விஜயபாஸ்கரின் குட்கா ஊழல் பற்றிய விவரங்கள்

அமைச்சர் விஜயபாஸ்கருக்கு MDM குட்கா நிறுவனம், மாதம் 14 இலட்ச ரூபாய் லஞ்சம் கொடுத்ததாக அந்த நிறுவனத்தின் முதலீட்டாளர் மாதவ ராவ் வருமான வரித்துறைக்கு அளித்த ஒப்புதல் வாக்குமூலம்!!

https://www.mhc.tn.gov.in/judis/index.php/casestatus/viewpdf/389875
காவல் துறை அதிகாரிகள், கவுன்சிலர்கள், உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் என்று பலருக்கும் MDM குட்கா நிறுவனம் லஞ்சம் கொடுத்த விவரம்
இது எங்கே துவங்கியது என்று முதலில் பார்த்து விடுவோம்.

8.7.2016 அன்று, MDM எனும் குட்கா தயாரிப்பு நிறுவனத்தின் அலுவலகத்தில் வருமான வரித்துறை நடத்திய சோதனையில் சில ஆவணங்கள் சிக்கியது.

அதில், அமைச்சர் விஜயபாஸ்கருக்கு கொடுக்கப்பட்ட லஞ்சம் பற்றிய குறிப்புகள் இருந்தன.
ஒரு மாதத்துக்கு பிறகு, அந்த சோதனையில் சிக்கிய ஆவணங்கள் மற்றும் குட்கா நிறுவனத்தின் முதலீட்டாளர் மாதவ ராவ் கொடுத்த வாக்குமூலம் முதலியவற்றை, வருமான வரித்துறை அதிகாரி பாலகிருஷ்ணன் ஒரு கடிதம் மூலமாக தமிழ் நாட்டின் தலைமை செயலருக்கு அளித்து, நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறார்
அந்த கடிதத்தில் இருந்த தகவல்கள்தான் நீங்கள் முதல் 2 டுவீட்டுகளில் பார்த்தது.

இவ்வளவு கடுமையான குற்றச்சாட்டு ஆதாரங்களோடு கிடைத்தால் ஒரு அரசு என்ன செய்திருக்க வேண்டும்? உடனடியாக விசாரணையை துவங்கியிருக்க வேண்டாமா? அதுதான் இல்லை! அப்படியே கிடப்பில் போட்டது!
கிட்டத்தட்ட ஒரு ஆண்டுக்கு பிறகு, மற்றொரு வழக்கில், வருமான வரித்துறை அளித்த அந்த கடிதங்கள் பற்றி தங்களிடம் எந்த குறிப்பும் இல்லை என்று அப்போதைய தலைமை செயலர் கிரிஜா வைத்தியநாதன் நீதிமன்றத்தில் தெரிவித்தார்!

அதாவது ஆவணங்கள் காணவில்லை! சூப்பர்ல?

https://www.mhc.tn.gov.in/judis/index.php/casestatus/viewpdf/122507
இதான் திரில்லிங் ஆன இடம்!

17.11.2017 அன்று ஜெயலலிதாவின் வீட்டில் நடந்த சோதனையில், வருமான வரித்துறை அளித்த அமைச்சர் விஜயபாஸ்கருக்கு எதிரான ஆதாரங்கள் அடங்கிய அந்த கடிதம், சசிகலாவின் அறையில் சிக்கியது!

இவ்வளவு பெரிய ஊழலில் அதிமுக அரசு ஆவணங்களை கையாளும் விதம் இதுதான்!
இந்த ஊழலை ஒரு SIT அமைத்து விசாரிக்க வேண்டும் என்று திமுக சார்பாக ஜெ. அன்பழகன் தொடர்ந்த வழக்கின் தீர்ப்பில், SIT தேவையில்லை, வழக்கை சிபிஐக்கு மாற்றிவிடலாம் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது.

அதன் பிறகும் அந்த வழக்கில் எந்த முன்னேற்றமும் இல்லை!
You can follow @angry_birdu.
Tip: mention @twtextapp on a Twitter thread with the keyword “unroll” to get a link to it.

Latest Threads Unrolled:

By continuing to use the site, you are consenting to the use of cookies as explained in our Cookie Policy to improve your experience.