மெட்ராஸ் அரசியல் = திராவிட அரசியல் + தலித் அரசியல் + தமிழ் தேசிய அரசியல்

*நம்முடைய "திராவிடம், தலித், தமிழ்" ஆகிய மூன்றும் பார்ப்பனர்களுக்கு ஆகாது 

*"திராவிடம், தலித்தியம், தமிழ் தேசியம்" அரசியல் என்பது பார்ப்பனர்கள் அல்லாத அரசியலை தான் குறிக்கிறது.
மெட்ராஸ் அரசியல் மூலம் வந்த கல்வி நிலையங்கள்

1835 = Madras Medical College

1837 = Madras Christian College

1840 = Presidency College

1842 = Pachaiyappa's College

பச்சையப்பா முதலியாரின் விருப்பப்படி ஆங்கிலேயர்களால் நிதியளிக்கப்பபடாத பச்சையப்பா கல்லூரி நிறுவப்பட்டது.
*1817இல் Madras Literary Society (MLS) ஜான் ஹென்றி நியூபோல்ட் என்பவரால் நிறுவப்பட்டது.

*1830இல் MLS பிரிட்டன் மற்றும் அயர்லாந்தின் Royal Asiatic Society உடன் இணைந்தது.

*1890இல் MLS நூலகத்தின் புத்தகத் தொகுப்பின் பெரும்பகுதி Connemara Public Libraryக்கு மாற்றப்பட்டது.
*1844இல் மெட்ராஸில் இந்தியாவிற்கு சொந்தமான முதல் செய்தித்தாள் The Crescent பத்திரிகையை தொடங்கினார் காசுலு லட்சுமிநரசு செட்டி.

*1852இல் தென்னிந்திய முதல் மேற்கத்திய அரசியல் அமைப்பான Madras Native Association காசுலு லட்சுமிநரசு செட்டி தலைமையில் பார்ப்பனர் அல்லாத இயக்கமாக உருவானது.
*MNA முக்கிய குறிக்கோள் பிரிட்டிஷ் அரசாங்கத்திடம் மக்களின் குறைகளையும் விருப்பங்களையும் கவனத்திற்குக் கொண்டு செல்வதாகும்.

*MNA இந்து குழந்தைகளை ஐரோப்பிய மிஷனரிகள் மதமாற்றம் செய்வதாக குற்றம்சாட்டியது.
*பார்ப்பனர் அல்லாத இந்துதுவா அமைப்பாக செயல்பட்ட MNA காசுலு லட்சுமிநரசு செட்டி 1868 இல் மறைந்த பிறகு செயலிழந்த அமைப்பாக மாறியது.

*1852இல் The Madras Hindu Debating Society வெங்கடராயுலு நாயுடு என்பவரால் தொடங்கப்பட்டது.
*1868இல் Triplicane Native Literary Society (TNLS) மிர் இப்ராஹிம் அலி என்பவரால் தொடங்கப்பட்டது.

*1878இல் The Hindu ஜி.சுப்ரமணியா ஐயர் தலைமையில் எம்.வீரராகவாச்சாரி, டி.டி.ரங்காச்சாரி, பி.வி.ரங்காச்சாரி, டி.கேசவ ராவ் பந்த், சுப்பா ராவ் பண்டுலு ஆகியோர் பங்களிப்புடன் தொடங்கப்பட்டது.
*1882இல் Theosophical Society (பண்டைய இந்திய தத்துவங்களை விதைப்பதன் மூலம் இந்திய சுதந்திர அரசியல் நனவை ஊக்குவித்தன) நியூயார்க்கில் இருந்து அடையாருக்கு மாற்றப்பட்டது.

*1882இல் Swadesimittiran பத்திரிகை தேசிய உணர்வை ஊக்குவிக்கும் நோக்கத்துடன் ஜி.சுப்ரமணியா ஐய்யரால் நிறுவப்பட்டது.
*1884இல் செயலிழந்த MNA அமைப்பை Madras Mahajana Sabha என்றும் TNLS அமைப்பை Triplicane Literary Society என்றும் பி.ஆனந்தச்சார்லு புதுப்பித்தார்.

*28 டிசம்பர் 1885 இல் அன்று இந்திய தேசிய காங்கிரஸ் பம்பாயில் உள்ள கோகுல்தாஸ் தேஜ்பால் சமஸ்கிருத கல்லூரியில் தொடங்கப்பட்டது.
*72 பிரதிநிதிகள் கலந்துகொண்ட இந்நிகழ்ச்சியில் 22 பேர் மெட்ராஸ் பிரசிடென்சியைச் சேர்ந்தவர்கள் என்பதன் மூலம் மெட்ராஸ் அரசியல் முக்கியத்துவத்தை அறிந்து கொள்ளலாம்.
*வைக்கம் போராட்டம் 1924இல் பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் திருவாங்கூர் சமஸ்தானத்தில் வைக்கம் என்ற ஊரில் சோமநாதர் கோயிலைச் சுற்றியிருந்த தெருக்களை கீழ் சாதியினர் பயன்படுத்தக்கூடாது என்ற தீண்டாமை உத்தரவுக்கு எதிராக நடைபெற்றது.
*இப்போராட்டத்தில் முதன்மையானவர்கள் பெரியார், மாதவன், கேசவமேனோன், சகோதரன் ஐயப்பன், நாராயண குரு, ஈழவ சாதி பிரதிநிதிகள் மற்றும் பலர்.

*1924இல் தமிழக காங்கிரஸ் தலைவராக இருந்த பெரியார் தன் பொறுப்புகளை ராஜாஜிடம் கொடுத்துவிட்டு இப்போராட்டத்தில் களப்பணி ஆற்றினார்.
*தொடர்ந்து வைக்கம் போராட்டத்திற்கு பிறகு 1925இல் காங்கிரஸ் கட்சி சாதிய பாகுபாடுகளை ஊக்குவிப்பதை வருந்தி 1925இல் சுயமரியாதை இயக்கம் கண்டார் பெரியார்.

*குடிஅரசு பத்திரிகையில் காங்கிரஸ் கட்சிக்கு மாற்றாக வளரும் நீதிக்கட்சி செயல்பாடுகள் குறித்து பாராட்டி எழுதி வந்தார்.
*நீதிக்கட்சி அல்லது தென்னிந்திய நல உரிமைச் சங்கம் தொடங்கப்பட்ட ஆண்டு 1917.

*1938இல் நீதிக்கட்சியானது பெரியார் கூறிய 14 அம்சத் திட்டங்களையும், பெரியாரின் தலைமையையும், சுய மரியாதை கொள்கைகளையும் ஏற்று கொண்டது .
*1944இல் நீதிக்கட்சியானது “திராவிடர் கழகம்” என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டு தேர்தல்களில் போட்டியிடுவதை நிறுத்தி கொண்டு சமூக சீர்திருத்தங்களில் ஈடுபட தொடங்கியது.

*1949இல் பெரியாருடன் கருத்து வேறுபாட்டால் விலகி ராபின்சன் பூங்காவில் திராவிட முன்னேற்ற கழகத்தை தொடங்கினார் அண்ணா.
*8 வருடங்கள் கழித்து 1957 முதல் தொடர்ந்து தேர்தல்களில் போட்டியிட்டது தி.மு. கழகம்.

*1961இல் தி.மு.கவில் இருந்து வெளியேறி ஈ.வெ.கி. சம்பத் தமிழ் தேசியக் கட்சிவை தொடங்கினார்.

*1972இல் தி.மு.கவில் இருந்து வெளியேறி எம்.ஜி.ஆர் அண்ணா தி.மு.கவை தொடங்கினார்.
*1994இல் தி.மு.கவில் இருந்து வெளியேறி வைகோ ம.திமு.கவை தொடங்கினார்.

*மேலும் திராவிடம் சார்ந்து பல்வேறு இயக்கங்கள் தமிழகத்தில் தோன்றின.

*மக்களை படிக்க, சிந்திக்க, எழுத செய்து சமுதாயத்தின் தலைகீழாக்கத்தை நேர் செய்தது திராவிட இயக்கம்.
*இன்னும் சொல்லப்போனால் பேரரசுகள் வீழ்ந்து ஜனநாயகம் பிறந்த பிறகும் ஆரியம் பாதை மாறாமல் ஏற்ற தாழ்வை உறுதி செய்து கொண்டிருந்த நேரத்தில் தமிழகத்தில் ஆரியத்தை எதிர்த்து வீறு கொண்டு கிளம்பிய இயக்கம் திராவிட இயக்கமாகும்.
பின் குறிப்பு

திராவிட அரசியல் = சமூக நீதி

தலித் அரசியல் = தலித் நீதி

தமிழ் தேசிய அரசியல் = மொழி நீதி

சமூக நீதியில் "தலித் விடுதலை + மொழி" முக்கியத்துவம் இருக்கும் போது "திராவிட அரசியல்" மீது சேற்றை வாரி இறைத்து "தலித் + தமிழ் தேசிய அரசியல்" பேசுவது அயோக்கியத்தனம்.
வாசித்தும் பேசியும் வளர்ந்த அரசியல் களம் மெட்ராஸ் அரசியல் களம் இன்றோ "அந்தோ பரிதாபம்" என்றாகி போனது வேதனை தான்.

"திராவிடம் + தலித்தியம் + தமிழ் தேசியம்" ஒன்றிணைய வேண்டும் இல்லையேல் பலவீனம் நமக்கு தான்.
You can follow @chockshandle.
Tip: mention @twtextapp on a Twitter thread with the keyword “unroll” to get a link to it.

Latest Threads Unrolled:

By continuing to use the site, you are consenting to the use of cookies as explained in our Cookie Policy to improve your experience.