#Banking #MSME #loans

வியாபார கடன்களை இருவகைப்படும்

1. Fund based - பணமாக தருவது
2. Non-fund based - உத்திரவாதமாக தருவது

Fund based:
இது மேலும் இருவகைப்படும்

1. Cash credit / Overdraft
2. Term loan

CC / OD: இது உங்கள் தொழிலின் அன்றாட தேவைகளை (working capital) பூர்த்தி செய்ய
வழங்கப்படும். உங்கள் முதலீடானது ஸ்டாக், வர வேண்டிய கடன் (விற்பனைக்கு பிறகு) போன்றவையால் முடங்கி இருக்கும். அதிலிருந்து உங்கள் வியாபாரத்தை சரிவின்றி நடத்த CC / OD பயன்படும். பொதுவாக உங்கள் ஆண்டு டர்னோவரில் 20% ஆக லிமிட் இருக்கும். இதை வைத்து மூலப்பொருள் வாங்க, சம்பளம் கொடுக்க,
மின்கட்டணம், அரசு வரிகள் கட்ட, மூலப்பொருள் வாங்கிய கடன் அடைக்க போன்ற செலவுகளுக்கு பயன்படுத்தலாம். இதை வைத்து எந்தவித சொத்தும் (நிலம், கட்டிடம், இயந்திரம்) வாங்கக் கூடாது. அப்படி செய்தால் உங்கள் working capital கடுமையான பாதிப்புக்கு ஆளாகி தொழில் முடங்கலாம். இதை running limit என்று
சொல்லலாம். உங்கள் கணக்கிலேயே வரவு செலவு எல்லாம் நடக்கும். அசலை நீங்கள் திருப்பி செலுத்த வேண்டிய கட்டாயம் இல்லை. ஆனால் கணக்கை உங்கள் credit limitகுள் மட்டுமே இயக்க வேண்டும். மாதாந்திர வட்டிய தவறாது செலுத்த வேண்டும். முடிந்த வரை நடப்புக் கணக்கு இல்லாமல் od / cc கணக்கிலேயே வரவுசெலவு
செய்வது சிறந்தது.

CC / OD - என்ன வித்தியாசம்?

OD - நீங்கள் stock statement ஏதும் தர வேண்டாம். பிணை (collateral) குறைந்தது 150% தேவைப்படும்

CC- உங்கள் ஸ்டாக் & வரவேண்டிய பணத்தை கணக்கிட்டு drawing power நிச்சியிக்கப்படும். நீங்கள் 1(அ)3 மாதம் ஒருமுறை stock statement தரவேண்டும்
உங்கள் கணக்கின் ஓழுக்கத்தை பொறுத்து 100% அல்லது அதற்கு குறைவான பிணை (collateral) கூட போதும்

Term Loan: நீங்கள் ஏதாவது அசையும் (இயந்திரம்) அல்லது அசையா (நிலம்/கட்டிடம்) உங்கள் தொழில் அபிவிருத்திக்கு வாங்க விரும்பினால் வங்கி அதற்கு term loan கொடுக்கும். உங்கள் பங்கு குறைந்தது 25%
ஆக இருக்கும். மீதியை வங்கி கடன் தரும். பெரும்பாலும் கையில் வராது. சொத்தை விற்பவருக்கு நேரடியாக சென்று விடும்.இதை பெற நீங்கள் project report தயாரித்து தர வேண்டும். கடனை அடைக்க பணம் வரும் வழிமுறைகள் பற்றி தெளிவாக விளக்க வேண்டும். திருப்பி கட்டத் தேவையான cash flow எதிர்காலத்தில்
இருக்காது என வங்கி கருதினால் கடன் பெறும் வாய்ப்பு குறைவு. Cash flow பற்றி விளக்கமாகவும் ஆதாரமாகவும் எடுத்துரைக்க வேண்டும். இவ்வாறு நீங்கள் வாங்கும் சொத்து வங்கியில் பிணையாக எடுத்துக் கொள்ளப்படும். கூடுதலாக collateral கேட்கப்படலாம்.

பராமரிப்பு டிப்ஸ்:
இயன்ற வரை od/cc கணக்கிலேயே
எல்லா வரவு செலவு செய்யவும்

லிமிட்டுக்குள் கணக்கை பராமரிக்கவும்

காசோலை பணமின்றி திரும்பும் சூழல் வேண்டாம்

வேறு வங்கியில் கணக்கு வைத்து பராமரிக்க வேண்டாம்.

Term loan அசல் மற்றும் வட்டியை திருப்பி செலுத்துவதை நேரத்தில் செய்யவும்

வாங்கிய கடனை அதன் தேவைக்கு மட்டுமே பயன்படுத்த
வேண்டும். சொந்த செலவுகள் கண்டிப்பாக செய்யக் கூடாது.

Nonfund based limit (உத்திரவாதக் கடன்) பற்றி நாளை 😍😍😍
@threadreaderapp unroll please
You can follow @bankeryuva.
Tip: mention @twtextapp on a Twitter thread with the keyword “unroll” to get a link to it.

Latest Threads Unrolled:

By continuing to use the site, you are consenting to the use of cookies as explained in our Cookie Policy to improve your experience.