@ividhyac
👉சங்கினு எத வச்சி முடிவு பண்றீங்க? இதெல்லான் பண்ணா அவங்க கண்டிப்பா சங்கியா தான் இருப்பாங்கனு எத சொல்விங்க?

👉ஒருத்தர் சங்கி இல்லன்னு எத வச்சி முடிவு பண்வீங்க? இதெல்லான் பண்ணா அவங்க கண்டிப்பா சங்கி-ஆ இருக்க முடியாது-னு எத சொல்விங்க? (1
👉கமல்ஹாசன் சங்கி-னா அவர் என்ன role play பண்றாருன்னு நினைக்குறிங்க?

1) BJP கூட கூட்டணி வைப்பாரு-ன்றிங்களா?
2) இல்ல தனியா நின்னு vote-அ பிரிப்பாறு-னு சொல்றிங்களா?
3) அப்டி பிரிச்சா யாரோட vote-அ பிரிப்பாறு-னு சொல்றிங்க? (2
ஏனா சொல்றவங்க, திமுகவ அழிக்கplan போட்றதாவும் சொல்றாங்க.. இல்லஇல்ல திமுகவ அழிக்க முடியாது,அதனால கூட இருந்து அதிமுகவ காலி பண்ணி அடுத்த electionல திமுககு வருவாங்கனும் சொல்றாங்க.. அதனால sinceUr an expert,u cld smell d rat from a distance,I wanted2undrstnd wat is d rationale behind (3
coming back,

4) இவரு vote-அ பிரிக்க தான் election-ல நிக்கறாரு-ணா அது எதன் மூலமா நிரூபணம் ஆகும்?

ஏனா நிக்கற எல்லா கட்சிகளும் எல்லார் vote-அயும் ஏதோ ஒரு சதவீதம் பிரிச்சு தான் ஆகணும்... BJP காக தான் vote-அ பிரிச்சாறு-னு எத வச்சி சொல்லுவிங்க? (4
like..அதுக்கப்பறம் post poll alliance வைப்பாரா? கட்சிய BJPயோட இனச்சிடுவாரா? இல்ல சினிமா-கு போயிடுவாரா? அங்கேந்து BJPகு வெளியிலிருந்து ஆதரவு குரல் குடுப்பாரா?or வேற என்ன வேணா இருக்கலாம்.. ஆனா அதை நிரூபணம் செய்ய ஏதாவது ஒன்னு இருந்தே ஆகணும்.. அது என்னவா இருக்கும்னு நெனைக்குறிங்க? (5
👉ரெண்டு அடிப்படை சந்தேகங்கள் இருக்குங்க...

1) BJP கூட கூட்டணி வைக்கனுனா, பேசாம அவரு BJP-ல சேந்துருக்கலாமே? எதுக்கு கட்சின்னு ஒன்னு ஆரம்பிச்சு, உறுப்பினர் சேர்ப்பு, பொறுப்புகள் நியமனம், பொதுக்கூட்டம், களப் பணி அது இது னு எதுக்கு இந்த தலைவலி? ஏன் இந்த வீண் செலவு? (6
BJP-ல சேந்தா எல்லா செலவும் அவங்களே பாத்துப்பாங்க... எவ்ளோ வேணா extra கேட்டு வாங்கிக்கலாம்... CBI, Income tax Dept, Enforcement-னு யார வேணா உள்ள தள்ளலாம், media-வ வச்சி மக்கள் opinion-அ மாத்திடலாம், EVM-அ வச்சி vote வாங்கலாம்... easy-ஆ முடிக்க வேண்டிய விழயமாச்சே? (7
CM ஆகிட்டு போயிட்டே இருக்கலாமே! (ரஜினி வேற CM ஆக மாட்டன்னு சொல்லிட்டார்)

அதுவும் இல்லாம இவர் வேற திராவிடம் பேசறார், பெரியாரிசம் பேசறார், அம்பேத்கர், காந்தி பத்தி பேசறார்... அப்டே BJP-அ அலேக்கா தூக்கிட்டு வந்து தமிழ் நாட்ல உட்கார வச்சிடுலாமே! இதான அவங்களுக்கு வசதி? (8
எதுக்கு இன்னொரு கட்சி ஆரம்பிச்சு, கூட்டணி வச்சி...எதுக்கு இது?

2)எதுக்கு voteஅ பிரிக்க அவர்electionவரணும்? voteஅ பிரிச்சிட்டு அவர் போயிடுவார்ணா,அவர் சினிமாலயே இருந்துருக்கலாமே.. இந்தியாலயே அவர் பக்கத்துல நிக்க ஆல் இல்லாதப்ப, வெறும் voteஅ பிரிக்க ஏன் சினிமாவ விட்டுட்டு வரணும்? (9
இந்த timeல படங்கள் பண்ணிருந்தாலே பலநூறு கோடிகள் பாத்துருக்கலாம்,அதவிட்டு சினிமாவயும் விட்டுட்டு, பேரையும் damage பண்ணி... என்ன reasoningனு நெனைக்குரிங்க?
Income tax பிரட்சன கூட இல்ல...
எந்த வகையுளுமே கமல்ஹாசன்கு பிரோஜனம் இல்லாத இந்தofferஅ அவர் ஏன் எடுத்தாருனு நெனைக்குறிங்க? (10
BJP கு agenda இருக்கு Ok, அவருக்கு என்ன agenda? பணம் வாங்கிருக்காரா? வாங்குவாரா? தெரிஞ்ச source கிட்டேந்து தகவல் வந்துருக்கா? என்ன காரணம்? இல்ல இலுமுனாட்டி செயலா? என்னனு நெனைக்குறிங்க? உங்களுக்கு தெரிஞ்சிருக்கணுமே!

சரி இதெல்லான் ஒரு பக்கம் இருக்க... (11
1.கமல்ஹாசன் சங்கினா அப்ப, ‘A Strong voice dat has contributed2Tamil culture’னு ராகுல்காந்தி பாராட்றாரே அவரும் சங்கியா? அப்டினா congresகூட கூட்டணி வச்சிருக்கDMKம் சங்கியா?

2.தமிழ்நாடு Congressகட்சி தலைவர் KSஅழகிரி ஏன் கமல்ஹாசன்கு அழைப்பு விடுக்கறார்? அவர் தான் சங்கியாச்சே! (12
3.KarthikChidambaramஏன் கமல்ஹாசன்கு அழைப்பு குடுக்கறார்?

4.SoniaGandiஅ பாக்கறார்,MamataBanerjeeஅ பாக்கறார்.. அவங்களும் சங்கியா?

5.பினராயிவிஜயன் ஏங்க ஒருசங்கி கூட நெருக்கமா இருக்கார்? அடிக்கடி பினராயி விஜயன்அ போய் பாக்கறாரே அப்பஅவரும் சங்கியா? Communistகட்சியும் சங்கிதானா? (13
6.BJP காரங்க எல்லான் அவரை வசை பாட்றாங்க... Congress காரங்க எல்லான் அவர வரவேற்கறாங்க... இது என்ன design?

7.‘சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து’ னு எந்த சங்கி சொல்வான்?

8.திராவிடத்தை ஒரு போதும் அழிக்க முடியாது-னு எந்த சங்கி சொல்வான்? (14
9.பெரியாரை சமூக சீர்திருத்தவாதி-னு எந்த சங்கியாது மேடைக்கு மேடை சொல்வானா?

10.எனக்கு சாதி மதம் இல்ல னு எந்த சங்கியாது சொல்வானா?

11.சாதி இல்லா சான்று பெற்ற பெண்ண எந்த சங்கி பாராட்டுவான்?

12.நான் பகுத்தறிவாளன் னு சொல்ற சங்கி யாரு இருக்கா? (15
13.காந்திய வருஷம் வருஷம் சுட்டு தள்ற கூட்டத்துல, காந்தி வழி நடப்பவன்-னு எந்த சங்கியாது சொல்வானா?

14.அம்பேத்கர் சிலைய ஓடச்சப்ப எந்த சங்கியாது எதிர்ப்பு தெரிவிப்பானா?

15.எந்த சங்கி ஹிந்தி திணிப்ப எதித்து போராட்டம் பண்ணான்? (16
16.பாபர் மசூதி இடிச்ச வழக்குல எந்த சங்கி, ‘நீதிமன்றத்தில் சரியான ஆதாரங்கள் முன்வைக்கப்படல’ னு சொல்வான்?

17.எந்த சங்கி மாட்டிறைச்சி தடை கு எதிரா பேசுவான்?

18.மோடி அரச பால்கனி அரசு-னு ஒரு சங்கி சொல்வானா?

19.‘you have failed’ னு எந்த சங்கி மோடி-க்கு letter எழுதிருக்கான்? (17
20.CBSC பாட புத்தகத்துல secularism, Democratic rights பத்தின பாடங்கள நீக்கணப்ப, அதுக்கு பதில் Mein Kampf சேருங்க னு சொல்ற துணிச்சல் எந்த சங்கி கு இருக்கு?

21.‘உங்களுக்கு intellectual-ன்ற வார்த்தைய சொன்னா புடிக்காது’ னு மோடி-அ பாத்து எந்த சங்கி சொல்ல முடியும்? (18
22.எந்த சங்கி sterlite போராட்டத்துல கலந்துக்கிட்டான்?

23.Sterlite கு தடை-னு தீர்ப்பு வந்தப்ப எந்த சங்கி அத வரவேற்தான்?

24.எந்த சங்கி NEET தேர்வுக்கு எதிரா குரல் குடுத்தான்?

25.எந்த சங்கி புதிய கல்வி கொள்கைக்கு எதிரா பேசனது? (19
26.கல்வி மாநிலஅரசு கிட்டதான் இருக்கனுன்னு எந்த சங்கி சொல்லிருக்கான்?

27.எட்டுவழிசாலை போராட்டக்காரங்கள கைது செஞ்சப்ப எந்த சங்கி கண்டனம் தெரிவிச்சான்?

28.CAA/NRCகு எதிரா எந்த சங்கி பேசிருக்கான்?

29.எந்த சங்கி 10%உயர்சாதி இடஒதுக்கீடுக்கு எதிரா இருப்பான்?(Congress/CPIM ஆதரவு) (20
30.Supreme court கெடு முடிஞ்சும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கல-னு எந்த சங்கி மத்திய அரச கேள்வி கேட்டான்? மத்திய அரசுக்கு எதிரா ஒத்துழையாமை எச்சரிக்கற துணிச்சல் எந்த சங்கி கு இருந்தது?

31.எந்த சங்கி Hydro-Carbon கு எதிரா குரல் குடுத்துருக்கான்? (21
32.எந்த சங்கி மார தட்டி, நான் நேர்மையானவன்-னு கர்வத்தோட சொல்வான்?

33.On a lighter note… எந்த சங்கி ரத்த தானம், உடல் தானம் பத்தி பேசுவான்? அடுத்தவன் உயிர எடுப்பானே தவிர உடல் தானம் செய்வானா? (22
இது எல்லாத்த கூட விட்ருங்க... இவர சங்கி னு சொல்ற மொத்த கூட்டங்கள் அவங்க வாழ்நாள் பூர பேசிய அரசியல விட அழுத்தமான அரசியல், அவரோட ஒரே படம் ‘ஹே ராம்’ பேசிருக்கு.

எந்த சங்கியாது அப்டி கற்பனை பண்ணி பாக்க முடியுமா? (23
ஊரே commercial-ஆ படம் பண்ணி காசு பாக்கறப்ப, market trend-அ எதித்து, சொந்த பணத்த போட்டு, RSS கு எதிரா, காந்தி-அ glorify பண்ணி எந்த சங்கி-ங்க அப்டி ஒரு படம் எடுப்பான்?

எடுக்கறத விடுங்க... நெனச்சு பாக்க முடியுமா?

‘இந்த காரணம் லான் போதுமானதா?’ அப்டின்னு நீங்க கேட்டிங்கனா... (24
போதாது!

வாங்க கொஞ்சம் விரிவா விவாதிக்கலாம்!

I might well have missed out what u have obviously spotted!

நன்றி!🙏🙏🙏 (25
You can follow @Arivalogy.
Tip: mention @twtextapp on a Twitter thread with the keyword “unroll” to get a link to it.

Latest Threads Unrolled:

By continuing to use the site, you are consenting to the use of cookies as explained in our Cookie Policy to improve your experience.