2016 நவம்பர் 8 நானும் எனது நண்பர் ஒருவரும் கோவையில் உள்ள கோகுலம் பார்க் உணவகத்தில் உணவருந்திகொண்டு இருந்தோம். திடீரென கை தட்டினார்கள்..அண்ணாந்து தொலைக்காட்சியை பார்த்தால் நாம் ஜி ஏதோ பேசிக்கொண்டு இருந்தார்.பின்னர் புரிந்தது பணம் செல்லாது என்ற அறிவிப்பு.எதில் எனக்கு தனிப்பட்ட
பாதிப்பு இல்லை ஏன் எனில் நம்ம கிட்ட வங்கியில் கூட பணம் இல்லை அப்புறம் எங்க கருப்பு பணம். அன்று முதல் தான் முற்றிலும் Anti BJP நிலை. 2012 முதல் கொஞ்சம் கொஞ்சமாக ( சுதேசி புத்தகம் ,தினமலர், தின மணி) மோடி இந்தியாவை அமெரிக்கா போன்று மாற்றுவார் என்று நம்பினேன்
(நிறைய பேரை போல்) அதிலும் எங்கள் ஊர் சர்ச்சில் மனிக்கு முறை கருத்து சொல்லும் ஒரு கருவியை பொருத்தி அது காலை 5 மணி முதல் இரவு 10 மணி வரை ஏதாவது ஒரு கருத்து சொல்லும் ( இப்போது அது இல்லை ஏன் என்று தெரியவில்லை) அப்போது இந்தியாவே கிருத்துவ நாடக மாற்றும் செயல் திட்டம் என்று ஒன்று எங்கோ
படித்தேன்...என் நண்பர் ஒருவர் சுப்ரமணியன் சுவாமி தான் இந்தியாவின் புத்திசாலி என்று என்னை நம்ப வைத்தார். இது எல்லாம் ஒன்று சேர இந்து மதத்தை காப்பாற்ற வேண்டி முழு பொறுப்பு நம்முடையது என்று நினைத்து. யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்று எனக்கு தெரிந்த 10 பேர்துக்கு சுதேசி
புத்தகத்திற்கு பணம் கட்டி விட்டேன்..இரு வருட சந்தா. நாம் இனிமேல் இந்திய தயாரிப்பை வாங்க வேண்டும் என்று பூரம் பதஞ்சலி பொருள்கள். ( கொஞ்சா நாளில் reverse). நான் முழு சங்கியாய இருந்த ஆண்டுகள் 2013 முதல் 2015 வரை.. 2015 முதல் சின்ன சந்தேகம் வந்தது மோடி ஆட்சிக்கு வருவதற்கு முன்
எதையல்லம் எதிர்த்ரி அதை எல்லாம் மின்னல் வேகத்தில் அமுல் படுத்தினார். இருந்தாலும் 60 ஆண்டுகள் காங்கிரஸ் நாசம் செய்ததை சரி செய்ய நேரம் எடுக்கும் என்று சமாதானம் செய்து கொண்டேன். இதற்கு இடையில் இரண்டு நாள் மகாராஷ்டிராவில் உள்ள ஜல்கான் சென்றேன். அங்கு காலையில் rss சாகா நடந்தது
உண்மையில் அமைப்பு ரீதியா பார்க அழகாக இருந்தது. என் மகனுக்கு 3 வயது அவனை ஒரு மாபெரும் rss காரணாக வளர்த்துவது என்று முடிவோடு வந்தேன். மறுநாள் எங்கள் ஊரின் பாரதிய ஜனதா நபர் ஒருவரை அழைத்து நீங்கள் நடத்தும் சாகாவிற்கு அனைத்து உதவிகளையும் நான் செய்கிறேன் . ஐந்து வயது ஆனவுடன் என் மகனையு
அனுப்புகிறேன் என்று வாக்கு கொடுத்தேன்(அவர்கள் ஒன்றும் செய்யவில்லை என்பது வேறு விடியம்) .அவர்கள் நம் விநாயகர் கோவிலில் மணிக்கு ஒரு முறை கருத்து சொல்லும் கருவி வேண்டும் என்றனர். சுதேசியில் அதன் விளம்பரம் வந்தது வாங்கி கொடுத்தேன். நான் இந்து என்று காரில் எழுதாது ஒன்று தான் குறை.
இத்தனைக்கும் மத்தியில் 2014 ல் திமுகவிற்கு தான் ஓட்டு போட்டேன்.எங்கள் தொகுதியில் பாரதிய ஜனதா கூட்டணி போட்டியிடவில்லை. இன்னு வரை இரட்டை இலைக்கு ஒட்டு போட்டதில்லை. 2016 முதல் எங்கியோ தப்பா இருகிதே என்று யோசிக்க ஆரம்பித்தேன் ..கிட்ட தட்ட செப்டம்பரில் ஓ இவுநுக ஆகாது என்று எனக்குள்
முடிவு செய்துவிட்டேன். சரியாக பண மதிப்பு இழப்பு அறிவித்த உடன் என் சிந்தனையில் வந்தது இது மக்களுக்கான ஆட்சி அல்ல . புதிய யாரும் தொழில் செய்ய வரகூடாது என்று செய்கிறார்கள்..பணக்காரர்கள் மேலும் பணக்காரர்கள் ஆக வேண்டும். ஏழைகள் மேலும் ஏழைகள் ஆக வேண்டும் என்ற கொள்கை கொண்ட ஆட்சி இது.
சரி... அதன் பின் விழுந்த விதை தான் திராவிடம் என்றால் என்ன? அது முதல் கொஞ்சம் கொஞ்சமாக திராவிட அரசியலை புரிந்து கடைசி இரு மாதகளாக தான் என்னை நான் நிலைப்படுத்தி இருக்கிறேன்.எந்த கட்சி மாநில சுயாட்சியை மற்றும் சமூக நீதிக்கு ஆதரவாக இருக்கிறது என்று புரிந்தது திமுக அன்று முதல்
இன்று வரை அவர்களால் முடிந்தவரை போராடுகின்றன. நாம் திமுக கட்சிகாரனாக இல்லாமல். நம்மால் அரசியல் முடியாது நாம் அனுதாபியாக இருப்போம். கிட்ட தட்ட எனக்கு திராவிட அரசியல் புரிய 4 ஆண்டுகள் ஆகியது..
You can follow @KRCPRADEEP1.
Tip: mention @twtextapp on a Twitter thread with the keyword “unroll” to get a link to it.

Latest Threads Unrolled:

By continuing to use the site, you are consenting to the use of cookies as explained in our Cookie Policy to improve your experience.