இண்டஸ்ட்ரி ஹிட் IH

அப்டினா என்ன ஒரு படம் வெளியாகி வசூல் அளவில் மிகப்பெரிய வெற்றி பெற்று புது சாதனை படைத்தது என்றால் அது தான் IH தமிழ் சினிமாவின் முதல் IH பாகவதர் கொடுத்தார் பின் எம்.ஜி.ஆர் 5 முறை சிவாஜி 3 முறை கொடுத்தனர்
கமலுக்கு முன் ரஜினி தான் IH என்ற இலக்கை எட்டினார் சிவாஜி அவர்களின் திரிசூலம் படத்தின் வசூலை முந்தி முரட்டுக்காளை என்ற மாபெரும் வெற்றி படத்தை கொடுத்தார்

அதுவரை அதாவது சற்றே குறைய 30 ஆண்டுகள் எம்.ஜி.ஆர் சிவாஜி கையில் இருந்த தமிழ் சினிமா ரஜினி கையில் வந்தது
ரஜினி தான் இளம் தலைமுறையின் கதவை திறந்தவர் பின் இந்திய சினிமாவில் 5 மொழிகளிலும் வெள்ளி விழா கொண்டாடிய கமல்ஹாசன் தன் முதல் IH கொடுத்தார்

அது தான் சகலகலாவல்லவன்
பின் அந்த சாதனையை பாக்கியராஜ் அவர்கள் தன் முந்தானை முடிச்சு படத்தில் முறியடித்தார் அந்த சாதனையையும் ரஜினி என்ற ஆளுமை படிக்காதவன் என்ற வெற்றியின் மூலம் உடைத்தது

அன்று முதல் ரஜினி கோலோட்ச தொடங்கிவிட்டார்
பின் தான் செய்த சாதனையை தானே முறியடித்து ஒரு பென்ச்மார்க் செட் செய்தார்

கமலுக்கு ரஜினியின் சாதனையை தொட 5 ஆண்டுகளுக்கு மேல் தேவைபட்டது
அபூர்வ சகோதரர்கள் மூலம் ரஜினி மனிதன் படத்தின் சாதனையை முறியடித்தார் கமல்
கமலின் சாதனையை தளபதியில் உடைத்தெரிந்த ரஜினி தன் சாதனையை மீண்டும் அடுத்த ஆண்டில் மன்னன் மூலம் முறியடித்தார்.

ரஜினியின் முழு ஆதிக்கம் தொடங்கிய காலம் இது தான்
ஆம் தொடர்ந்து மூன்று IH அதுவரை எந்த நாயகனும் செய்திடாத சாதனை

ரஜினிக்கு அவரின் உச்சபட்ச வியாபர நிலை இது தான் என்று சொல்லிவிட முடியாது
ரஜினியின் சாதனையை கமல் தேவர்மகன் மூலம் முறியடிக்க அந்த சாதனையை ரஜினி பாட்ஷா என்ற மிகப்பெரிய வெற்றியுடன் தகர்த்தார்

அந்த வெற்றியை கமல் ஷங்கர் கூட்டணியில் உருவான இந்தியன் தகர்த்தது இது தான் தமிழ் சினிமாவின் non ரஜினி IH அந்த படத்திற்கு பிறகு இன்று வரை ரஜினி வைப்பது மட்டுமே IH
கமலின் இந்தியன் செய்த சாதனையை ரஜினி தன் படையப்பா என்னும் வெற்றியின் மூலம் தகர்த்தார்

அன்று முதல் இன்று வரை ரஜினி தான் எல்லா IH சொந்தக்காரர்

அவர் சாதனையை முறியடிக்க இன்னும் 10-15 ஆண்டுகள் கூட ஆகலாம் அது காலம் தான் பதில் சொல்லும்

ரஜினி என்னும் காந்தம்
You can follow @PrithivirajK89.
Tip: mention @twtextapp on a Twitter thread with the keyword “unroll” to get a link to it.

Latest Threads Unrolled:

By continuing to use the site, you are consenting to the use of cookies as explained in our Cookie Policy to improve your experience.