டேட்டூ அடிக்க விரும்புபவர்களுக்கு:

டேட்டூ அடிச்சிருக்கவங்கள பாத்தா சிலர் ஒரு மாதிரி சீப்பா பாக்குறாங்கங்கிறது சினிமா ஏற்படுத்தின தாக்கம். ஹோரோ லாம் டாட்டு போட்டிருக்க மாட்டார், வில்லன் கேரக்டர் நாலே ஒரு கையில சிகரெட், ஒரு கையில விஸ்கி, கை முழுக்க டேட்டூ, பெரிய தாடின்னு இவங்க
காமிச்சு பழகிட்டாங்க, நம்மளும் பாத்து பழகிட்டோம். டேட்டூ ங்கிறது கிட்டத்தட்ட அழகுபடுத்துதல் மாதிரியான விசயம். மனித உடம்புல நிரந்தரமா செய்யக்கூடிய மாற்றம். கிட்டத்தட்ட ஹாஸ்பிட்டல் ல செஞ்சுக்கிற ஆப்பரேஷன் மாதிரி. எல்லோரும் டாட்டூ அடிக்கிறாங்கன்னு நாமளும் எதாச்சும் அடிக்க கூடாது
நீங்க டாட்டூ அடிக்கிற விசயம் உங்க ஒட்டுமொத்த வாழ்க்கை சம்மந்த பட்டதா இருக்கனும், சாகுற வரைக்கும் சலிப்பு தட்டாத காரியமா இருக்கனும். அந்த டாட்டூவ பாக்குறப்பலாம் நீங்க முதல் தடவ அந்த டாட்டூவ பாக்குறப்ப இருந்த உற்சாகம் இருக்கனும். சின்ன டிசைன் தான்/ விலை கம்மியா இருக்கு/
ப்ரெண்ட் டாட்டூயிஸ்ட்/ இப்டி மொக்க காரணத்துக்காக லாம் டாட்டூ போட்டுக்காதீங்க. ஒரு டாட்டூ அடிக்கனும்னு முடிவு பண்ணிட்டீங்கன்னா, என்ன அடிக்கனும்னு செலக்ட் பண்ணிட்டு உடனே போய்டாதீங்க, கொஞ்ச நாள் வெயிட் பண்ணுங்க, ஒன்றிரண்டு மாதங்கள். அந்த கேப்ல மனம் மாறல்லன்னா போட்டுக்கோங்க.
அப்றம் இந்த காதலி பெயர், நண்பர் பெயர் லாம் தேவையில்லாத ஆணி. ரொம்ப ஆசைப்பட்டா கல்யாணம் பண்ணிக்கிட்ட அப்றம் மனைவி பெயர பச்ச குத்திக்கோங்க. நினைவிருக்கட்டும் மக்களே காலம் உங்கள எத்தன கல்யாணம் வேனாலும் பண்ணா வைக்கும். நண்பன் டாட்டூ கடை ஆரம்பிச்சிருந்தான்,
விறுவிறுன்னு ஓடிப்போயி காதலி பெயரை டாட்டூ போட்டுக்கிட்டேன். முதல் டாட்டூ அது. இப்ப வேற ஒருத்தரோட கல்யாணம் ஆகி போயிட்டாங்க. என் கையில அந்த டாட்டூ இப்ப தேவையில்லாத ஆணி. இரண்டாவது டாட்டூ பாரதி, டிசைன் செலக்ட் பண்ண அப்றம் கிட்டத்தட்ட ஒரு வருசம் மேல யோசிச்சு போட்டுக்கிட்டேன்
மூனாவது டாட்டூ போடலாம்னு ரண்டு வருசமா யோசிச்சுட்டிருக்கேன். இப்பதான் சின்னதா ஐடியா வந்திருக்கு. டிசைன் ரெடி பண்ணிட்டு ஆறு மாதம் அப்றம் போட்டுக்கனும். நீங்க செலக்ட் பண்ற டிசைன் உங்க வாழ்க்கையோட சம்மந்தப்பட்டதா இருக்கனும். உதாரணத்துக்கு நண்பன் வாலிபால் ப்ளேயர், மீனவன்.
சும்மா எதாச்சும் டாட்டூ போடனும்னு சொன்னான், இங்க சொன்னதெல்லாம் தான் அவன்கிட்டயும் சொன்னேன். அப்றம் ரொம்ப நாளுக்கு அப்றம் அவனே ஐடியாவோட வந்தான். “மச்சான் கடல்ல இருந்து குதிக்கிற டால்பின், அதோட நீளமான வாயால வாலிபால் அடிச்சு விளையாடுற மாதிரி” ன்னு. டிசைன் ரெடி பண்ணி ரொம்ப
நாளுக்கப்புறம் போட்டுக்கிட்டான். சாகுற வரைக்கும் அவனுக்கு பிடித்தமான இரண்டு விசயங்கள் அது. சலிப்புக்கு வாய்ப்பே இல்லை. நல்ல யோசியுங்க, உங்க உடம்புல நீங்க பன்னிக்கிற அறுவை சிகிச்சை இது. ஸ்கூல், காலேஜ் பசங்கலாம் கொஞ்சம் வெயிட் பண்ணுங்கப்பா. டேஸ்ட் மாறிக்கிட்டே இருக்க வயசு அது.
25 வயசு, குறைந்தது 23 வயதாவது ஆகட்டும். மனம் ஒரு நிலைக்கு வரட்டும். அப்றம் நல்ல டாட்டூயிஸ்ட், நம்மள வச்சு ட்ரயல் பாக்கலாம் கூப்டுவானுங்க. விலை குறைவா தான இருக்குன்னு கைய கால குடுத்துராதீங்க. அதுக்கு முன்னாடி பண்ண வொர்க் போட்டொஸ் லாம் பாருங்க, முடிஞ்சா ஆல்ரெடி அவர்கிட்ட யாராச்சு
போட்டிருக்க டாட்டூவ நேர்ல பாருங்க. திருப்தியா இருந்தா மட்டும் போட்டுக்கோங்க. நல்ல டாட்டூயிஸ்ட் கிடைக்கலன்னா சொல்லுங்க சர்டிபிகேட், மிசினோட நானே வர்ரேன் கொஞ்ச நாள்ள...
நினைவிருக்கட்டும்,
“காதல், தாம்பத்யம் தாண்டி சவப்பெட்டி வரைக்குமானது இந்த டாட்டூஸ்”
You can follow @Frompadippaham1.
Tip: mention @twtextapp on a Twitter thread with the keyword “unroll” to get a link to it.

Latest Threads Unrolled:

By continuing to use the site, you are consenting to the use of cookies as explained in our Cookie Policy to improve your experience.