இந்த த்ரெட்ல, "நாவல் vs நாவலை தழுவி எடுக்கப்பட்ட திரைப்படங்கள்" பற்றி பார்க்கலாம். திரைப்படத்தின் வெற்றி, 'நாவல் எவ்வளவு சுவாரஸ்யமாக திரைக்கதை ஆக்கப்பட்டுள்ளது' என்பதில்தான் இருக்கு. தமிழ் சினிமாவில் தற்பொழுது ஏற்பட்டிருக்கும் கதை வெற்றிடத்தை, நாவல்களால் தீர்க்க முடியும்.
பி.எச்.டேனியலின் 'Red Tea' நாவல் 'எரியும் பனிக்காடு' என இரா. முருகவேளினால் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. அதை அடிப்படையாக வைத்து திரைக்கதை அமைக்கப்பட்டதே பாலாவின் 'பரதேசி' திரைப்படம்.
சு.வெங்கடேசனின் 'காவல் கோட்டம்' நாவல், காவல் மற்றும் களவில் ஈடுபட்ட மக்களின் வாழ்வியலை விபரிக்கிறது. அதில் வரும் சிறு பகுதியான சின்னானின் வாழ்க்கைதான் 'அரவான்' திரைப்படம்.
ராஜேஷ்குமாரின் 'எண்ணி எட்டாவது நாள்!' நாவல் அறிவழகனின் இயக்கத்தில் 'குற்றம் 23' என திரைப்படமாக்கப்பட்டது.
உமாசந்திரன் எழுதிய "முள்ளும் மலரும்" நாவல் அதே பெயரில் இயக்குனர் மகேந்திரனால், ரஜனியின் நடிப்பில் திரைப்படமாக்கப்பட்டது. படத்தின் கிளைமாக்ஸ் நாவலில் இருப்பது போல் இல்லாமல் இயக்குனர் மாற்றி அமைதிருப்பார்.
சுபா எழுதிய 'யட்சன்' நவலைத்தான் விஷ்ணு வர்தன் படமாக்கியிருப்பார்.'யட்சன்' நாவலில் ஹீரோ ரஜனி ரசிகனாக இருப்பார், அதை படத்தில் அஜித் ரசிகனாக மாற்றியிருப்பார்கள்.
நாவல் நல்ல விறுவிறுப்பாக ஜெட் வேகத்தில் பயணிக்கும்.
நாவல் நல்ல விறுவிறுப்பாக ஜெட் வேகத்தில் பயணிக்கும்.
கமலஹாசன் எழுதிய 'தாயம்' தொடர்கதையையே பின்னாளில் திரைக்கதை அமைத்து 'ஆளவந்தான்' என்று திரைப்படமாக்கியிருப்பார்கள். இதில் வரும் animated சண்டை காட்சிகள்தான் 'Kill bill' படத்தின் சண்டை காட்சிக்களுக்கு inspiration என Quentin Tarantino ஒரு பேட்டியில் சொல்லி இருப்பார்.
சுஜாதாவின் பல நாவல்கள் திரைப்படமாக்கப்பட்டுள்ளன. ஆனாலும் அவரின் நாவல்கள் திரைக்கதையாக்கப்பட்ட முறையில் சுஜாதாக்கு அதிர்ப்தி என பல பேட்டிகளில் கூறியுள்ளார்.
ஜேம்ஸ் பாண்ட் பாணியில் ஒரு raw அதிகாரியின் ஆக்சன் பட்டாசுதான் 'விக்ரம்'. இந்த நாவலை கமலும் ,சுஜாதாவும் இணைந்து திரைக்கதையாக்கி இருக்கிறார்கள்.
'பிரிவோம் சந்திப்போம்' என்ற நாவலே 'ஆனந்த தாண்டவம்'. காதலியுடன் பிரிவுடன் சுஜாதா நாவலை முடித்திருப்பார். நாவலுக்கு கிடைத்த வாசகர்களின் வரவேற்பினால் , இருவரும் அமெரிக்காவில் மீண்டும் சந்திப்பதாக இரண்டாம் பாகம் எழுதினார்.
'ஜன்னல் மலர்' குறுநாவல் 'யாருக்கு யார் காவல்' என்று படமாக்கப்பட்டிருக்கு. இந்த நாவலின் தாக்கம் கார்த்திக் சுப்புராஜின் 'இறைவி' படத்திலும் காணமுடியும்.
மண்டைக்குள் குரல் ஒன்று கதாநாயகனை துரத்துகிறது, குடைச்சல் கொடுக்கிறது. அவன் அதற்கான காரணங்களை தேடி செல்கிறான்.
ஒரு தம்பதியர், சில சம்பவங்கள். மனைவி கற்பழிக்கப்படுகிறாள். அதன் பின்னரான மனபோராட்டங்களை நாவல் பேசுகிறது. அதுவே 'வானம் வசப்படும்' என படமாக்கபட்டது.
மு.சந்திரகுமாரின் 'லாக்கப்' நாவல்தான் 'விசாரணை' ஆனது. இது சந்திரகுமாரின் லாக்கப் அனுபவங்களை பேசுகிறது. வெற்றிமாறன் திரைக்கதையில் சில மாற்றங்களை செய்து மேலும் சுவாரஸ்யம் ஆக்கியிருப்பார்.