1.மனுவும், மஹாபாரதமும் கூடா உறவை ஏற்கிறதா?

மனுவும்,  மஹாபாரதமும் கூடா உறவை ஏற்கிறதா?

வாட்ஸாப்பில் வந்த கேள்வி இது ..

     ஆண்பிள்ளை இல்லாமல் ஒரு குலம் நசிந்துபோனால் அப்போது அந்த பெண் மாமனார் மாமியார் உத்தரவு பெற்றுக்கொண்டு தனது மைத்துனர் அல்லது தனது கணவனுக்கு ஏழு
2.தலைமுறைக்குட்பட்ட பங்காளிகளுடன் புணர்ந்து ஒரு பிள்ளையை பெற்றுக் கொள்ளவேண்டும். என்று மனு அத்தியாயம் 9 சாஸ்திரம் 58 - 60 கூறுகிறது.

     இப்படி ஆபாச வக்கிரங்களை கூறும் ஹிந்துமதத்தினை திட்டாமல் என்ன சொல்ல என்று கேள்வி முடிகிறது இதைப்போன்று மேலும் சில கேள்விகள்...இதற்கு பதில்
3.என்ன?
 மனு அத்தியாயம் 9 ஸ்லோகம் 57 முதல் 68 வரை உள்ள ஸ்லோகங்களையும் பார்த்தால் மனு சொல்லுவது என்ன என்று விளங்கும் அது இல்லாமல் ஒன்று இரண்டு ஸ்லோகத்தினை மட்டும் சொல்லுவது ஏமாற்று வேலை.

     58 , 59 ஸ்லோகங்களை எடுத்துக்காட்டி இழிவு செய்பவர்கள் அதற்கு
4.முதல் ஸ்லோகமான 57 என்ன சொல்கிறது என்று பார்க்கவேண்டும் . மேலும் 57 ஸ்லோகக்துக்கு மேல் அந்த பகுதி ஸ்லோகங்களுக்கு கொடுத்துள்ள தலைப்பான “மாதர்கள் ஆபத் தருமம்”. என்பதை வசதியாக மறைக்கின்றனர்.

     மகாபாரதத்தில் ஆதிபர்வத்தில் 114 அத்தியாயம் முதல் விசித்ரவீரியன் மனைவிகளிடம்
5.வியாசர் மூலம் குழந்தை பேறு உண்டாக்க சொல்லியதும் பின் அதன்படி நடந்தவைகளும் வருகின்றன.

     ஆட்சி செய்ய வாரிசு இல்லாமல் அரசன் இறந்து ராணி விதவையாகி,, அரச குடும்பத்தில் வாரிசு இன்றி போனால் இந்த ஏற்பாடு நடப்பது ஆபத் கால தர்மம். நாட்டை ஆள்வது யார்? என்ற கேள்வி எழும்
6.மேலும் நாடும் மக்களும் தலைவனில்லாது ஆட்சியில் குழப்பம் ஏற்படும் என்ற ஆபத்தான சூழலில் இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

     அதுவும் வேதம் நன்கு கற்ற உடல் பற்றினை நீக்கியவர்கள் மூலம்தான் இந்த ஏற்பாடு புத்திர உற்பத்தி நடைபெற்றுள்ளது. அதன் பிறகு அந்த பெண்ணுடனோ அல்லது அந்த
7.குழந்தையிடமோ குழந்தையை உண்டாக்க காரணமானவர் எந்த தொடர்பும் கொள்வதில்லை, கொள்ளக் கூடாது என்பது சாஸ்திர விதி என்பதையும் கருத்தில் கொள்ளவேண்டும்.

      ஸ்ரீவியாசருடன் கூடி பிள்ளை பேறு உண்டாக்கிய அம்பிகை (கௌசல்யை), அம்பாலிகை, கௌசல்யையின் தாதி (பணிப்பெண்) இவர்கள் மூவருடனோ அல்லது
8.இவர்கள் மூலம் முறையே பெற்ற  திருத்தராஷ்ட்ரான், பாண்டு, விதுரர் என்ற மூன்று பிள்ளைகளைகளுடனோ எந்த பந்தமும் பாசமும் தனது பிள்ளை, என்று உரிமையை ஸ்ரீவியாசர் கொண்டாடியதில்லை. வியாசரிடம், அவர்களும் கணவன், தந்தை என்ற உறவு கொல்லவில்லை..

     நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும்
9.ஆபத் காலத்தில்  செய்யப்பட்ட ஏற்பாடு இது.

     மனு 9-6 என்ன சொல்கிறது விதவையிடம் பெரியோர்கள் அனுமதி பெற்று புணர்ந்து ஒரு பிள்ளைக்கு மேல் பெற்றுக்கொள்ளக் கூடாது என்கிறது. அப்படி எண்ணம் உண்டானால் அது ஆபத்துகாலத்தில் செய்யப்படும் ஏற்பாடு என்பதை தாண்டி காம
10.ஆசையினால் உண்டானது என்று ஆகும். எனவேதான் மனு இரண்டாவது முறை கூடுவது கூடாது என்கிறது.

     ஒருவேளை முதலாவதாக பிறந்த அந்த பிள்ளை ஆட்சி செய்ய இயலாதவனாக பிறந்தால் இரண்டாவது முறை கூடலாம் என்கிறது மனு 9-61 , மஹாபாரதத்தில் அம்பிகையை கூடும்போது வியாசர் அழகுடன் அலங்காரத்துடன் வரவில்லை
11.அப்படி வந்திருந்தால் அது காம உணர்வாகியிருக்கும். அவரது தவக்கோலத்து நீள் சடை, தாடி, செந்நிற முடி இவற்றினை கண்ட அம்பிகை புணர்ச்சியின் போது கண்ணை மூடிக்கொண்டதால்  திருதராஷ்ட்ரன் ஆயிரம் யானை பலம் கொண்டவானாக இருந்தும் கண் பார்வையற்ற அரசாட்சி செய்ய இயலாதவனாக பிறந்தான்.
12.அம்பாலிகையுடன் வியாசர் கூடியபோது அவரது தவக்கோலம் கண்டு பயந்த அம்பாலிகை பயத்தால் உடல் வெளுத்ததால் பாண்டு உடல் வெளுத்து பிறந்தான்.

     முதல் குழந்தை குருடனாக பிறந்ததால் மீண்டும் இரண்டாவது முறை அம்பிகையை கூட வியாசர் அழைக்கப்பட அம்பிகையோ தனது
13.வேலைக்கார பெண்ணை மாற்றி அனுப்புகிறாள். வேலைக்காரப்பெண்ணோ வியாசரை பூஜித்து உடன்பட விதுரர் பிறக்கிறார். ஆனாலும் அரச வம்ஸத்து பெண்ணுக்கு பிறக்காததால் அவர் அரசாள முடியவில்லை.

      தன்னுடன் கூடி பிள்ளைப் பெற்ற அந்த விதவைப் பெண்ணை தனது மருமகளைப் போல் நடத்தவேண்டும் என்றும்
14.அந்த விதவைப் பெண் அந்த ஆணை தனது குரு போல எண்ண வேண்டும் என்கிறது (மனு 9- 62,)
  
     அப்படி ஆபத்துக் காலத்தில் கூடும்போதுகூட உடலில் ஆண் நெய் தடவிக்கொண்டுதான் வரவேண்டும். இரு உடலும் சேர்வதால் உண்டாகும் இன்பம் என்றுகூட சொல்லமுடியாத அளவு ஏற்பாடு உள்ளது.
15.ஆபத் காலமல்லாத பொது காலங்களில் விதவை பெண் மற்ற ஆணுடன் காமத்தால் கூடக்கூடாது என்றும் அப்படி செய்வது குருவின் மனைவியுடன் கூடுவதைப் போன்றும், மருமகளுடன் கூடுவதும் போன்றது என்றும் கடுமையாக கண்டிக்கிறது மனு (மனு 9 -63). 

     .மேலும் இந்த ஆபத் கால தர்மம் என்பது
16.கலியுகத்துக்கு பொருந்தாது என்கிறது மனு 9-64.

     எந்த வேதத்திலும் புத்திரன் இல்லாமல் போனால் கணவன் இல்லாத மற்றொரு ஆணுடன் கூடுவது சரி என்று திருமண மந்திரத்தில் சொல்லவில்லை என்கிறது மனு 9-65

     சாஸ்திரமிருக்கிறது என்று சொல்லி ஆபத் காலமல்லாத காலத்தில்  கூடினால் அதுவும்
17..கலியுகங்களில் கூடினால் அவனை பெரியோர்கள் நிந்திக்கிறார்கள். மனு 9-68.

     மனு ஸிம்ருதியில் 12 அத்தியாயங்கள் 2684 ஸ்லோகங்கள் உள்ளன இதில் ஓரிரு ஸ்லோகங்களை எடுத்து காட்டி ஹிந்து மதத்தின் மீது ஆபாசங்களை அள்ளி வீச முனைவது வேடிக்கை.
18.மனுவில் உள்ள மேலும் பல ஸ்லோகங்களை மேற்கோள் காட்டினால்  இதில் ஆபாசம் உண்டா என்று காட்டமுடியுமா?

   மனிதனானவன் பிற தாரத்தினை (பிறன்மனைவியை) விரும்பாமல் தன் மனைவியிடம் மட்டுமே அன்புள்ளவனாய் வாழவேண்டும், என்று ஒழுக்கத்தினை ஆணுக்கு சொல்கிறது மனு 2-45 & 4-134
19.மனைவி பணிவிடை செய்பவளாகவும், கணவன் பிற பெண்களை எண்ணாதவனாகவும், மனைவியின் மீது அன்புடையவனாகவும்,  மனைவியானவள் பிற ஆண்களை எண்ணாதவளாகவும் இருக்கும் வீட்டில் குலத்தில் இன்பம் பொங்கும். மனு  2-60  

     .
20.கற்பு என்பது முட்டாள்தனம் என்று சொன்ன மாண்பு இல்லாத ஈவேராயிஸ்டுகள் மனுவை தூற்றுவதும் ஆபாச விளக்கம் அளிப்பதும் இயல்புதான்
You can follow @malathyj1508.
Tip: mention @twtextapp on a Twitter thread with the keyword “unroll” to get a link to it.

Latest Threads Unrolled:

By continuing to use the site, you are consenting to the use of cookies as explained in our Cookie Policy to improve your experience.