இன்றைய திரைப்படங்கள் இளைஞர்களுக்கு என்ன பாடத்தை தர எடுக்கப்படுகிறது என்று‌ எனக்கு எதுவும் புரியவில்லை!! காரணம் நேற்று பிரைம் வீடியோவில்

சூரரை போற்று

படம் பார்த்தேன். மிகவும் மனவேதனை அடைந்தேன்.
காரணம், எந்த லட்சியத்தை மேற்கோள்காட்டி படம் எடுத்தார்களோ, அவை அனைத்தும் வீணாகிவிட்டது.

ஒரு காட்சியில் கதாநாயகனின் தந்தை மரணதறுவாயில் இருப்பதால், அவரை உடனே ஊருக்கு வரும்படி அவரது தாயார் தொலைபேசியில் அவருடன் பேசுகிறார். உடனே இவர் ஊருக்கு போக ஏர்போர்ட் வருகிறார்.
அங்கே அவருக்கு, எக்கானமி வகுப்பு கட்டணங்கள் முடிந்து விட்டது, ஆகவே பிஸ்னஸ் வகுப்பில் செல்ல கட்டணம் கேட்கிறார்கள். அவரிடம் அதற்கான பணம் இல்லாமல் அவர் அங்கே உள்ள மற்ற பயணிகளிடம் பணம் கேட்டு மண்டியிட்டு கெஞ்சும் விதமாக காட்சி அமைக்கப்பட்டுள்ளது.
இது தவறானது. காரணம், நமது இந்திய இராணுவத்தில் பணிபுரிவர்களுக்கு என்று இரயில், மற்றும் விமான போக்குவரத்துகளில் கோட்டா இருக்கும்.அதுவும் இல்லாமல், எந்த ரெஜிமெண்ட்டில் பணிபுரிகிறார்களோ, அந்த ரெஜிமெண்ட் வாரண்ட் தந்து தான் அனுப்பி வைக்கும். இது நமது இந்திய தரைப்படையில்.
அதுவும் கதாநாயகன் இந்திய விமானப் படையின் கேப்டன் என்று வருகிறது. விமானப்படையில் கேப்டன் என்று பதவி உள்ளதா? என்று எனக்கு தெரியவில்லை.
அப்படி கேப்டன் அந்தஸ்து பெற்ற அதிகாரிகள், பணம் செலுத்திதான் டிக்கெட் வாங்க வேண்டியது இல்லை.
அவரது அலுவலகமே டிக்கெட் எடுத்துக் கொடுக்கும் . இப்படி எல்லார் காலிலேயும் மண்டியிடும் நிலையில் இந்திய நாட்டின் எந்த இராணுவ வீரர்களும், கிடையாது. காரணம் நமது நாட்டின் ஒவ்வொரு இராணுவ வீரரும் எந்த சூழ்நிலையையும் சந்தித்து அதில் வெற்றி பெற்று முன்னேறும் வீரர்கள் மட்டுமே!!!
ஆகவே படத்தில் வரும் இந்த காட்சி அமைப்பு ஒரு தவறான பதிவு. இதனை முன்னாள் இராணுவ வீரன் என்ற முறையில் வன்மையாக, நான் கண்டிக்கிறேன்.

பாரத் மாதாகி ஜே!!
காவல்துறை, மற்றும் இராணுவ துறையை அவமதிக்கும் காட்சிகளை நாம் நிச்சயமாக, கண்டிக்க வேண்டும். நாட்டின் முக்கிய இரண்டு கண்கள்.
ஒன்று, காவல்துறை, மற்றது நாட்டின் இராணுவத் துறை!

நன்றி

வணக்கத்துடன்
கியோசி கராத்தே C மாரியப்பன்

Via Whatsapp

#சூரரைபோற்று
#சூரரைப்போற்று
#சூரரைப்போற்றுவோம்
You can follow @Radhakris1975.
Tip: mention @twtextapp on a Twitter thread with the keyword “unroll” to get a link to it.

Latest Threads Unrolled:

By continuing to use the site, you are consenting to the use of cookies as explained in our Cookie Policy to improve your experience.