1.சங்கீத விஷயம்.
என் தோழிகளில் சிலர் மாலதி நல்லா பாட்டு படிப்பா என்று சொல்லும்போது என் இதயம் வெடிக்கும். ஆஹா நாம் எவ்வளவு கஷ்டப்பட்டு சங்கீதம் தெரியாமலேயே சில அருமையான பாட்டுக்களை கேட்டு கொஞ்சம் ப்ராக்டிஸ் பண்ணி பாட முயற்சிக்கிறோம். கூசாமல்
2.''படித்ததாக'' சொல்கிறார்களே என்று தோன்றும். படிப்பது என்றால் பாடுவது என்று அப்புறம் தான் புரிந்தது. உண்மையில் நான் பாடுவது கேட்கும் படி தான் இருக்கும்.
மனிதனுக்கு பகவான் கொடுத்த மிகப்பெரிய வரம் பேசுவதும் பாடுவதும். இதில் பேச்சு எல்லோருக்கும் முடிந்தது.
3.பாடுவது சில பேருக்கு மட்டும் கிடைத்த போனஸ். பாடுவது என்றால் ''கேட்கும்படியாக'' என்று புரிந்து கொள்ள வேண்டும். மனிதனுக்கு இசையும் உடல் அசைவும் இணை பிரியாத ஒரு வரப்பிரசாதம். ரசிகன் கேட்டு தலையை கரங்களை உடலை அசைக்கிறான். பாடுபவன் இதை செயகிறான். வித்யாசம்
4.என்னவென்றால் பாடுபவன் ஏதோ ஒரு கணக்கு, தாளம், கால பிரமாணம் அதற்கு கற்பித்து விடாமல் பயிற்சி செய்தவன். நாதத்திலேயே முழுநேரமும் தனைமறந்த ஒரே சிந்தனையாக ஈடுபடுவது தான் நாதோபாஸனை.
பரத நாட்டிய சாஸ்திரம் கந்தர்வ வேதம். ஆயுர்வேதம் இன்னொரு பிரிவு. அர்த்த சாஸ்திரம்,
5.தனுர்வேதம் மற்றொரு பிரிவு. கந்தர்வ வேதத்திற்குள் செல்ல மூக்கை நீட்டவேண்டாம். பெரிய கடல் அது. 32 முக்கிய வித்தைகள் சேர்ந்தது. நாட்யம் என்பதே நிருத்தம், நிருத்யம், கீதம், வாத்தியம் போல எண்ணற்ற விஷயங்கள் கொண்டது.கீதம் சாமவேதத்திலிருந்து பிறந்தது.
சப்த ஸ்வரங்களான
6.சரிகமபதநி , தொன்று தொட்ட உபநிஷதமான ''நாரத பரிவ்ராஜக உபநிஷத் தில் இருக்கிறது. சீனாக்காரன் இதே போல் ஒரு செட் வைத்திருந்திருக்கிறான். அதை நம்மால் உச்சரிக்கக் கூட முடியாது. கௌங் , சாங், கியோ, பியான் சே, து, பியான்கோவுங் என்றெல்லாம் வரும். மூக்கில் வரும் சப்தத்தால்
7.மூக்கு அறுந்து விழுந்துவிடும்.
பரத ரிஷியின் நாட்ய சாஸ்திரம் 2 கிரமங்களை உடையது .நாதத்தின் அளவு அது. 84 ஜதி கொண்டது. இந்த ஜதி தான் பின்னால் ராகம் ஆகியது.
மேளம் என்றால் டம டம என்று சப்தம் செய்யும் வாத்யம் என்று நாம் நினைத்துக்கொண்டால் நமது சங்கீத ஞானம் பூஜ்யம்.
8.மேளம் வேறு ராகம் வேறு. ஸ்வரங்களின் மேல், கீழ் ராக ஸ்தாயிகளை சொல்வது. ஆரோஹணம், அவரோஹணம். கீர்த்தனைகளை இயற்றுபவர்கள் மேளங்களை அனுசரித்து சாஹித்யத்தில் புகுத்தி அதை வித்துவான் புரிந்துகொண்டு அற்புதமாக நமது காதுகளை நிறைப்பார்.
தமிழிசையில் ராகம் என்பதற்கு
9.பதில் பண் என்று இருந்தது. 13ம் நூற்றாண்டு சாரங்க தேவர் சங்கீத ரத்னாகரம் என்ற நூலில் தேவார திருப்பதிகங்களில் பண்ணிசை உபயோகத்தை பற்றி கூறுகிறார்.
இதெல்லாம் அனுசரித்து மஹான்கள் ப்ரத்யக்ஷமாக பகவானை இசை, நாதம் மூலம் க்ருதிகளை இயற்றி தரிசித்தவர்கள், அல்லது
10.தரிசித்து இயற்றியவர்கள். அதை அப்பியாசப்படுத்தி பாடாந்தரங்களை சம்பிரதாய முறைப்படி பாடிய வித்வான்களும் எண்ணற்றவர்கள்.
பக்தி ரசம் ததும்பும் பாரதியார், ஆண்டாள், ,அருணகிரி நாதர், ஊத்துக்காடு, சைவசமய குரவர்கள் ஜெயதேவர் புரந்தர தாசர் தியாகராஜர் போன்றவர்கள் பாடல்களை
11.இசை மெருகூட்டி மெருகூட்டி செவிக்கு விருந்தாக நமக்கு அளித்தவர்கள் , இன்றும் அளிப்பவர்கள் குரல் வளம் கொண்ட சில பாக்யசாலி கர்நாடக ஹிந்துஸ்தானி பாடகர்கள்.
14ம் நூற்றாண்டு தொடக்கத்தில் அபிநவ ராகமஞ்சரி என்று ஒரு புத்தகம். அது கர்நாடக, ஹிந்துஸ்தானி சங்கீதத்தைப்
12.பற்றி கிரந்தத்தில் விவரிக்கிறது.
ஒவ்வொரு மஹான் வாக் கேயக்காரர்களை பற்றியும் சொல்ல ஆசை. ஹனுமார் வால் மாதிரி கட்டுரை நீண்டு விடும். அவ்வப்போது துக்கடா செய்திகளாக தந்தால் படிக்க எளிதாக இருக்கும். நாம் என்ன பரிக்ஷைக்காகவா படிக்கிறோம்?
@roamingraman , @aarjeekaykannan
You can follow @malathyj1508.
Tip: mention @twtextapp on a Twitter thread with the keyword “unroll” to get a link to it.

Latest Threads Unrolled:

By continuing to use the site, you are consenting to the use of cookies as explained in our Cookie Policy to improve your experience.