தமிழகத்தில் தீபாவளிப் பண்டிகை
1930/40-களில்
பெருமளவு, பார்ப்பன வீடுகளில் மட்டுமே!

விகடன், அந்நாள் தீபாவளி மலரும் சாட்சி

திருமலை நாயக்கர் காலத்தில் புகுத்தப்பட்ட தீபாவளி
200 ஆண்டு காலம், பிராமண பண்டிகையாகவே இருந்தது!

அடித்தட்டு மக்கள் மேலெழ மேலெழ
தீபாவளி, பெருமிதம் ஆகிப் போனது!
இன்று, பார்ப்பனர் அல்லாத வீடுகளில் கூட

*அட்சய திருதியை
*நவராத்திரிக் கொலு
*வரலக்ஷ்மி விரதம்
*விஜய தசமி - ஏடு தொடங்கல்

எப்படி நுழைந்து விட்டதோ
அப்படியே, 1940-களில், தீபாவளியும் நுழைந்தது!

அறிக: அடித்தட்டு மக்கள் எழ எழ
மேல்தட்டுப் பண்டிகைகளை
தமது பெருமிதம் ஆக்கிக் கொள்கிறார்கள்!
திராவிடம் கோட்டை விட்டதும், இங்கே தான்!:)

*கொள்கை மட்டுமே பரப்ப எண்ணி
*உணர்வுகளை மறந்து போனது:(

எந்தவொரு சமூகமும்
சடங்கியல் & விழாக்கள் இன்றி அமையாது!

மேலெழும் மக்களின், உணர்வுத் தேவைகளை
நல்ல சடங்கியலாக மாற்றி
வழிகாட்டா விட்டால்
பார்ப்பனச் சடங்கியலே பிடித்துக் கொள்வர், மக்கள்!
*பார்ப்பனீயம்= நெகிழ்வு
*திராவிடம்= நெகிழ்விலா உறுதி:)

ஏன், பார்ப்பனீயமே ஒவ்வொரு முறையும் வெல்கிறது?

*தான் துவங்கிய எந்த ஒன்றையும், அப்படியே பிடித்துக் கொள்ளாது பார்ப்பனீயம்!
*அதை மக்களின் ”உணர்வு”களுக்கு ஆன ஒன்றாய் மடைமாற்றி விட்டு..

அதன் மேல் தன் Stampஐ ஒட்டிக் கொள்ளும்!😉
அடித்தட்டு மக்கள் மேலெழ மேலெழ..

மேல்தட்டுப் பார்ப்பனீயப் பண்டிகையான
தீபாவளி கொண்டாடலை,
தங்களின் பெருமிதம் ஆக்கிக் கொண்டனர்!:)

ஆனாலும்.. யாரும் ”நரக சதுர்த்தசி”
நரகாசுரன் சாவாக, கொண்டாடுவதில்லை!

உணவு + உடை + மகிழ்ச்சி
என்ற அளவில் மட்டும்
அப்பண்டிகையை, தமதாக்கிக் கொண்டனர்!
தீபாவளி வரலாறு தேடிப் படியுங்கள்!

*சங்க காலத்தில் இல்லாத தீபாவளி
*ராஜராஜ சோழன் காலத்தில் இல்லாத தீபாவளி
*கம்பன் காலத்தில் இல்லாத தீபாவளி
*திருமலை நாயக்கர் காலத்தில் அரசு விழா

இப்படி மேல்தட்டுப் புகுத்தல் பண்டிகையே
அடித்தட்டு மேலெழுந்த போது
அவர்களின் பண்டிகையாகவும் ஆகிப் போனது!
நீங்கள் ரொம்ப வரலாறு கூடப் படிக்க வேணாம்:)

Just 100 ஆண்டுகளுக்கு முன்
தீபாவளி/ ஹிந்து/ கோயில்கள்..
எப்படி இருந்தன? எ. தேடினாலே போதும்!

பெரும் வியப்புக்கு உள்ளாவீர்கள்!😂

1930/40 இதழ்களின் படங்கள், Cartoon
இதெல்லாம் எடுத்துப் பாருங்கள்!
தீபாவளி= யார் பண்டிகை? தெரிந்து விடும்!:)
சமூகச் சடங்கியலின் நகர்வுகள்..
எந்தவொரு பகுத்தறிவு இயக்கத்தையும்
விழுங்கி விடும் ஆற்றல் மிக்கது!

ஏனெனில்..
*உணர்வுகளே= மனிதனின் முதல் தேவை!
*அறிவு/கொள்கை= அடுத்ததே!

பகுத்தறிவு இயக்கங்கள்,
தாங்கள் கைதூக்கி விட்ட மக்களின்
உணர்வுத் தேவைகளை
நல்ல சடங்கியல் நோக்கி வழிகாட்டலே வெற்றி!
A Good Tamizh/Dravidian Rationalist
Should also be a Good Psychologist!

ஒரு தமிழ்/திராவிட உணர்வாளர்
சமூக உளவியல் வல்லுநரும் ஆக வேண்டும்!

அப்போதே.. பார்ப்பனீயத்தை மீறி
உணர்வு + அறிவு
இரண்டிலும் திராவிடம் வெல்லும்!

உங்களின் சமூக ஊடகச் செயல்பாடும்
அவ்வண்ணமே அமைய வாழ்த்துக்கள்!
You can follow @kryes.
Tip: mention @twtextapp on a Twitter thread with the keyword “unroll” to get a link to it.

Latest Threads Unrolled:

By continuing to use the site, you are consenting to the use of cookies as explained in our Cookie Policy to improve your experience.