ஆண்கள் உட்கார்ந்து ஒன்னுக்கு போலாமா?
👇👇
அலுவலகம் ,பொது இடங்களில் மட்டுமே urinal இருக்கும். வீடுகளில் ஆண் பெண் இருவருக்கும் ஒரே Toilet தான்.

மொத்த குடும்பமும் அதைப் பயன்படுத்த வேண்டும்.
இந்தியாவில் பெரும்பான்மையாக உள்ள Squat toilet (குத்தவைக்கும் கக்கூசு?) மற்றும் Western Toilet எனப்படும் Sitting Toilet இரண்டிலுமே ஆண்கள் ஒன்னுக்குப் போவதில் சில அநியாயங்கள் உள்ளது.
Squat Toilet ல் நின்றபடியே ஒன்னுக்குப் அடிப்பதில் , சுற்றிலும் சிதறி, அந்த இடம் முழுக்க தெறிக்கும். இதை தவிர்க்கவே முடியாது. நீர் ஊற்றும் போது தரை முழுக்க ஊற்றி கழுவாவிடில் கக்கூசு நாறிவிடும்.
Sitting Toilet ல் ஆண்கள் ஒன்னுக்கடிக்க அதன் seat & cover ஐ தூக்கிவிட்டு அடிக்கவேண்டும். என்னதான் குறிதவறாமல் ஒன்னுக்கு அடித்தாலும் , விளிம்பு பகுதிகளில் சிதறுவதும் , இறுதியில் வரும் துளிகள் விளிம்பில் படுவதும் அடிக்கடி நடக்கும்.

இதை உடனுக்குடன் துடைக்காவிடில் கக்கூசு கலராயிடும்
ஆண்கள் சிதறி சிந்தி அடித்து குப்பையாக்குவது மட்டுமில்லாமல், திறந்து நிறுத்திய toilet seat&cover ஐ அப்படியே விட்டுவிட்டு வருவது , வீட்டில் உள்ள பெண்களுக்கு இம்சை.

ஆம் அவர்கள் உட்கார்ந்து போக seat&cover ஐ கையால் தொட்டுத்தானே இறக்கவேண்டும்?
பல குடும்பங்களில் இது பிரச்சனை. ஆண்குழந்தைகளுக்கு இதை அவசியம் கற்றுக் கொடுக்க வேண்டும்.

Seat &Cover ஐ கீழே இறக்கிவிட்டு வருவதும், சிந்தி சிதறிய ஒன்னுக்கை toilet விளிம்பில் இருந்து துடைத்துவிடவும் சொல்லித்தரவேண்டும்.
வீடுகளில் உள்ள Western Toilet களில் ஆண்களும் உட்கார்ந்து ஒன்னுக்குப் போகலாமா?

போகலாம். ஏன் கூடாது?

நின்று ஒன்னுக்குப் போவது ஆண்களுகாகு ஒரு additional feature தானே தவிர அதுவே/ அதுமட்டுமே சரி என்பது அல்ல.
சிறுநீரகமோ அது சார்ந்த உள் உடல் அமைப்புகளோ ஆணுக்கும் பெண்ணுக்கும் ஒன்றுதான். எனவே வீடுகளில் sitting toilet களில் உட்கார்ந்து ஒன்னுக்குப்போவது தவறல்ல. அவமானமும் அல்ல.

சோம்பேறித்தனத்தை தவிர்த்தால், அதில் பல நன்மைகள் உள்ளது. https://www.menshealth.com.au/peeing-sitting-down-is-good-for-the-prostate
டவுசரைக் கழட்ட வேண்டும் அது ஒரு கூடுதல் வேலை, ஆனால் வீடுகளில் ஆண்களும் உட்கார்ந்து ஒன்னுக்குப் போவதால், சிந்தி சிதறி toilet rim பகுதியில் குப்பையாக்குவது தவிர்க்கப்படும்.
It's perfectly ok and good to follow in home. இது bathroom ஐ சுத்தமாக வைக்க உதவுவதோடு, seat & cover ஐ மூடாமல் வருவது, aim தவறி mess ஆக்குவது போன்ற சிக்கல்களில் இருந்து விடுதலையும்கூட.😀😀

#Urine
#Urinal
#Toilet
#Pee
#Men
You can follow @kalvetu.
Tip: mention @twtextapp on a Twitter thread with the keyword “unroll” to get a link to it.

Latest Threads Unrolled:

By continuing to use the site, you are consenting to the use of cookies as explained in our Cookie Policy to improve your experience.