இது எப்படி சாதியம் ன்னு ஒரு DM Question.
சாதியம் ன்றது தன் சாதியை விட தாழ்ந்தது எனக்கருதப்படும் இன்னொரு சாதியைச் சேர்ந்த இன்னொரு மனிதன் மீது காட்டப்படும் பாகுபாடு / ஆதிக்கம் என்றும், அல்லது இந்த tweet க்கு வந்த Quote Reply போல Caste Privileges / Identities ஐ இலைமறை காயாக வெளிப்படுத்துவதாக மட்டுமே நினைத்துக்கொள்கிறோம்.
இந்த இரண்டும் (கோயிலில் கருவறைக்கு வெளியே நின்றுகொள்வது / திருமண நிகழ்வில் பார்ப்பனரை அழைத்து மந்திரம் சொல்லவைப்பது) பார்க்க மதச்சடங்காக தெரியும். ஆனால் அது சாதிச் சடங்கு. பார்ப்பான் - கடவுள் கூட்டுசதி.
கோயில் அர்ச்சகர் என்பது இறை / பக்தி செயல்பாடு அல்ல. சாதி!

நல்லா விளையாடுகிற குழந்தையை sports personality ஆக , வரைகிற குழந்தையை ஓவியர் ஆக ஊக்குவிக்கிற மாதிரி எந்த பக்தி நிறைந்த குழந்தையையாவது உன்னை கோயிலில் அர்ச்சகர் ஆக்குகிறேன் னு சொல்கிறோமா?
பார்ப்பான் வந்து தீ வளர்த்து புரியாத மொழியில் மந்திரம் சொல்லி, திருமணம் செய்துகொள்ளும் உரிமை இல்லாத சூத்திரனுக்கு திருமணம் செய்து வைக்கிறேன்னு சொல்லவைக்கிறோமே? கல்யாண cardல போட்டுருக்க பொண்ணு & மாப்பிள்ள 2 வழில இருக்கும் குல தெய்வங்கள் சாட்சியாக திருமணம் ன்னு சொல்றோமா?
யார் மீதும் ஆதிக்கம் செய்யும் மனநிலை இல்லாத ஓர் இந்து கூட இந்த இரு இடங்களிலும் சாதியை மீறுவதில்லை. அதாவது இன்னொரு சாதிக்கு தான் குறைந்தவன் என்கிற தாழ்ந்த நிலைக்கு தன்னையேத் தள்ளிவிடுகிறார்.

இது இயல்பாக தலைமுறை தலைமுறையாக நடக்கிறது, கடத்தப்படுகிறது.
யாரையும் அவமானப்படுத்தாத செயல்பாடு ன்னு சொல்லிக்கொண்டாலும் அது சமாளிப்பு தானே?

நம்மை நாமே அவமானப்படுத்துனா அது அவமதிப்பு இல்லையா?

கட்டு, சம்பிரதாயம், முறை, சாத்திரம்ன்னு என்ன பேருன்னாலும் வச்சிக்கோங்க.

சாதியம் தானே இது?
வராது வந்த மாமணியாக, நம் நெஞ்சமெல்லாம் நிறைந்த பேரறிஞ பெருந்தகை வந்தார், அக்கினி சாட்சி இல்லாம நடந்தாலும் திருமணம் சட்டப்படி செல்லும் என்றார். சட்டம் வந்தது, நம் மனதில் இருந்த சாதிய conditioning போய் விட்டதா?
அண்ணாவின் தம்பி, உயிரினும் மேலான உடன்பிறப்பு கலைஞர் வந்தார், பெரியார் நெஞ்சில் தைத்த முள்ளாக இருந்த கருவறையில் பேதம் என்ற இழிவு போக அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்று சட்டம் இயற்றினார்.

சமூகத்தில் பக்தியின் பெயரால் நடக்கும் இந்த இருந்த சாதிய conditioning போய் விட்டதா?
You can follow @NeoDravidian.
Tip: mention @twtextapp on a Twitter thread with the keyword “unroll” to get a link to it.

Latest Threads Unrolled:

By continuing to use the site, you are consenting to the use of cookies as explained in our Cookie Policy to improve your experience.