#Digi_wallet

#thread

டிமானிசேஷன் அறிவிச்சு நாலு வருஷம் ஆச்சு. செம்ம பிளாப். அந்த டைம்ல என்ன பண்றதுன்னு தெரியாம தான் மோடி இந்தியா மூவஸ் டு கேஸ்லஸ் எக்கானமினு சொன்னாரு. அதுக்கப்புறம்தான் கீழ நாலு போட்டோ ல இருக்க அந்த கியூ ஆர் கோட நிறைய இடத்துல பார்க்க ஆரம்பிச்சு இருப்போம்.
பெட்ரோல் பங்க் ல ஆரம்பிச்சு துணிக்கடை, ஹோட்டல், பூக்கடை பானிபூரி கடை வரைக்கும் வந்துருச்சு. பேடிஎம் கூகுள் பே போன்பே அப்படின்னு எல்லாருமே அவனோட வேலட்ட ஃப்ரீயா எல்லா கடைகளுக்கும் கொடுக்க ஆரம்பிச்சாங்க. அதுக்குன்னு தனியா பிராசஸிங் ஃபீஸ் கிடையாது. போன் நம்பர் யூஸ் பண்ணி
ஈஸியா பணம் அனுப்பலாம். கிட்டத்தட்ட இப்ப எல்லா ஏடிஎம் வாசலையும் க்யூல நிற்கிறது குறைஞ்சிடுச்சு. மணி பர்ஸ் யாருமே யூஸ் பண்றதில்ல. கிட்டத்தட்ட எல்லா பில் கவுண்டரில் இந்த கியூ ஆர் கோடு ஸ்டிக்கர் தான் இருக்கு. இது யூஸருக்கு வேணா ஈசியா இருக்கலாம்.
ஆனா கடை வச்சிருக்கவங்களுக்கு மிகப் பெரிய தலைவலி அது தெரியாம எல்லாரும் யூஸ் பண்ண ஆரம்பிச்சுட்டாங்க. பெரிய பெரிய கடைகள்ள மட்டும்தான் முன்னாடியெல்லாம் சரியான ஜிஎஸ்ட் பில் போயிட்டு இருந்துச்சு. ஆனா இப்ப ஜிஎஸ்டி ஸ்லாப்க்கு மேல விற்பனை பண்ற எல்லாரும் சரியான ஜிஎஸ்ட் பில் போடணும்
கவர்மெண்ட்க்கு சரியான டேக்ஸ் கட்டணும். கியூ ஆர் கோட் ஸ்கேனிங் மூலமா டைரக்டா உங்கள் பேங்க் அக்கவுண்டிற்கு பணம் போகிறப்ப அந்த ஒவ்வொரு டிரன்சாக்சன்க்கும் விற்பனையாளர் சரியான கணக்கு வச்சிருக்கணும். ஒரு ஸ்லாப்க்கு மேல நீங்க விக்கிர ஒவ்வொரு பொருளுக்கும் விற்பனை விலையை விட ஜிஎஸ்டி
சேர்த்துதான்
பில் பண்ணனும் இதனால விலை அதிகமாகும். அதை கஸ்டமர் கிட்ட சொல்லி அந்த அதிகமான விலைக்கி விக்கிறதுக்குள்ள மூச்சு வாங்கிடும். இல்லன உங்க லாபத்த குறச்சாகணும். ஏனா இனி ஓடவும் முடியாது ஒழியவும் முடியாது. கவர்மெண்ட் வாட்சிங் யு.
கவர்மெண்ட் இப்ப கொஞ்சம் ஸ்லாக்கா இருக்கலாம். இன்னும் கொஞ்ச நாள்ள இதெல்லாம் டைட் பண்ண ஆரம்பிக்கிறப்ப எல்லா எண்டர்ப்ரணர் சோலி முடிஞ்சு. எல்லாரும் பொருளுக்கு டாக்ஸ் போட ஆரம்பிச்சுடுவாங்க. விலைவாசி அதிகமாகும். கடை காரவங்க இந்த டிஜி வேலட் இல்லாம இருக்கவும் முடியாது
வர எல்லா கஸ்டமரும் போன் பே இருக்கா? கூகுள் பே இருக்கானுதான் கேட்குறாங்க. சோ பணத்திற்கான தேவை குறைந்து நம்பருக்கான தேவை அதிகமாகிவிட்டது. 10 ரூ பானி பூரியை இனி 11.80 பைசா கொடுத்து வாங்க தயாராகிக்கோங்க மக்களே. இது நாட்டுக்கு வரி வசூலில் நல்லதே. ஆனா அந்த வரிய திரும்ப
யாரு திருடி திங்கிறானுங்கனுங்குறதுதான் விசயமே. கொஞ்சம் கொஞ்சமா எல்லா கடைகளும் கேஸ்லஸ்ஸாக மாறிடும். எல்லா வியாபாரியும் ஒழுங்கா வரி கட்டியே ஆகணும். எல்லா வாடிக்கையாளரும் வரியோடதான் பில்லு கட்டணும். விலை வாசி கூடதான் போகுது.

நன்றி வணக்கம்.
You can follow @vinothpaper.
Tip: mention @twtextapp on a Twitter thread with the keyword “unroll” to get a link to it.

Latest Threads Unrolled:

By continuing to use the site, you are consenting to the use of cookies as explained in our Cookie Policy to improve your experience.