#Thread
நிதிஷ் குமாரின் அஸ்தமனம்.

4வது முறையாக பீகார் முதல்வராக இன்று நிதிஷ் குமார் பதவியேற்றார்.

#பாஜக என்கிற கட்சி உப்பு மூடை சவாரி செய்து கொண்டே தங்களுக்கு இருக்க இடம் கொடுத்த வீட்டை எப்படி தீயிட்டு கொளுத்தும் என்பதற்கு நிதிஷ் குமாரின் கதை ஒரு சாட்சி.
ஓரு சோசலிஸ்டாக தொடங்கி, ஜெயபிரகாஷ் நாராயனன், ராம் மனோகர் லோகியா, வி.பி.சிங் என இந்திய வரலாற்றின் முக்கிய ஆளுமைகளுடன் கை கோர்த்து அரசியல் செய்த நிதிஷ் குமார் தனது அதிகாரத்தை தக்க வைக்க, பதவியை தக்க வைக்க மோடி-அமித் ஷாவுடன் கூட்டணி வைத்தார்.
மோடி-அமித் ஷா கூட்டு என்பது கூடா நட்பு என்பதை நிதஷ் குமார் தேர்தலின் முடிவுகளின் வழியே அறிந்தால் கூட இனி எதனையும் அவர் சரி செய்ய முடியாது, இன்றைய இரவு அவருக்கு பாரம் நிறைந்த இரவாகவே இருக்கும்.

சிராக் பாஸ்வான் மீண்டும் மீண்டும் வெளிப்படையாகவே சொல்லி வருகிறார்,
நான் பிகாரில் பாஜகவை பலப்படுத்தவே இந்த தேர்தலில் நிதிஷ் குமாருக்கு எதிராக களம் கண்டேன். சிராக் பாஸ்வானை மோடி-அமித் ஷா என்கிற இருவரால் கட்டுப்படுத்த முடியவில்லை என்பது எத்தனை பெரிய கதை. ஆனால் நிதிஷ் குமாரிடம் அப்படி ஒரு கதை சொல்லப்பட்டது.
15 ஆண்டுகள் ஆட்சி செய்த நிதிஸ் குமாரின் கட்சி 43 இடங்களில் வென்றது ஆனால் ஆட்சியே செய்யாமல் அந்த கூட்டணியில் இடம் பிடித்த பாஜக கட்சி 74 இடங்களில் வெல்கிறது. நிதிஷ் குமார் பதவி போதையில் மயங்கிய நிலையில் தன் அஸ்தமனத்தை தானே ரசித்துக் கொண்டிருக்கிறார்.
தமிழக அரசியல் கட்சிகள் இதில் இருந்து கற்க வேண்டிய பாடங்கள் நிரம்ப கிடக்கு. மதவாதம், சாதி, சனாதனம் என்கிற அருவருக்கதக்க விசயங்களை தூக்கிக் கொண்டு தமிழகத்திற்குள் நுழைய முற்படும் பாஜக என்கிற கட்சியை நாம் இங்கே கூட்டணி வைத்து வளர்த்துவிடப் போகிறோமா.
#பாஜக உப்பு மூட்டை சவாரி செய்த கட்சிகளின் நிலை என்ன என்பதற்கு நிதிஷ் குமார் ஒரு சாட்சியம். அது மட்டுமின்றி தமிழகம் என்பது சுயமரியாதை, சமூக நீதி தொடங்கி பாஜக ஆட்சி செய்கிற மாநிலங்கள் எதனுடம் ஒப்பிட முடியாத உயரத்தில் இருக்கும் மாநிலம், நம் உயரம் என்ன என்பதை பல நேரங்களில்
நாம் உணராமல் இருப்பது தான் நம்முடைய பலகீனம். தமிழகம் தொடர்ந்து இந்தியாவின் நம்பர் 1 மாநிலமாக திகழ்கிறது.

தமிழகத்தை இந்தியாவின் எந்த ஒரு மாநிலத்துடனும் நீங்கள் ஒப்பிட முடியாது. பொது விநியோக முறை, சுகாதாரம், கல்வி, அரசு பள்ளிகள், ஆசிரியர் மானவர் விகிதம், பொறியியல் கல்லூரிகள்,
மருத்துவ கல்லூரிகள், சாலைகள், அடிப்படை கட்டமைப்புகள், குடி தண்ணீர், மின்சார விநியோகம், இறப்பு விகிதம், மழை நீர் சேகரிப்பு, வேலைவாய்ப்புகள் என எவற்றிலும் இந்தியாவின் முன்னோடி மாநிலமாக தமிழகம் திகழ்கிறது.

கழிவு மேலாண்மை, நிலச் சீரளிவு, காற்று மாசு முதல்
இந்தியாவின் அதிகப்படியாக வரி வசூல் செய்து நிதி நிலைமையில் திடமாக உள்ள மாநிலமாகவும் தமிழகம் திகழ்கிறது என்பதை யாராலும் மறுக்க முடியாது.

வட மாநிலங்களுக்கு நீங்கள் ஒரு சுற்றுப்பயணம் செய்தால் அவர்கள் நம்மை விட 15-20 வருடங்கள் பிந்தங்கியிருப்பதை நீங்கள் உணர முடியும்.
வட மாநிலத்தவர்கள் துபாய்-சிங்கப்பூர் போலவே சென்னையை, கோவையை, மதுரையை பார்க்கிறார்கள். என்னிடம் எத்தனை பேர் இந்த தரகர்கள் தொடர்பு இல்லாமல் வேலை கிடைக்குமா என்று கேட்டிருக்கிறார்கள். இந்தியாவின் ஒரு நிலப்பகுதி சிங்கப்பூராகவும் துபாயாகவும் திகழ்கிறது,
அதனால் இங்கே வருபவர்களுக்கு வேலைவாய்ப்பும், வாழிடமும் வழங்க முடிகிறது என்றால் முதலில் நாம் நம் காலர்களை தூக்கிவிட வேண்டும்.

#பாஜக இங்கே நமக்கு எதனையும் கற்றுக் கொடுப்பதற்கு கைவசம் வைத்திருக்க வில்லை மாறாக அவர்கள்
நம்மிடம் இருக்கும் அடிப்படை கட்டமைப்பை, வரி வருவாயை, துறைமுகங்களை, விமான நிலையங்களை என தமிழகத்தின் வளங்களை வட இந்திய நிறுவனங்களுக்கு கூறு போட்டு கொடுக்கவே தற்பொழுதும் அதிமுக-வின் பின்னயில் நின்று செயல்படுகிறார்கள்.
வெளிப்படையாக எப்படியேனும் இங்கே கால் பதித்து நேரடியாக இதனை செய்ய துடிக்கிறார்கள்.

தமிழக அரசியல் தலைவர்கள் அனைவரும் நிதிஷ் குமாரின் நிலையை பார்த்து பாடம் கற்க வேண்டும், நிதிஷ் குமாரின் அரசியல் அஸ்தமனம் இந்திய மாநில கட்சிகளுக்கு ஒரு பெரும் பாடமாக அமைய வேண்டும்.
சீரிடம் காணின் எறிதற்குப் பட்டடை நேரா நிரந்தவர் நட்பு
- திருக்குறள் 821
You can follow @Sivaji_KS.
Tip: mention @twtextapp on a Twitter thread with the keyword “unroll” to get a link to it.

Latest Threads Unrolled:

By continuing to use the site, you are consenting to the use of cookies as explained in our Cookie Policy to improve your experience.