அதிரசம், தமிழ் உணவின் அடையாளம்!

அரியதரம் என்பதே உண்மையான தமிழ்ப் பெயர்
= அரி+அதரம்
மாவை அரித்து, அதர்த்தல் (முறையாகத் தட்டல்)

பச்சரிசி/தினை - இரண்டிலும் செய்வது!
வெல்லம்/ கருப்பட்டி/ சீனி அதிரசம் எ. 3 வகை!

அதிரசப் பாகு கடினம்!
அதான் தமிழ் நோன்புச் சடங்கியல் ஆனது!
*வெல்ல அதிரசம்= ஒத்தைக் கம்பிப் பாகு
*கருப்பட்டி அதிரசம்= இரட்டைக் கம்பிப் பாகு
*சீனி அதிரசம்= கம்பிப் பாகு தேவையில்லை

தூள் வெல்லம்/ சீனி/ கருப்பட்டி, கொதிநீரில் கலந்து உருவாகும் பாகில்
அரிசி/தினை மாவு கிளறி, ஏலம்/சுக்கு பொடித்து, அரித்து+அதர்த்தல்!

எண்ணெயில் சுட்டு எடுத்தல்!
அதிரசம் கடினப்பட்டுச் செய்வதை விட
அதிரசத்தில் எண்ணெய் வடிப்பது, முக்கியம்!

இதற்கென்றே.. அழுத்துமணை உண்டு!

மரத்தில் ஆன மணைகள்
கால் வைத்து, தாம்பாளத்தில் ஊன்றி
துளைகள் வழியாக எண்ணெய் ஓடும்!

எண்ணெய் முழுக்க வடியாத அதிரசம்
சுவைக்காது
மொறுமொறுக்காது!
அழகிய வட்டமாகவும் வராது:)
அதிரச அழுத்துமணை
இப்போதெல்லாம் அதிகம் கிடைப்பதில்லை!

நோன்பு எடுக்கும் கிராமத்து வீடுகளில் இருக்கும்!
அழுத்துமணை அதிரசமே, அழகு/சுவை!

நகரத்துப் பெண்கள், சல்லிக் கரண்டியால் அழுத்துகிறார்கள்.. இப்பல்லாம்:)
ஆனால், அவ்வளவாக எண்ணெய் வடிக்காது! சுவைக்காது!

அழுத்துமணை, தேடிப் பெறுக!
அரியதரம் (எ) அதிரசம்..

*நன்கு சிவக்க வேண்டும்
*நன்கு எண்ணெய் இறுக வேண்டும்
*உப்பலாக இன்றி, தட்டையே மொறுமொறு
*சூடாக உண்ணல், இன்னும் சுவை
*நடுவில் துளையிடல், அவரவர் வழக்கம்:)

அதிரசத்தை விட
அதிரச மாவைக் கூடத் திங்கலாம்:) தின்பேன்!

வீடு முழுதும்
அதிரசம் சுடும் வாசனை, பேரின்பம்!
கண்ணகி சுட்ட அரியதரம் (அதிரசம்)
ஈழம்/ தமிழகம்.. தமிழ்ச் சடங்கியல் நோன்பு!

*கொற்றவை/ முருகன்/ பெருமாள் படையலுக்கு= வெல்ல அதிரசம்
*முன்னோர்களின் படையலுக்கு= கருப்பட்டி அதிரசம்
*கன்னி (பூவாடைக்காரி) படையலுக்கு= சீனி அதிரசம்

வீட்டில் மறைந்து போன
கன்னிப் பெண் படையலில் அதிரசம் உண்டு!
சிலப்பதிகாரக் கண்ணகி
ஈழம்/தமிழகம்/கேரளம் 3 இடமும் நிறைந்தவள்!

அதனால் அரியதரம்/அதிரசம்
எல்லாத் திராவிட நிலங்களிலும் உண்டு!

தெலுங்கு நிலத்திலும் உண்டு, அரிசலு என்பர்!
அரிசல் என்பதே அரி+அதரம்
அரித்து, அதர்த்தும் இனிப்புணவு முறை!

நோன்புச் சடங்கியல் அதிரசம்
தமிழர் நாட்டார் மரபியல்!
உணவு.. சுவைக்க மட்டுமே அல்ல!:)
உணவிலும், வரலாறு உண்டு!

ஈழம்/தமிழகம்.. இரண்டுக்குமான
தொல் ஆதிகுடிச் சடங்கியல்
அதிரசம்/ அரியதரம் எ. உணவு!

*தமிழகத்தில், எப்படியோ அதிரசம் எ. பேர் மாறிப் போனாலும்
*ஈழத்தில்.. இன்னும் அதே தொல் பெயரான அரி+அதரம் என்றே புழங்கி வருகிறது!
உங்கள் வீடுகளில்
அதிரசம் அழுத்துமணை இருந்தால்
சேமித்து வைத்துக் கொள்க!
இப்பல்லாம், கிராமத்தில் கூடக் கிடைக்காது:)

அழுத்துமணை அதிரசங்களே
எண்ணெய்க் காய்ச்சலின்றி
மிக்க சுவை & காண அழகு - இரண்டும்!

கார்க்கி @iamkarki வீட்டு
மணை தந்த @vibigraphy
& @srisin02 ஆகியோருக்கு நன்றி! :)
அதிரசங்களை ஆறிச் சாப்பிடுவதை விட,
சுடச்சுட உண்பது, வேறு சுவை!😍

இப்ப நுண்ணலை (Microwave) அடுப்பு உள்ளதால்
சற்றே சூடேற்றி உண்டு பாருங்க! (5-10 seconds)
வேறு சுவை/ மொறுமொறு தெரியும்!:)

அதை விட, அரிசிமாவு + வெல்லப்பாகு
கிளறிய உருண்டைகளை
நேரடியா உண்டும் மகிழ்க, என்னைப் போல்😂
You can follow @kryes.
Tip: mention @twtextapp on a Twitter thread with the keyword “unroll” to get a link to it.

Latest Threads Unrolled:

By continuing to use the site, you are consenting to the use of cookies as explained in our Cookie Policy to improve your experience.