#apocalyptoவும்_ஆன்மிக_அரசியலும்
Apocalypto. இந்த படம் எல்லாரும் பார்த்து மிரண்டு இப்படி ஒரு படமான்னு ஆச்சரியப்பட்டிருப்பீங்க தான்?Mayan civilization கண் முன்னாடி நிப்பாட்டி வச்சதா நினைச்சிருப்பீங்க தான? படத்தோட நுண்ணரசியல, புனைவோட கலந்த அரசியல் விஷத்தை கவனிச்சீங்களா?
படத்தில ஆரம்பத்திலயும் இறுதியிலயும் சில நொடிகளே வர இந்த இரண்டு காட்சி எதுக்குன்னு யோசிச்சிருக்கீங்களா?
Mayans நரபலி கொடுக்கிற கொடூர கூட்டமாவும், காட்டில வேட்டையாடுறது மட்டுமே பண்ண மாதிரி காமிச்சு இருப்பாங்களே அது நிஜமா? Mayans நரபலி கொடுக்கிற பழக்கம் இல்லை. Aztec பழங்குடி கிட்ட நரபலி பழக்கம் இருந்தாலும் இவ்வளோ பேர ஒட்டுக்கா நரபலி கொடுத்ததா records இல்ல. ஆனா அப்படி ஏன் காமிக்கனும்?
படத்துல சுகாதாரம் இல்லாத நோயோட இருக்கிற மாதிரி காட்டிருப்பாங்க. ஆனா உண்மையிலேயே குளிக்காத நாத்தம் பிடிச்ச கூட்டம் Spanish conquistador தான். ஆனா சுத்தம் இல்லாதவங்கன்னு ஏன் காமிக்கனும்? http://www.worldhistoria.com/conquistadors-stinked_topic128832.html
Spanish colonizer தான் தென் அமெரிக்காவுக்கு பெரியம்மை மாதிரி பல நோய்கள கொண்டு வந்து சேர்த்தது. ஆனா Mayans அவங்க வர முன்னாடியே நோயோட இருந்தாங்கன்னு ஏன் காமிக்கனும்?
ஏன் இப்படி சாதாரணமா வாழ்ந்தவங்கள dying civilization சித்தரிக்கனும்? ஏன்னா ஏற்கனவே அழிவு நிலையில இருக்கிற ஒரு சமூகமா Mayans காமிச்சா தான் அங்க வந்து genocide பண்ண Spanish conquistador நியாயப்படுத்த முடியும். இத தான் white man's burden ன்னு சொல்வாங்க.
ஏன்னா Civilize பண்ண போறேன்னு பழங்குடி மக்கள கொடூரமா சித்தரிச்சா தான் நாகரிகம் கத்து தரேன்னு அவங்க colonize பண்றதுக்காக செய்த கொடூரங்கள மறைக்க முடியும். அதுக்கு செய்ற அரசியல் தான் white man's burden.
இது தான் இந்த இரண்டு காட்சிக்கும் இடைல இருக்கிற அரசியல். நம்ம #system_சரியில்லை ன்னு இரஜினி சொல்றது இந்த first quote மறுபக்கம்.
#எல்லாத்தையும்_மாத்துவோம் ன்னு இவங்க கிளம்பி வரது இங்க இருக்கிற சமூக நீதி கட்டமைப்ப உடைக்க தான். இரஜினி #RSS க்கு ஒரு front. உள்ள நுழைய கிடைச்ச துருப்புசீட்டு.இரஜினிய வச்சு #ஆன்மீகஅரசியல் ன்னு செய்ய இதுக்கு தான் வருது ஒரு கூட்டம்.
தமிழ் நாட்டுக்கு செய்றது என் கடமைன்னு RSS கூட்டம் சொல்றது white man's burden கதை தான். நம்மள அழிச்சு நம்ம வளத்தை சுரண்ட வரவன் நாம் காதுல சுத்தும் பூ தான் #ஆன்மீக_அரசியல்
இது மாதிரி RSS/BJP கூட்டாளி நம்புனா Mayan civilization அழிச்ச மாதிரி நம்மையும் அழிக்க ஆரிய கூட்டம் தயாரா இருக்கும்.
அதனால தான் நடிகரா மட்டும் இருந்திருந்தா
#HBDSuperstarRajinikanth சொல்லியிருப்பேன்.
You can follow @subbu_q.
Tip: mention @twtextapp on a Twitter thread with the keyword “unroll” to get a link to it.

Latest Threads Unrolled:

By continuing to use the site, you are consenting to the use of cookies as explained in our Cookie Policy to improve your experience.