#Thread
*ஆஸ்திரேலியா அருகே உள்ள குட்டி தீவு நவ்ரு (Nauru).*

ஜனத்தொகை 10,000 மட்டுமே.

தீவின் நீளம் ஐந்து கிமீ,
அகலம் மூன்று கிமீ.

30 நிமிடத்தில் சுற்றிவரக்கூடிய நாடு

மீன்பிடித்தல், விவசாயம் என மகிழ்ச்சியாக சென்று கொண்டிருந்த நாட்டுக்கு சனியன் பிடித்தது..1/10
ஆம்...
தீவில் லட்சகணக்கான ஆண்டுகளாக பறவைகள் எச்சமிட்டு எச்சமிட்டு
அவை முழுக்க பாஸ்பேட் (Phosphate) எனும் கனிமத் தாதுப் பொருளாக மாறியிருந்தன.

பாஸ்பேட் சர்வதேச சந்தையில் ஏராளமான விலைக்கு போகும் பொருள்.

தீவில் கணக்கு, வழக்கற்ற அளவில் பாஸ்பேட் இருந்தது.2/10
அதன்பின் பன்னாட்டு கம்பனிகள்
வந்து இறங்கின.

பாஸ்பேட்டை வெட்டி எடுத்தன.

அரசுக்கு ஏராளமான வருமானம் வந்தது.

ஒரு கட்டத்தில் 10,000 பேர் மட்டுமே உள்ள நாட்டின் அரசிடம் 170 கோடி டாலர்கள் இருந்தன.

கணக்குபோட்டால் நபர் ஒருவருக்கு ஒன்றரை லட்சம் டாலர். 3/10
அதாவது நால்வர் அடங்கிய குடும்பத்துக்கு தலா 1 கோடி ரூபாய்களை அரசால் கொடுத்திருக்க முடியும்.

ஆனால்
அந்த பணத்தை என்ன செய்தார்கள்?

எல்லாருக்கும் இலவசமாக உணவு,
டிவி, எலெக்ட்ரானிக்ஸ் என வாங்கி கொடுத்தார்கள்.

அரசின் சார்பில் விமான கம்பனிகளை துவக்கினார்கள்.4/10
ஹவாயி, நியூயார்க், சிங்கபூருக்கு எல்லாம் அரசின் சார்பில் இலவச விமானங்கள் பறந்தன.

ஒரு நபருக்காக விமானம் சிங்கப்பூர் போன கதை எல்லாம் உண்டு.

போர் அடித்தால் மக்கள் டோக்கியோ போய் காபி குடித்துவிட்டு வருவார்கள்.

ஆளே இல்லாத ஓட்டலில் ஐந்து மில்லியன் டாலர் செலவு செய்து,5/10
கலைநிகழ்ச்சிகள் நடத்தினார்கள்.

சுமார் பதினைந்து வருடம் உலகின் ஆடம்பரங்கள் அனைத்திலும் திளைத்து வாழ்ந்தார்கள்.

அதன்பின் திடீர் என
ஒருநாள் பாஸ்பேட் தீர்ந்துவிட்டது.

கம்பனிகள் விடைபெற்றார்கள்.

அரசின் வருமானம் நின்றது...

விமானங்கள் நின்ற நாடுகளில் எல்லாம் கட்டணபாக்கி,6/10
சம்பளபாக்கி என விமானங்களை பறிமுதல் செய்தார்கள்.

மக்கள் உழைக்க முடியாத வண்ணம்
மிக குண்டாக இருந்தார்கள்...

*இளைய தலைமுறைக்கு விவசாயம், மீன்பிடி என்றால் என்னவென்றே தெரியவில்லை.*

*பாஸ்பேட் சுரண்டப் பட்டதால் மண்ணும் விவசாயத்துக்கு தகுதியற்றதாக மாறிவிட்டிருந்தது.*7/10
அதன்பின் வாழ்க்கை தரத்தை தக்க வைத்துக் கொள்ள அரசு தன் நாட்டு குடியுரிமையை மற்ற நாட்டுக் காரர்களுக்கு காசுக்கு விற்றது.

கள்ளக் கடத்தல்காரர்கள், அல்கொய்தா, மாபியா கும்பல்கள் எல்லாம் நவுரு தீவு வங்கியில் பணத்தைப் போட்டு கருப்புப் பணத்தை வெள்ளை ஆக்கிக் கொண்டார்கள். 8/10
கடைசியாக உலகநாடுகள் நவ்ரு தீவு மேல் பொருளாதார தடை விதித்தன.

மக்கள் மிகவும் ஏழ்மை நிலைக்குப் போனார்கள்.

இன்று உலகின் மிக ஏழ்மை நிரம்பிய, *உலகின் மிக குண்டானவர்கள்,*

நோயாளிகள் இருக்கும் நாடாக நவ்ரு தீவு ஆகிவிட்டது 9/10
ஆஸ்திரேலிய அரசு கொடுக்கும் நிதியுதவியால் தான் மக்கள் ஒருவேளை உண்கிறார்கள்.

*நமக்கு நாமே என்ற சுய சார்பு தன்னிறைவு இல்லையெனில் நமது வீட்டுக்கும் இதே நிலைதான், நாட்டுக்கும் இதே நிலைதான்.*

ஆகையால் அனைவரது இல்லத்திலும் இந்த புத்தகத்தை வாங்கி வைத்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்.
You can follow @Jokertheinsane.
Tip: mention @twtextapp on a Twitter thread with the keyword “unroll” to get a link to it.

Latest Threads Unrolled:

By continuing to use the site, you are consenting to the use of cookies as explained in our Cookie Policy to improve your experience.