unrolled:

By continuing to use the site, you are consenting to the use of cookies as explained in our Cookie Policy to improve your experience.