பைஜூ இது ஒரு பெரிய ட்ராப் என்பது மட்டும்தான் நிஜம். எங்கயோ ஒரு மூலைல பசங்கள நேருக்கு நேர் உக்கார்ந்து தலைல தட்டி சொல்லி தர்ர வாத்தியாருங்க எல்லாரையும் பங்கமா ஒன்னும் தெரியாது னு ஒரு மாயை உருவாக்கிட்டாங்க. இதுல 10% கூட பெருசா உழைப்பு இல்லை. உழைப்பும் சுரண்டல் மட்டுமே
எங்கயோ ஒரு பக்கம் ஹோம் டியூஷன் எடுத்த என்னை 2017 வாக்குல இதுல இழுக்கப்பாத்து நானும் விழப்பாத்தேன். இதுல இந்த பைஜூ ஓனர் ரவீந்திரன் பேசுறத கேட்டா ஐஐடிலாம் ஈஸியா உள்ள நுழைய முடியும் போல நீட்லாம் மிட்டாய் சாப்பிடுறமாதிரி. கான்செப்ட் அப்ளிகேஷன் மட்டும்தான் எல்லாம்னு பேசுவார்.
இவங்க மார்கெட்டிங் ஸ்டாடர்ஜி எல்லாமே மிடில் ஆர் அப்பர் மிடில் கிளாஸ் மக்களுக்குத்தான். சுமாராக ஒரு மாட்யூல் வாங்கனுமா குறைஞ்சது 70000. இது வாங்கிட்டா டியூஷனே வேணாம். அடுத்த டாப்பர் உங்க பிள்ளைதான் னு வாய்லையும் காதுலையும் மாறி மாறி வீட்டுக்கே வந்து OTMP அடிப்பாங்க.
வெறும் ஸ்கூல் மாட்யூல் மட்டும்தான் அவன் டார்கெட்னு நினைச்சா ஓஸ்மௌனு ஒரு கேமிங் கம்பெனி வாங்குவான். அவனுக்கு டார்கெட் 5 கிளாஸ் வரை இருக்கவனுக்கு வீடியோ கேம்ல கான்செப்ட் சொல்றதாம்(பிட்டு வீடியோ பாத்து செக்ஸ் பன்றத கத்துக்குறதுக்கு ஈகுவல்). போடா பீஃப்னு நினைச்சா
அடுத்த டார்கேட் சிவில் சர்வீஸ் கேட் எக்ஸாம் இப்படி நுழைஞ்சான்
. படிக்கும் போது 10000 ரூபாய் மாதிரி இத வாங்குனாலே ஐபிஎஸ் ஆர்டர் ஆன் தி வேனு சொல்லுவாங்க. வெறும் 250 கோடிதான் அவன் டர்ன்ஓவர் எப்ப 2017 ல வெறும் மூனு வருஷம் 2019ல 1500 கோடி, 2020 இன்னும் எகிறும்.
த்தா இவ்வளவு முட்டா பயலுங்களாடானு பாத்தா இவன்கிட்ட வேலைல இருக்க டீம்ல பாதிக்கு மேல் ஐஐடி பிரஜைகள். அவங்களுக்கு மந்த்லி சேலரி ஆங்கிலம், ஹிந்தில இருந்த இவன் இப்ப ரீஜனல் லாங்க்வேஜ் உள்ள வந்துட்டான். தமிழ்நாடு ஸ்டேட் போர்டு மாடியூல் ரெடி பன்னிட்டான். இங்க இருக்கவங்க
எல்லாரும் மினிமம் 10-14 மணிநேரம் கண்டென்ட் ரெடி பன்னுவாங்க. அதை இவன் சுரண்டி திங்கான். இதெல்லாம் விட பெரிய டக்கால்ட்டி whitehat jr தான். என்னமோ கோடிங்ல 14 வயசு பையன் லட்சத்துல சம்பாதிக்குறானு ஆரமிச்ச விளம்பரம் பல பேர கடனாளி ஆக்கிட்டு.
உருவமே இல்லாத குப்தா ஓநாய்(உல்ப் குப்தா) அப்படி ஒரு கேரக்டர் உருவாக்கி காமன் பீப்புல உள்ள இழுத்து ஏமாத்துறான். இதை சொல்லப்போய் பக்கத்து வீட்டு மாமா என் மவன் சிஸ்டம் ஆர்கிட்டெக்கா மாறுறது பிடிக்காம கட்டையை போடுறேனு பேசுறதே இல்லை. ப்ராப்பர் ப்ரோகிராமிங்கு முன்னாடி
கொஞ்சம் ஸ்டெப்ஸ் இருக்கு. அதெல்லாம் நொட்டாம கோடிங் தான் நொட்டுவாறாம். இதை நம்பி பசங்க லைஃப் தொலைச்சுடாதீங்க. உங்க புள்ளைக்கு நல்லது பன்னனுமா கோடிங் ஸ்கில் வரனுமா ரெண்டு ஆர்டினோ போர்டு கொஞ்சம் எலக்ட்ரானிக் காம்போனென்ட் அதிகபட்சம் 1000 ரூபாய் அவனுக்கு பிடிச்ச கோடிங்
இம்ப்ளிமென்ட் கூட பன்னலாம் . ஆட்டோமேஷன் ரோபோடிக்ஸ் பின்னலாம். பட் பைஜூ டேப், வோயிட் ஹேட் போனீங்க காசு கொடுத்து பைத்தியம் வாங்குற கதை. தயவு செஞ்சு ஆன்லைன் டீச்சிங் பெருசா நம்பாதீங்க. பைஜூ மட்டுமில்ல அனாக்கடமி, வேதாந்து இப்படி எல்லாமே.
இங்க நல்லா சொல்லிதர்ர வாத்தியாருங்க பலர் இருக்காங்க. கற்றல் கற்பித்தல் என்பது ஒரு ஆர்ட். எல்லாருக்கும் ஈஸியாக வராது. பட் முயற்சி &தேவையான கால அளவு இருந்தா எல்லாரும் டாப்பர். இதுதான் நிஜம். வில்ஸ், பெப்ஸி ஓப்போ இதையெல்லாம் தான்டி இப்ப இந்தியன் டீம், கேரளா எப்ஃசி
இப்படி முழு ஸ்பான்சர் ஆகுற அளவு பணம் கொட்டுதுனா அது நம்ம அறியாமை மட்டும்தான். கடிவாளம் கட்டப்பட்ட குதிரையாக பிள்ளைகளை மாத்திடாதீங்க. அம்புட்டு தான் சொல்வேன். பொழச்சுக்கோங்க
You can follow @bharath_kiddo.
Tip: mention @twtextapp on a Twitter thread with the keyword “unroll” to get a link to it.

Latest Threads Unrolled:

By continuing to use the site, you are consenting to the use of cookies as explained in our Cookie Policy to improve your experience.