🌺காளிதாஸா.... வணங்குகிறேன்...🌺

ஒரு முறை மகாகவி காளிதாஸர் வயல்வெளியே வெயிலில் நடந்து சென்ற போது தாகம் எடுத்தது..

சற்று தூரத்தில் ஒரு கிராமப்பெண் கிணற்றில் தண்ணீர் சேந்தி, குடத்தில் எடுத்து, வந்து கொண்டிருந்தாள்!

காளிதாஸர் அவரைப் பார்த்து,
“அம்மா தாகமாக இருக்கு கொஞ்சம் தண்ணீர் தருவீர்களா?” என்று கேட்டார்...

அந்த கிராமத்துப் பெண்ணும்,

“தருகிறேன்... உங்களை அறிமுகப்படுத்திக் கொள்ளுங்கள்”

என்றாள்! உடனே காளிதாஸருக்கு ஒரு உயர்வு மனப்பான்மை ஏற்பட்டு,

‘இந்த பெண்ணிடம் நாம் யார் என்று சொல்ல வேண்டுமா?’ என நினைத்து,
”நான் ஒரு பயணி அம்மா”

என்றார். உடன் அந்த பெண்,

“உலகில் இரண்டு பயணிகள் தான்! ஒருவர் *சந்திரன்* ஒருவர் *சூரியன்* ! இவர்கள் தான் இரவு பகலென பயணிப்பவர்கள்”

என்றாள்.

”சரி என்னை விருந்தினர் என்று வைத்துக் கொள்”

என்றார் காளிதாஸர். உடனே அந்த பெண்,
”உலகில் இரண்டு விருந்தினர்தான் உண்டு! ஒன்று *செல்வம்* இரண்டு *இளமை* ! இவை இரண்டும் தான் விருந்தினராக வந்து உடனே போய் விடும்...”

என்றாள். சற்று எரிச்சலான காளிதாஸர்,

”நான் ஒரு பொறுமைசாலி”

என்றார். உடனே அந்த பெண்,

“அதுவும் இரண்டு பேர்தான்! ஒன்று *பூமி*... எவ்வளவு மிதித்தாலும்,
எவர் மிதித்தாலும் தாங்கும்!
மற்றொன்று *மரம்*... யார் கல்லால் அடித்தாலும் பொறுத்துக் கொண்டு காய்களைக் கொடுக்கும்!

என்றாள். சற்றுக் கோபமடைந்த காளிதாஸர்,

”நான் ஒரு பிடிவாதக்காரன்”

என்றார். அதற்கும் அந்த பெண்,

“உலகிலேயே பிடிவாதக்காரர்கள் இரண்டு பேர் தான்!
ஒன்று *முடி* மற்றொன்று *நகம்*...
இரண்டும் எத்தனை முறை வேண்டாம் என்று வெட்டினாலும், பிடிவாதமாக வளரும்!”

என்றாள் சிரித்தபடி. தாகம் அதிகரிக்கவே கோபமும் அதிகமாகி, காளிதாஸர்

“நான் ஒரு முட்டாள்”

என்று தன்னைத் தானே கூறிக்கொண்டார். உடனே அந்த பெண்,
”உலகிலேயே இரண்டு முட்டாள்கள்தான் உண்டு!
ஒருவன் நாட்டை *ஆளத்தெரியாத அரசன்* மற்றவன் அவனுக்கு *துதிபாடும் அமைச்சன்*!!

என்றாள். காளிதாஸர் செய்வதறியாது, அந்த பெண்ணின் காலில் விழுந்தார்...

உடனே அந்தப் பெண்,

“மகனே எழுந்திரு!”

என்றதும் நிமிர்ந்து பார்த்த காளிதாஸர் மலைத்துப்போனார்!
சாக்ஷாத் *ஸரஸ்வதி தேவி*யே அவர் முன் நின்றாள்...

காளிதாஸர் இருகை கூப்பி வணங்கியதும், தேவி தாஸரைப் பார்த்து,

“காளிதாஸா! எவன் ஒருவன் தன்னை மனிதன் என்று உணர்கின்றானோ, அவனே மனிதப்பிறவியின் உச்சத்தை அடைகிறான்!
நீ மனிதனாகவே இரு...” என்று கூறி,
தண்ணீர் குடத்தைக் காளிதாஸர் கை யில் கொடுத்து சரஸ்வதி தேவி மறைந்தாள்!

இது போலத்தான்...

“குழந்தைகள் எதிர் காலத்தில் பணம் சம்பாதிக்கவும், வசதியாக வாழவும் பெற்றோர்கள் கற்றுக்கொடுக்கிறார்களே தவிர, *மனிதனாக, தாய், தந்தை, மனைவி, மக்கள், உற்றார் உறவினருக்கு, நம் தாய் நாட்டிற்கு,
நமக்கு உணவு தரும் பூமிக்கு நாம் என்ன செய்ய வேண்டும்* என்பதை கற்றுத்தரவேண்டும்!

பெற்றோரை, தாய்நாட்டை , உறவுகளை பிரிந்து, ஏசி அறையே உலகம், தொலைபேசியே உறவு, பணம் சம்பாதிப்பதே வாழ்க்கை எ,ன வாழ்க்கையை இயந்திரமயமாக்கி, மனித நேயமில்லா வாழ்க்கை வாழக் கூடாது!
*நீ நீயாகவே மனிதனாகவே இரு! என்றும்,

“நல்லாரைக் காண்பதுவும் நன்றே நலமிக்க
நல்லார்சொல் கேட்பதுவும் நன்றே
நல்லார் குணங்கள் உரைப்பதுவும் நன்றே
நல்லாரோடு இணங்கி இருப்பதுவும் நன்றே!”

எனும் வாக்கின் படியாவது நில்!

🙏: வாட்ஸப்

🍁வாஸவி நாராயணன்🍁
@threader_app compile
You can follow @VasaviNarayanan.
Tip: mention @twtextapp on a Twitter thread with the keyword “unroll” to get a link to it.

Latest Threads Unrolled:

By continuing to use the site, you are consenting to the use of cookies as explained in our Cookie Policy to improve your experience.