நமது கண்மூடித்தனம் (BLIND FOLLOWERS)

நாம் எதிர்க்க வேண்டியது நம் நம்பிக்கைகளை கொச்சைப்படுத்தி பேசுபவர்களை மட்டுமல்ல. இது அவர்களின் ஒரு கோணம் மட்டுமே.

அவர்கள் சிதைத்த, சிதைத்து கொண்டு இருக்கும் வேறு நம்மின் பல ஆணிவேர் சித்தாந்தங்கள் இருக்கிறது.

Please take precautions
இறைச்சியை நெருப்பில் சுட்டுச் சாப்பிட்டுக் கொண்டிருந்தோம்

சுகாதாரமில்லாத முறை என்றான் வெள்ளையன்.

நாங்களும் மாறினோம்

இன்று அதையே barbecue என்று kfc , Macdonaldல் விக்கிறான்.

உப்பு + கரியில் பல் தேய்த்தோம்

பற்பசையை அறிமுகப்படுத்தினான்
இப்போது உங்கள் toothpasteல் salt + charcoal இருக்கா என்று கேட்கிறான்.

மண்பானை, மண்சட்டியில் சமைத்தோம்

உலோகப் பாத்திரங்களை அறிமுகப் படுத்தினான்

இன்று மண்சட்டியில் சமைத்த உணவை விசேட விலையில் star hotelகளில் விக்கிறான் .

நாட்டு மாட்டின் பாலை பயன்படுத்தினோம்
ஜெர்சி மாட்டை அறிமுகப் படுத்தினான்

இன்று அவனே ஆசியாவிலிருந்து நாட்டு மாடுகளின் sperm ஏற்றுமதி செய்கிறான்.

இளநீர், பதனீரைப் பருகினோம்

coke pepsiஐ கொண்டு வந்தான்

இன்று அவனே இளநீரைத் தகரத்தில் அடைத்து விற்கிறான்.

Corporate companyகளின் வியாபார உத்தியான விளம்பரப்
பேச்சைக்கேட்டுத் தொன்மைகளைத் தொலைத்த, தொலைத்து கொண்டு இருக்கும் முட்டாள் இனம் நாமாகத்தான் இருப்போம்.

நாகரீகப் போர்வையில் நானும் இதே தவறைச் செய்தேன் என்பது தான் கசப்பான உண்மை.

வெற்றிலைக் கொடி படற அகத்தியை நட்டோம்.

அகத்திக் கீரை தின்ன ஆடு வளர்த்தோம்.
ஆடு போட்ட புழுக்கையை அள்ளி காடு வளர்த்தோம்.

காட்டுக்குள்ளே புழு புரட்டக் கோழியை விட்டோம்.

வளர்த்ததெல்லாம் விற்காம அய்யனார் பேருக்குச் சில நேர்ந்து விட்டோம்.

நேர்ந்துவிட்ட அதுகளை வெட்ட திருவிழா வச்சோம்.

திருவிழாப் பேரைச் சொல்லி உறவை அழைச்சோம்.
உறவுகளோடு உட்கார்ந்து அவனுக்கு அவளெனப் பேசி முடிச்சோம்.

பேசி முடிச்சதுக்கு ஆதாரமா எங்க தோட்டத்து வெற்றிலையோடு பாக்கையும் வச்சோம்.

இப்படியே வஞ்சகம், சூதில்லாமல் சுழன்ற எங்கள் வாழ்க்கைமுறை, இப்போ நஞ்சும் சூதுமா நகருக்குள் நடக்குது.

இந்த நாசவேலையை எப்போது எப்படி தகர்க்க போகிறோம்?
For comments:

@Gopalee67 @crprasadh @iamSri_Sri @naturaize @CVeeraraghavan @aarjeekaykannan @SivaRoobini555 @raaga31280 @VasaviNarayanan @rprabhu

& Others

வாழ்க வளமுடன்
எல்லா நலமுடன்
You can follow @srinivasan19041.
Tip: mention @twtextapp on a Twitter thread with the keyword “unroll” to get a link to it.

Latest Threads Unrolled:

By continuing to use the site, you are consenting to the use of cookies as explained in our Cookie Policy to improve your experience.