சோவியத் புரட்சி அப்படி என்ன தான் சாதித்தது?

உலகின் முதல் பட்டினியற்ற தேசத்தை உருவாக்கிக் காட்டியது

உலகின் முதல் கல்லாதோர் அற்ற தேசத்தை உருவாக்கிக் காட்டியது

முழுக்கல்வியும் இலவசமாக்கப்பட்டது
உயர் கல்வி வரை கட்டாயமாக்கப்பட்டது

சுகாதாரத்திற்கு ஆகும் மொத்த செலவையும் அரசே ஏற்றது
தொழிலாளர்களின் வேலை நேரம் 7மணி நேரமாக்கப்பட்டது

24 மணிநேரம் பணியாற்ற வேண்டிய அத்தியாவசியத் தொழிலாளர்களின் வேலை நேரம் 6 மணி நேரமாக்கப்பட்டது

தவிர்க்க முடியாத காலகட்டத்தை தவிர கூடுதல் நேர உழைப்பு தடை செய்யப்பட்டது.

தொழிலாளர்களுக்கு இதர விடுமுறை இல்லாமல்,ஆண்டிற்கு
ஒரு மாதம் முழு சம்பளத்துடன் கூடிய விடுப்பு வழங்கப்பட்டது.

விடுமுறை நாட்களில் சுற்றுலா செல்வோருக்கான மானியத்துடன் கூடிய உல்லாச விடுதிகள் கொடுக்கப்பட்டன

ஆண்களுக்கு 60 வயதும், பெண்களுக்கு 55 வயதும் ஓய்வு பெறும் வயதாகவும், ஓய்வு பெறுவோர்க்கும், உழைக்க இயலாதவர்களுக்கும்
ஓய்வூதியமாக முழுச்சம்பளமும் வழங்கப்பட்டது.ஓய்வூதியத்தை உலகமே அறிந்தது ரஷ்ய புரட்சியின் விளைவாகத்தான்.

எல்லோருக்கும் குடியிருப்பு உறுதி செய்யப்பட்ட முதல் நாடும் ரஷ்யா தான்.

வீட்டு வாடகை,எரிபொருள், மின்சாரம்,தண்ணீர் உட்பட எல்லாவற்றிற்கும் சேர்த்தே ஊதியத்தில் 3%மட்டுமே பெறப்பட்டது
பெண்களுக்கு பேறுகால விடுப்பு நான்கு மாதங்கள் முழு ஊதியத்துடன் வழங்கப்பட்டது.
தேவைப்படின் ஓராண்டு காலம் வரை பாதி ஊதியத்துடன் கூடிய விடுப்பும் வழங்கப்பட்டது.

தாய்ப்பால் கொடுக்கும் காலம் வரைக்கும் பெண்களுக்கு வாரத்தில் 6நாட்களோ, நாள் ஒன்றுக்கு 7மணி நேரமோ உழைக்க வேண்டும்
என்கிற கட்டாயமில்லை.

எல்லா குழந்தைகளுக்கும் 16 வயது வரையிலும், தனித்து வாழும் பெண்கள் வளர்க்கும் குழந்தைகளுக்கு 18 வயது வரையிலும் அரசு மானியம் வழங்கியது

எல்லோருக்கும் வேலை வழங்கிய முதல் நாடும் ரஷ்யா தான்.
இவ்வளவு ஏன் இன்றைக்கு நாம் அனுபவிக்கிற பல உரிமைகளும், தாக்குதலுக்கு உள்ளாகியுள்ள பல உரிமைகளும் ரஷ்ய புரட்சியின் மூலமாகவே இந்த உலகம் அறிந்தது,பெற்றது.

சூரிய அஸ்தமனமே இல்லாத பெரும் செல்வம் படைத்த பிரிட்டிஷ் சாம்ராஜியமே தன் சொந்த நாட்டு மக்களுக்கு அறிமுகம் கூட செய்யாத பல
நலத்திட்டங்களை அன்றைக்கு வறுமையிலிருந்து உருவான ரஷ்யாவின் புரட்சிகர அரசாங்கம் செய்துகாட்டியது.

காரணம் செல்வம் ஒரே இடத்தில் குவியாமல் எல்லோருக்கும் நாட்டின் மொத்த செல்வமும் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும் என்கிற உயரிய பொதுவுடைமை கருத்தாலேயே அது சாத்தியமானது.
103வது நவம்பர் புரட்சி தினம்!
இன்று!

#நவம்பர்புரட்சிதினம் #Novemberday #RussianRevolution
@tncpim @cpmkanagaraj
You can follow @navo_talks.
Tip: mention @twtextapp on a Twitter thread with the keyword “unroll” to get a link to it.

Latest Threads Unrolled:

By continuing to use the site, you are consenting to the use of cookies as explained in our Cookie Policy to improve your experience.