புராணக் கதைகளை எடுத்துரைப்பவர்களுக்குப் #பௌராணிகர்கள் என்று பெயர். வைசம்பாயனர் தனது குரு வியாசர் எழுதிய ஜெயம் எனும் மகாபாரதத்தை 24,000 அடிகளைக் கொண்டதாக விரிவுபடுத்தி ஜனமேஜயன் என்னும் அரசனுக்குக் நாக வேள்வியின் போது எடுத்துரைத்தார். வைசம்பாயனர் எடுத்துரைத்த மகாபாரதக் கதையை கேட்ட
உக்கிரசிரவஸ் என்ற சூத முனிவர், பின்னாளில் சௌனகர் தலைமையிலான நைமிசாரண்யத்து முனிவர்களுக்கு எடுத்துரைத்தார். நாரத முனிவர் இதைக்கற்று, தேவருக்குக்கூறினார். இவர்களே முதலில் தோன்றிய பௌராணிகர்கள்.
ஸ்ரவணம் கீர்த்தனம் விஷ்ணோ: ஸ்மரணம் பாத சேவனம்
அர்ச்சனம் வந்தனம் தாஸ்யம் ஸக்ய ஆத்மநிவேதனம்
(பாகவதம் 7-5-23)
அதாவது கடவுளின் நாமத்தைக் கேட்டல், பக்திப் பரவசத்துடன் பாடுதல், கடவுளின் பெயரை எல்லா நேரமும் நினைத்தல், அவனுடைய பாதாரவிந்தங்களில் பணிவிடை செய்தல், பூவாலும் இலையாலும் பொன்னாலும் மணியாலும் அவனை அர்ச்சித்தல், அவனை கைகூப்பி வணங்குதல், அவனுக்கு அடிமையாக பணியாற்றுதல்,
அவனை உயிருக்குயிரான நண்பனாகக் கருதுதல், இதயபூர்வமாக தன்னையே அர்ப்பணித்தல் ஆகியவை நவவித/ஒன்பது வகை பக்திச் செயல்கள் என்று கூறப்பட்டிருக்கு. இந்த ஒன்பதில் முதலாவதான இறைவனின் பெருமையை கேட்பதில் பெரும் உதவியை செய்கிறவர்கள் பௌராணிகர்கள் அதாவது புராணக் கதைகளை சொல்லி பகவான் நினைவை
உண்டாக்குகிறவர்கள் தாம். "அதையும் அந்தப் புராணத்தில் சொல்லியிருக்கிற பிரகாரம், அதை விட்டு ரொம்பவும் வெளியே ஓடிவிடாமல், மனஸில் பதிகிற மாதிரி சொல்ல வேண்டும். இதற்கு முக்கியமாக ஸ்வாநுபூதி இருக்க வேண்டும். கதை சொல்கிறவருக்கே ஆஸ்திக்யம், ஆசாரங்கள், தெய்வ பக்தி, தாம் சொல்கிறதில்
மனமார்ந்த நம்பிக்கை எல்லாம் இருக்க வேண்டும்." என்று மகா பெரியவா அருளியிருக்கிறார். பௌராணிகர்களில் புராணங்களின் உள் அர்த்தங்களைஉள்ளபடித் தாமும் உணர்ந்து, சொல்லும் போது பிறருக்கும் உணர்த்த வல்லவர்களாய் இருந்து நமக்குக் கேட்க கிடைத்தால் அது நம் பெரிய வரமே. அப்படி பெரும் புலமை
இல்லாதவராயினும் உபந்யாசகர்கள் மக்களுக்குப் பல விஷயங்களை ஆன்மிக மன நிலையுடன் சிந்தித்துப் பார்க்கும் வாய்ப்புகளை புராணப் பிரவசனங்கள்/உபன்யாசங்கள்/சொற்பொழிவுகள் மூலம் தந்து வந்திருக்கின்றனர். கதை, கதைகளில் உள்ள குறியீடுகளின் பொருள், அவை சொல்லும் பெரும் தத்துவ அர்த்தங்களை மக்களின்
மனத்தில் புகுத்திவிடும் வல்லமை புராணங்களுக்கும், பொதுவாக பௌராணிகர்களுக்கும் இருந்து வந்திருக்கிறது. அகில பிரபஞ்சத்தையும் ஒரே தத்துவ வடிவாகக்கண்டு போற்றுதல்தான் உண்மையில் இறை வழிபாடு என்னும் அரிய கருத்தை அழகாக புராணங்களால் குறியீடுகளின் மூலம் காட்டிவிட முடிகிறது! இந்த அளவிற்கு
தத்துவ செறிவான உள்கருத்துகளை பௌராணிகர்கள் பலர் அந்நாளில் மிகவும் முயன்று மக்களுக்குப் பொதுவில் அமர்ந்து விளக்கியதன் காரணமாகத்தான் பாரதம் ஆன்மிகச் செழுமை உடையது என்ற புகழைப் பெற்றது. தத்துவச் செறிவுகளை ஆழ்ந்து விளக்குவதில் மிகுந்த முனைப்பு காட்டி வரும் பௌராணிகர் என்று சொன்னால்
முன்பு கிருபானத வாரியார், புலவர் கீரன் போன்றோரும் இன்று ஸ்ரீகிருஷ்ண பிரேமி, உ.வே.ஸ்ரீ வேளுக்குடி கிருஷ்ணன், இலங்கை ஜெயராஜ், விசாகா ஹரி, ஜோசப் ஐயங்கார் போன்றோரும், இன்னும் பல பிரபலம் அடையாத ஆனால் மிகச் சிறப்பாக பௌராணிகர்களாக சமய பணியாற்றி வரும் நிறைய பேர் உள்ளனர். அதற்கு நாம்
இறைவனுக்கும் இந்தச் சேவையில் ஈடுபட்டிருக்கும் அவர்களுக்கும் மிகவும் நன்றிக் கடன் பட்டிருக்கிறோம். #அர்த்தமுள்ளஇந்துமதம்
You can follow @anbezhil12.
Tip: mention @twtextapp on a Twitter thread with the keyword “unroll” to get a link to it.

Latest Threads Unrolled:

By continuing to use the site, you are consenting to the use of cookies as explained in our Cookie Policy to improve your experience.