ஆங்கிலேயர் வருவதற்கு முன்பே அனைவருக்கும் கல்வி கற்கும் உரிமை இருந்தது என்ற கடைந்தெடுத்த பொய்யை ரங்கராஜ் பரப்பி வருகிறார்

இதற்கு அவர் காட்டும் தரவு Beautiful Tree என்கிற நூல். அது எந்த அளவுக்கு உண்மை என்பதை இந்த இழையில் பார்ப்போம்
இந்த Beautiful Tree நூல், 1926ஆம் ஆண்டு தாமஸ் முன்ரோ என்பவர் அனுப்பிய கல்வி நிலையங்கள் பற்றிய அறிக்கையில் பார்ப்பனர் அல்லாதவர்களும் கல்வி பயின்ற குறிப்பு இருப்பதாக கூறுகிறது.

ஆகவே பிரிடிஷ் வருவதற்கு முன்பே அனைவருக்கும் கல்வி கற்கும் உரிமை இருந்தது என்ற முடிவுக்கு வருகிறது
உண்மையில் அந்த அறிக்கை, ஆங்கிலேயே அரசு நடத்தி வந்த கல்வி நிலையங்கள் பற்றிய அறிக்கை. அதைதான் அந்த Beautiful Tree நூல் திரித்து கூறுகிறது. அதை ரங்கராஜ் போன்றவர்கள் பரப்பி வருகிறார்கள்.

அப்படியானால், ஆங்கிலேயே அரசு எப்போது இந்தியாவில் கல்வி நிலையங்களை துவங்கியது?
1813ஆம் ஆண்டு முதல், ஆங்கிலேய அரசு இந்தியாவில் கல்விக்காக ஒதுக்கிய தொகை எவ்வளவு என்ற விவரம்.

இது 1832ஆம் ஆண்டு அனுப்பட்ட Select Committee அறிக்கையில் இருக்கிறது.

பக்கம் 325
https://www.google.com/books/edition/Appendix_to_the_Report_from_the_Select_C/qmdUAAAAYAAJ?hl=en&gbpv=1&pg=PA325
ஆங்கிலேயர்களும் நம் மேல் கொண்ட அக்கறையினால் கல்வி நிலையம் துவங்கவில்லை. அவர்களுக்கு அலுவலக வேலை பார்ப்பதற்கு ஆட்கள் தேவைப்பட்டார்கள். அதற்காகவே 1812ஆம் ஆண்டு சென்னையில் ஒரு கல்லூரியை துவங்கினார்கள்

பக்கம் 606 https://www.google.com/books/edition/Appendix_to_the_Report_from_the_Select_C/qmdUAAAAYAAJ?hl=en&gbpv=1&pg=PA606
சென்னை கல்லூரிக்கு ஒவ்வொரு ஆண்டும் ஆன செலவு பற்றிய குறிப்புகள்

https://www.google.com/books/edition/Appendix_to_the_Report_from_the_Select_C/qmdUAAAAYAAJ?hl=en&gbpv=1&pg=PA619
1824ஆம் ஆண்டு, வங்காளத்தில் இந்துக் கல்லூரி துவங்கப்பட்டது பற்றிய குறிப்பு

https://www.google.com/books/edition/Appendix_to_the_Report_from_the_Select_C/qmdUAAAAYAAJ?hl=en&gbpv=1&pg=PA331
1825ஆம் ஆண்டு மருத்துவக்கல்லூரி துவங்க முடிவெடுக்கப்பட்டது பற்றிய குறிப்பு

https://www.google.com/books/edition/Appendix_to_the_Report_from_the_Select_C/qmdUAAAAYAAJ?hl=en&gbpv=1&pg=PA312
இது போக 1820களில் துவங்கப்பட்ட பள்ளிகள் பற்றிய குறிப்புகள் இந்த அறிக்கையில் ஏராளமான இடங்களில் காணக்கிடைக்கிறது. அதிலிருந்து ஒரு சில மட்டும்
மகாராஷ்டிரா பள்ளிகளில் பார்ப்பன ஆதிக்கம், குறிப்பாக சித்பவன் பார்ப்பன ஆதிக்கம் இருந்தது என்பது தெரிய வருகிறது

https://www.google.com/books/edition/Appendix_to_the_Report_from_the_Select_C/qmdUAAAAYAAJ?hl=en&gbpv=1&pg=PA300
கல்வி பார்ப்பனர்களுக்கு மட்டுமே கிடைத்ததாக 350ஆம் பக்கத்தில் இருக்கும் வரிகள் கூறுகிறது
சூத்திர இந்துக்கள் இழிவாக நடத்தப்பட்டதால், பார்ப்பன சிறுவனுக்கு எந்த அளவுக்கு கவனம் செலுத்தப்படுகிறதோ அதே அளவு கவனம் சூத்திர சிறுவர்களுக்கும் வழங்கப்பட வேண்டும் என்று ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

https://www.google.com/books/edition/Appendix_to_the_Report_from_the_Select_C/qmdUAAAAYAAJ?hl=en&gbpv=1&pg=PA293
ஆகவே சூத்திரர்களும், ஒடுக்கப்பட்டவர்களும் ஓரளவு கல்வி பயின்றது ஆங்கிலேயர் ஆட்சி இருந்ததால்தான் என்பது தெளிவாகிறது.

இருந்தும் கல்வி நிலையங்களில் அவர்கள் பார்ப்பன ஆசிரியர்களால் ஒதுக்கி வைக்கப்பட்டது அம்பேத்கர், ஜோதிராவ் பூலே போன்றவர்கள் எழுதிய நூல்கள் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
தங்களின் தேவைக்காக ஆங்கிலேயர்கள் அனைவருக்கும் இலவசமாக கல்வி வழங்கினாலும், பார்ப்பனர்கள் தங்கள் ஆதிக்கம் தொடர வேண்டும் என்று நினைத்ததால், அவர்கள் முடிந்த வரை மற்ற சமூகத்தினருக்கு முட்டுக்கட்டை போட்டது இந்த தரவுகள் மூலம் தெரிய வருகிறது.
You can follow @angry_birdu.
Tip: mention @twtextapp on a Twitter thread with the keyword “unroll” to get a link to it.

Latest Threads Unrolled:

By continuing to use the site, you are consenting to the use of cookies as explained in our Cookie Policy to improve your experience.