மனு தர்மம்-1

1.இந்து மதத்தின் சிறப்புகளையும் பண்டைய இந்திய சமுதாயத்தின் பெருமைகளையும் சிறப்பித்து கூறுவோரில் பலர் சிறிது அடங்கிப் போகும் ஒரு விஷயம் மனு ஸ்மிருதி. ஏனெனில், இன்றுள்ள சாதிய முறைக்கும், இத்தனை ஆண்டு காலம் நிகழ்ந்த தீண்டாமைக் கொடுமைகளுக்கும் மனு ஸ்மிருதியே காரணம் என்ற
2.ஒரு கருத்து அனைவரது மனங்களிலும் ஆழமாக விதைக்கப்பட்டு விட்டது.

பிராமண துவேஷம் எங்கெல்லாம் நடக்கிறதோ (தமிழகத்தில் மட்டுமல்ல, எல்லா இடங்களிலும்) அங்கெல்லாம் மேற்கோள் காட்டப்படுவது ‘ மனு ஸ்மிருதி’ எனப்படும் மனுவின் நீதி நூல். இது நீதி நூல் என்பதையே பலரும் அறிந்திருக்க
3.வாய்ப்பில்லை. மனிதர்களால் உருவாக்கப்பட்டு, காலத்திற்கேற்ப மாறுவது ‘ஸ்மிருதி’ . அந்தந்த கால கட்டத்திற்கும் , மக்களின் வாழ்க்கை முறைக்கும் ஏற்ப, பல்வேறு ஸ்மிருதிகள் உருவாக்கப்பட்டுள்ளன. இப்போது அனைவராலும் தூற்றப்படும் மனு ஸ்மிருதி கிருதா யுகத்திற்க்கானது.
4.இதை கலி யுகத்தில் பயன்படுத்தியது நம் முன்னோர்கள் செய்த முதல் தவறு. ஆயினும், மனு ஸ்மிருதியில் எவ்வித பிழையும் இல்லை, அதை உறுதி செய்யவே இந்தக் கட்டுரை.

முதலில் மனு ஸ்மிருதியில் குறிப்பிடப்பட்டுள்ள வர்ணாசிரம முறைகள் அதன் ஒரு மிகச் சிறிய பகுதி என்பதை அனைவரும் உணர வேண்டும். கல்வி,
5.வாழ்க்கை முறை, பக்தி, குற்றங்கள், தண்டனைகள், போர் முறை, திருமணம், சாட்சி சொல்லும் முறை, ஒற்றர்கள் என பல சமுதாய, அரசியல் விஷயங்களும் மனு ஸ்மிருதியில் விவாதிக்கப்பட்டுள்ளன. ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னரே இப்படி அனைத்து விஷயங்களையும் விவாதிக்கும்
6.ஒரு நீதி நூல் உருவாக்கப்பட்டது ஆச்சர்யமே!

மனு ஸ்மிருதி மனிதர்களை வர்ண முறையில் நான்காகவும், ஆசிரம முறையில் நான்காகவும் பிரிக்கிறது. வர்ண முறையில் பிராமணர், க்ஷத்ரியர், வைசியர், சூத்திரர் என அவரவர் செய்யும் தொழிலின் அடிப்படையிலும், ஆசிரம முறையில் சிறுவர் (வயது
7.< 8), பிரமச்சாரி (8-16), சம்சாரி (16-48) மற்றும் சந்நியாசி (>48) எனவும் பிரிக்கிறது. ஒவ்வொரு வகுப்பினருக்கும் கடமைகளையும், வாழ்க்கைமுறைகளையும் விளக்கமாக எடுத்துரைக்கிறது மனு தர்மம். இவை அனைத்தும் மக்கள் வாழ்க்கையை நெறிப்படுத்த உருவாக்கப் பட்டனவே அன்றி, பாழ்படுத்த அல்ல.
8.பிராமணர்கள் வேதம் ஒதுவதற்கும், பக்தி மார்க்கத்தைப் பரப்புவதற்கும், க்ஷத்ரியர்கள் ஆட்சி செய்து நீதி வழங்கவும், வைசியர்கள் நியாயமான வியாபாரம் செய்யவும், சூத்திரர்கள் உடல் உழைப்பு தேவைப்படும் வேலைகளை செய்வதற்கும் பணிக்கப்பட்டனர். இதில் பிராமண துவேஷர்களின் வாதம் யாதெனில், மனு
9.ஸ்மிருதியில் பிராமணர்களுக்கு உயரிய இடம் கொடுக்கப்பட்டிருக்கிறது, மனு ஸ்மிருதி என்ன சொல்கிறது?

‘க்ஷத்ரியனை விட உயர்ந்தவன் இல்லை. ஆகையால் ராஜசூயம் நடக்கும்போது, பிராமணன் க்ஷத்ரியனை விட தாழ்வான இடத்திலேதான் அமர வேண்டும்’ – இது சதபத புராணம் கூறுவது. ‘சந்திரன், வாயு, அக்னி,
10.சூரியன், இந்திரன், குபேரன், வருணன், யமன் ஆகிய எட்டு உலக நாயகர்களின் அம்சங்களைக் கொண்டவன் அரசன். ஆகையால் அவனுக்கு அசுத்தம் கிடையாது’ என்றும் சொல்கிறது. பிராமணன் அரசனாக முடியாது என்றும் கூறுகிறது மனு தர்மம். இதிலிருந்து, க்ஷத்ரியர்களே உயர்வானவர்களாக
11.சொல்லப்பட்டுள்ளனர் என்பது தெளிவாகிறது.

மற்றொரு குற்றச்சாட்டு, பிராமணர்களுக்கு பல சலுகைகள் அளிக்கப்பட்டுள்ளன என்பது. உதாரணமாக பிராமணனுக்கு வரி விலக்கு என்பது. இதை மனு தர்மம் யாருக்கு அளிக்கிறது? நன்கு கற்றறிந்து, வேதம் ஓதி, இரந்து உண்ணும் பிராமணனுக்கே இச்சலுகை.
12.பிராமணனாகப் பிறந்து, வேறு தொழில் ஒருவன் செய்வானாயின் அவனுக்கு எவ்வித சலுகையும் வழங்கவில்லை மனு தர்மம். மாறாக, வன்மையாகக் கண்டிக்கிறது. எவ்வளவு வசதியாக இருந்தாலும், ஜாதியைப் பொறுத்து சலுகை வழங்கும் இன்றைய சட்டங்களைப் போற்றுவோருக்கு, மனு ஸ்மிருதி தவறாகத்தான் தெரியும்.
13.மனு ஸ்மிருதி பிராமணர்களுக்கு மரண தண்டனையிலிருந்து விலக்கு அளிக்கிறது என்றால் வேதங்களை கற்றுணர்ந்து, தனக்கு வகுத்த முறைப்படி வாழும் எந்த பிராமணனும் மரண தண்டனை அளிக்கும் அளவுக்கு தவறு இழைக்க மாட்டான் என்ற நம்பிக்கையே காரணம். இதில் தவறேதும் இல்லையே. இன்று வரை மரண தண்டனை விதிக்கத்
14.தகுந்ததாக கருதப்படும் குற்றங்களான கொலையிலும், கற்பழிப்பிலும், ராஜ த்ரோகத்திலும் எத்தனை பிராம்மணர்கள் சம்மந்தப்பட்டிருக்கின்றனர்? பார்ப்பன பயங்கரவாதம் என்று இந்த இருபத்தி ஓராம் நூற்றாண்டில் பிதற்றிக் கொண்டிருப்பது தொடர்ந்த போதும் பிராமணர்கள் குற்றங்களிலோ, குற்றங்களைத்
15.தூண்டுவதிலோ, வன்முறையை ஊக்குவிப்பதிலோ எந்த பங்கும் கொள்வதில்லை என்பதே உண்மை.

பிராமணனுக்கு மரண விலக்கு அளிக்கும் அதே மனு ஸ்மிருதிதான் இதையும் சொல்கிறது

அஷ்டோபாத்யம் து சூத்ரச்ய
ஸ்தேயே பவதி கில்பிஷம்.
ஷோடசைவ து வைச்யச்ய
த்வாத்ரிம்சத் க்ஷத்ரிச்ய ச.
ப்ராம்மனச்ய சது: ஷஷ்டி:
16.பூர்ணம் வாபி சதம் பவேத்.
த்விகுணா வா சது.
ஷஷ்டி: தத் தொஷகுனா வித்தி: ஸ:

அதாவது, ‘அறிந்து திருட்டுக் குற்றத்தை செய்கின்ற சூத்திரனுக்கு, வழக்கமான தண்டனையை விட எட்டு மடங்கு அதிக தண்டனையை விதிக்க வேண்டும். வைச்யனுக்கு பதினாறு மடங்கு. க்ஷத்ரியனுக்கு முப்பத்திரண்டு மடங்கு.
17.குற்றத்தின் தன்மையை அறிந்தவன் என்பதால் பிராமணனுக்கு 64 அல்லது 100 அல்லது 128 மடங்கு தண்டனை விதிக்க வேண்டும்’. பிராமணனுக்கு சலுகைகள் தரும் அதே மனு ஸ்மிருதிதான் இதனையும் கூறுகிறது.

இந்த சலுகைகள் பிராமணனுக்கு மட்டும் வழங்கப்படவில்லை. முதியோர், ஊனமுற்றோர், ஏழைகள், சிறு தொழில்
18.செய்வோர் என அனைவருக்கும் வழங்கப்பட்டுள்ளது. ஒரு பிராமணன் மனு தர்மத்தின் படி வாழ்கையில் அவன் ஏழை என்ற பகுதிக்குக் கீழ் வந்து விடுகிறான். ஏனெனில், வேதங்களின் படியும், மனு தர்மத்தின் படியும், பிராமணன் அடுத்த நாள் உணவுக்காகக் கூட பொருள் சேர்த்து வைக்கக் கூடாது.
19.பிராமணனுக்கு சலுகைகளைத் தரும் அதே மனு தர்மம்தான் அவன் மீது இத்தகைய சுமைகளையும் ஏற்றுகிறது. மற்ற எந்த தரப்பினருக்கும் இத்தகைய கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்படவில்லை.

பிராமணர்கள் மனு ச்மிரிதியை உருவாக்கி இருந்தால் தாங்களே தங்களுக்கு இத்தகைய கட்டுப்பாடுகளை இட்டுக்
20.கொண்டிருப்பார்களா? இன்று இந்திய சட்டத்தின்கீழ் சலுகை பெறுவோருக்கு ஏதேனும் கட்டுப்பாடுகள் உள்ளனவா? நீங்கள் சற்றே சிந்திக்க வேண்டிய விஷயம்.

ஸம்ஸமித்யுவஸே வ்ருஷன்னக்னேன விச்வான்யர்ய ஆ (ரிக்)
21.பொருள்: நன்மையை அள்ளிக் கொடுக்கின்ற தெய்வமான அக்னி தேவனே! எல்லா உயிரினங்களையும் ஒற்றுமையாக இருக்கச் செய்வாயாக!’

- தொடரும்
You can follow @malathyj1508.
Tip: mention @twtextapp on a Twitter thread with the keyword “unroll” to get a link to it.

Latest Threads Unrolled:

By continuing to use the site, you are consenting to the use of cookies as explained in our Cookie Policy to improve your experience.