நியா நானா சாதியை பற்றியான வீடியோவை பார்த்து
அதில் சாதிய பற்று கொண்டு பேசும் நபர்களை இங்கு கலாய்ப்பது,மீம் போடுவது என நம் செய்வதால் அவர்களுக்கு மேலும் அந்த சாதி பற்று,வெறி அதிகமாக தான் செய்யுமே தவிர அதில் இருந்து அவர்கள் வெளியில் வரமாட்டார்கள்
ஆனால் ஒன்று செய்யலாம்
1/n thread
ஒருமணி நேர நிகழ்ச்சியில் அவர்களுக்குள் எந்த மாற்றமும் வந்திருக்காது
மாறாக அவமானத்தால் கூடுதல் வெறி தான் வந்திருக்கும்
அது அவர்கள் மீது தவறே கிடையாது
பள்ளியில் இருந்து இந்த சாதியும் ,இடஒதுக்கீடு பொய் பரப்புரையும் சொல்லி சொல்லி ஒரு சாதி மீதான பொய்யான பின்பம்
அவர்கள் மீது கொஞ்சம் கொஞ்சமாக திணிக்கப்பட்டு வளர்கிறார்கள்
ஒரு கிராமம்னு எடுத்துட்டா அங்க சாதி சாதியா தான் பிரிஞ்சு வீடுகளே இருக்கும் அப்படி சூழ்நிலையில அவன் அந்த சாதிய விட்டு அவனால வளர்ந்துருக்கவே முடியாது
நம்ம வெளிய வந்துட்டோம் நமக்கு கொஞ்சம் விவரம் தெரிஞ்சுடுச்சு
அதனால அவன ஒரு மீம் டெம்லெட்டா வச்சு ஓட்டுவோம்னு நினைக்கிறத விடனும்
ஏனா நம்மலும் ஒரு காலத்துல அப்டி தான் இருந்திருப்போம்
நானும் அப்படி தான் இருந்தேன்
சாதிய சொல்லியே திட்டிருக்கேன்
வெளிய வந்த பிறகு தான் இந்த சாதிய வச்சு ஓசில ஒரு டீ கூட குடிக்க முடியாதுனு தெரிஞ்சது
இப்படி பட்ட சூழல்ல இன்னும் நிறைய பேர் வளர்ந்துட்டு தான் இருக்காங்க
ஒருத்தன் சொன்னான் சாதி ரத்ததுல ஓடுதுனு
அவன் 5வது படிக்கிற வர சாதிய பத்தி ஒன்னும் தெரிஞ்சுருக்காது
சாதியம் தெருவுல உள்ள வெட்டி பயலுகளால ஊட்ட படுது அத உணரலனா இவன் நாளைக்கு இன்னொருத்தனுக்கு கடத்துவான்
இப்படி பட்ட பரிதாபமான இந்த மக்கள கலாய்காம அவங்க கிட்ட முடுஞ்ச அளவு பேசுங்க புரிய வையுங்க இப்ப இல்லனாலும் எப்பவாது இத உணருவான் மாறுவானு நம்புவோம்

குண்டாஞ் சட்டிகுள்ள குதிர ஓட்டாதிங்கடா அதனால ஒன்னு ஆகாது அப்புறம் கடைசிவர நாளு காவாலி பயலுக கூடதான் சுத்தனும்னு
அடிக்கடி எங்க வரலாறு ஆசிரியர் சொல்லுவாரு வெளில போ நாளு பேரோட பேசு பழகு அப்ப தான் நீ யார்னு உனக்கு தெரியும்னு

அதுமாதிரி இதுமாதிரி பசங்கள மாற்ற பாருங்க அதவிட்டு மீம் போட்டு கலாய்கிறதால அவங்க மாற போறது இல்ல

N/N - end
You can follow @Learnedpolitics.
Tip: mention @twtextapp on a Twitter thread with the keyword “unroll” to get a link to it.

Latest Threads Unrolled:

By continuing to use the site, you are consenting to the use of cookies as explained in our Cookie Policy to improve your experience.