இப்படி ஒரு போராட்டம் நடத்தித்தான் பாமக தன்னுடையை இருப்பை காட்டவேண்டும் என நிலை வந்திருப்பது தான் கவலை அளிப்பது. பாமகவின் முதல் எம் எல் ஏ ஆக பண்ருட்டி ராமச்சந்திரன் யானை சின்னத்திலே போட்டிட்டு யானை மேல் ஊர்வலம் போயி சட்டசபைக்குள் நுழைந்ததிலே இருந்து ஆரம்பித்த பயணம்
இன்றைக்கு இங்கே வந்து நிற்கிறது.
இரு கழகங்களோடு மாறி மாறி கூட்டணீ வைத்து தேர்தலை சந்தித்த பாமகவின் அரசியல்வாழ்க்கை 2011 சட்டமன்றதேர்தலோடு முடிவுக்கு வந்துவிட்டது. கடந்த ஒன்பது வருடங்களிலே எந்த ஒரு பெரிய வெற்றியையும் பாமக பெறவில்லை. 2006 சட்டமன்ற தேர்தலிலே 18 சட்டமன்ற
உறுப்பினர்களையும் 2004 நாடாளுமன்ற தேர்தலிலே 5 நாடாளுமன்ற உறுப்பினர்களையும் வென்றது தான் பாமகவின் கடைசி வெற்றிகள்.
இப்போது அன்புமனி ராமதாஸ் மட்டும் மேலவை உறுப்பினராக இருக்கிறார். அதுவும் அதிமுக கூட்டணி கொடுத்தது.
இப்படி இருக்க குருமா சால்னா கோஷ்டிகள் இந்து மதத்தை எதிர்க்கிறோம்
மத்திய அரசை எதிர்க்கிறோம் என ரகளை செய்கிறார்கள் எனவே நாமளும் செய்வோம் என ஆரம்பித்து இருப்பது எந்த விதத்திலும் சரியல்ல.
வன்னியர்கள் தமிழகத்திலே 20% இருக்கலாம் அதற்கு குறைவாக கூட இருக்கலாம். முழுமையான சாதிவாரி கணக்கெடுப்பு இல்லாமல் இதை தெரிந்து கொள்ளமுடியாது ஆனால் அப்படி 20% சதம்
இருக்கும் வன்னியர்கள் ஏன் இவருக்கு ஓட்டுப்போட்டு ஒரு எம் எல் ஏ கூட ஆக்கவில்லை என்பதற்கு பதில் சொல்லவேண்டும்.
வன்னியர்கள் ஒரே குரல் என சொல்லிக்கொள்ளும் பாமகவின் இளைஞர் அணித்தலைவரான அன்புமணி ராமதாஸே பென்னாகரம் சட்டமன்ற தொகுதியிலே தோற்றுப்போனார். பென்னாகரம் தொகுதியிலே
வன்னியர்கள் 50 சதத்திற்கும் மேல் கிட்டத்தட்ட இரண்டு லட்சம் வாக்காளர்களிலே ஒன்னேகால் லட்சம் வாக்காளர்கள் வன்னியர்கள் தான்.
ஆனால் ஏன் அன்புமனி ராமதாஸ் வெறுமனே ஐம்பதாயிரம் ஓட்டுகள் மட்டுமே வாங்கினார்? ஏன் அனைத்து வன்னியர்களும் இவர்களுக்கு வாக்களிக்கவில்லை?
வன்னியர் ஓட்டு
அன்னியருக்கு இல்லை என இவர் சொன்னதை எத்துணை வன்னியர்கள் ஒத்துக்கொண்டார்கள்?
சரி அது கிடக்கட்டும். தேர்தல் அரசியல் தாண்டி வன்னியர்களுக்கு இவரும் இவர் கட்சியும் என்ன செய்துள்ளன?
நாட்டை கொள்ளையடித்த வெள்ளையனின் குற்றப்பரம்பரை சட்டத்தால் ஒடுக்கப்பட்ட சமூகம் வன்னியர்கள் என்பதே பல
பேருக்கு தெரியாது. தேவர்கள் மட்டும் தான் குற்றப்பரம்பரை சட்டத்தால் ஒடுக்கப்பட்டவர்கள் என நானே வெகுநாட்கள் நினைத்திருந்தேன். ஆனால் படையாட்சி என சொல்லப்பட்டுக்கொண்டு வந்த வன்னியர்களும் கடுமையாக ஒடுக்கப்பட்டார்கள்.
படையாச்சி/படையாட்சி எனும் பேரே இப்போது சொல்லப்படுவதில்லை.
எல்லோரும் வன்னியர் என்றே குறிப்பிடப்படுகிறார்கள் என்பது மட்டுமே பாமகவின் ராமதாஸின் சாதனை என்றால் அது மிகவும் கவலை அளிக்கும் விஷயம்.
வன்னியர்கள் தமிழகத்திலே எந்த தொகுதியிலும் பெரும்பான்மை கிடையாது பிரிந்தே இருக்கீறார்கள். இந்த பிரச்சினையை தீர்க்க தனித்தொகுதி என ஆரம்பித்து தனிநாடு
வரைக்கும் கேட்டார் ராமதாஸ் ஏதும் நடக்கவில்லை.
வன்னியர்கள் வியாபாரம் செய்யவேண்டும் என பேசிப்பார்த்தார் அது பேச்சளவிலேயே இருக்கிறது.
வன்னியர் சங்கம், செங்கல்வராய நாயகர் அறக்கட்டளை டிரஸ்ட் உட்பட பலதும் சிக்கலிலேயே இருக்கின்றன. அதற்கான முன்னெடுப்பு போராட்டங்கள் ஏதும்
நடத்தப்படவில்லை.
காடுவெட்டி குருவிலே இருந்து ஆரம்பிட்த்து இன்றைய கார்ட்டூனிஸ்ட் வர்மா வரை அவரால் தள்ளப்பட்ட புறக்கணிக்கப்பட்டவர்கள் தான் அதிகம்.
இன்றைய போராட்டமே வன்னியர்கள் அதிமாக வாழும் மாவட்டங்களிலே பொதுவாழ்க்கையே நிற்கும் அளவுக்கு இருந்திருக்கவேண்டும். அதுவும் இல்லை.
ஏன் இப்படி என பாமகவும் ராமதாஸும் சுயபரிசோதனை செய்யவேண்டும்.
மக்கள் ஆதரவின்றி, மக்களின் ஒத்துழைப்பு இன்றி மக்களின் ஏற்பு இன்றி எந்த ஒரு கோரிக்கையும் முன்னெடுப்பும் வெற்றி பெறாது.
அது எந்த போராட்டமாக இருந்தாலும் சரி.
வன்னியர்களின் முன்னேற்றம் தான் பாமகவின் ராமதாஸின் குறிக்கோள்,
நோக்கம் , லட்சியம் என்றால் நல்ல தலைமையிடம் பாமகவை அளித்துவிட்டு சமூகசேவைக்கு போய்விடுவது நல்லது.
பாமக நாளை பிஜேபி கூட்டணீக்கு வரலாம் இருக்கலாம் ஆனாலும் இந்த விமர்சனம் அப்படியே தான் இருக்கும். @draramadoss
You can follow @YeskayOfficial.
Tip: mention @twtextapp on a Twitter thread with the keyword “unroll” to get a link to it.

Latest Threads Unrolled:

By continuing to use the site, you are consenting to the use of cookies as explained in our Cookie Policy to improve your experience.