ஒரு கதை சொல்கிறேன். இது நீட் கதை.

நீட் தேர்வில் தாங்கள் பதிலளித்த OMR தாளிற்கும், தங்களுடைய OMR தாள் என NTA என்கிற தேசிய தேர்வு ஆணையம் வழங்கியதற்கும் இடையே பல குளறுபடிகள் என வழக்கு. பத்தொன்பது மாணவர்கள் தொடுத்த இவ்வழக்கின் சாரம் தலைசுற்றுவது.
1/n
இவர்களின் OMR தாள்களில் பதிவு எண், புக்லெட் நம்பர், கையெழுத்து மாறியிருக்கிறது. இவர்கள் பதிலளித்த OMR க்கும், வழங்கப்பட்ட OMR க்கும் வேறுபாடுகள். மேலும், காலியான OMR தாள்கள் சிலருக்கு வழங்கப்பட்டிருக்கிறது. 2/n
இது போதாது என்று, இவர்கள் எதிர்பார்த்த மதிப்பெண்ணிற்கும், வந்த மதிப்பெண்ணிற்கும் வேறுபாடு வேறு. இந்த அச்சம் உண்மையோ என ஐயப்பட வைக்கும் வண்ணம் முதலில் பதிவேற்றப்பட்ட மதிப்பெண்ணிற்கும், பின்னர் திருத்தப்பட்ட மதிப்பெண்ணிற்கும் இடையே முரண்பாடுகள்! 3/n
மாணவர்கள் பதிலளித்த கேள்விகளின் எண்ணிக்கைக்கும், NTA காட்டிய கணக்கிலும் குளறுபடி.

இப்போது, இந்த குளறுபடிகள், ஐயங்களை ஒருவர் தீர்த்துக்கொள்ள தேர்வு முடிவை 'challenge' செய்யலாம். 4/n.
இதைப்பற்றி NTA ஒரு அறிவிப்பை அக்டோபர் 5 வெளியிட்டிருக்கிறது. மொத்தம், 180 கேள்விகள். எந்த எந்த கேள்விக்கான முடிவு தவறெனத் தோன்றுகிறதோ ஒவ்வொன்றிற்கும் 1,000 ரூபாய் என்று 1.8 லட்சம் வரை கட்டலாம். வழக்கு தொடுத்த ஒரு மாணவர் அதிகபட்சமாக 91,000 கட்டியிருக்கிறார் 5/n
இவ்வளவு பெரிய தொகையை எப்படி நடுத்தர, ஏழை எளிய மாணவர்களால் செலுத்த இயலும்? மேலும், தேர்வில் குளறுபடிகள், மோசடிகளைத் தடுக்க விடைத்தாளை திருத்துவதற்கு முன்னரே நகலெடுத்து NTA சேமிக்க வேண்டும் 6/n
மேலும்,இவ்வளவு அதீதமான கட்டணமானது அரசியலமைப்புச் சட்டப்பிரிவுகள் 14,15,19(1)(a) க்கு எதிரானது என உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.ஒரே ஒரு சமயத்தில் மட்டும்,NTA தன்னுடைய தேர்வு முடிவில் குளறுபடிகள் இருப்பதாக ஒப்புக்கொண்டது என மனுதாரர்கள் சுட்டிக்காட்டியிருக்கிறார்கள் 7/n
மேற்சொன்ன கட்டணக்கொள்ளை சமத்துவத்திற்கு எதிரானதாக இருப்பதாக வழக்கு மூன்று நீதிபதிகள் கொண்ட உச்சநீதிமன்ற அமர்வின் முன் வந்தது. மாணவர்கள் NTA அசல் OMR தாள்களைத் தருவதோடு, அதனிடம் மட்டுமே இருக்கும் OMR விடைத்தாள் நகல்களோடு ஒப்பிட வழி வகை செய்ய வேண்டும் எனக்கோரினார்கள். 8/n
மேலும், ஒரு உயர் மட்டக்குழுவை அமைத்து OMR தாள்களில் மோசடி நிகழ்வது குறித்த புகார்களை விசாரிக்க வேண்டும் எனவும் கோரப்பட்டது. இதைச் சாதிக்க தேர்வு நடைமுறைகளில் வெளிப்படைத்தன்மை, முறையான நெறிப்படுத்தல்களை உறுதி செய்ய ரிட் மனுவில் கேட்கப்பட்டிருந்தது. 9/n
உச்சநீதிமன்றம் 15 லட்சம் மாணவர்கள் எழுதும் நீட் தேர்வில் தனித்தனி மாணவர்களின் குறைகளை நீதிமன்றம் அரசியலமைப்பு சட்டப்பிரிவு 32 ன் கீழ் பதியப்பட்ட மனுவில் தீர்க்க முடியாது என்றது. மேலும், இரண்டாம் கட்டக் கலந்தாய்வு முடிந்து விட்டது. 10/n
மாணவர்களின் அசல் OMR விடைத்தாள்களை கோரும் விண்ணப்பங்களை NTA பரிசீலிக்க வேண்டும். அதே வேளையில், நியாயம் நாடி உயர்நீதிமன்றத்தை மனுதாரர்கள் நாடலாம் என உத்தரவிடப்பட்டது. அவ்வளவு தான் கதை.

வழக்குச் சுருக்கம்: https://www.barandbench.com/amp/story/news%2Flitigation%2Fneet-supreme-court-asks-nta-to-consider-providing-original-omr-sheets

உச்சநீதிமன்ற ஆணை: https://images.assettype.com/barandbench/2020-12/1dc948c2-cd71-480c-b589-6bb38ea7a119/NEET_students_grievance_order.pdf 11/11
You can follow @PUKOSARAVANAN.
Tip: mention @twtextapp on a Twitter thread with the keyword “unroll” to get a link to it.

Latest Threads Unrolled:

By continuing to use the site, you are consenting to the use of cookies as explained in our Cookie Policy to improve your experience.