ஃபுல்லி ஆட்டோமேட்டிக் வாஷிங் மெஷின் நல்லா ஓடல, இன்னைக்கு அதை மல்லாக்க போட்டு என்னன்னு பாக்கணும்
#DIY
#DIY
1,2&3. நீர் நுழைவை நிறுத்தி, இன்லேட் பைப்பை கழட்டுவது & மின் இணைப்பை நீக்குவது தான் முதல் வேலை
4. இடது/வடது புறம் வாஷிங் மெஷினை சாய்த்து படுக்க வைத்து கவர் எதாவது இருந்தால் கழட்டிடனும்
4. இடது/வடது புறம் வாஷிங் மெஷினை சாய்த்து படுக்க வைத்து கவர் எதாவது இருந்தால் கழட்டிடனும்
5a. மோட்டாரில் இருந்து டிரம்மை இணைக்கும் பெல்ட் தான் பெரும்பாலும் கல்பிரிட். வாங்கி எப்படியும் 5-6 வருஷம் உபயோகம் அதற்கு மேல் பால்கனி வெயிலில் இருந்தால் இப்படி ஆகத்தான் செய்யும்.
5b. இது பெல்ட் எவ்ளோ லூஸ்னு காட்ட ஒரு சின்ன விடியோ
5c. ஹோல்ட் செய்யும் இந்த போல்டுகள் ஃபிரேமில் ஒரு ஓட்டையில் இல்லாமல் ஸ்லாட்டில் பொருத்தப் பட்டிருக்கும். போல்டுகளை கொஞ்சம் லூஸ் பண்ணி ஸ்லாட்டில் தூரம் தள்ளி டைட் செய்யணும். ரொம்ப டை்டாக செய்யாமல் எவ்வளவு தேவையோ அதுக்கும் கொஞ்சம் கம்மியாக பெல்ட் டைட்னெஸ் இருக்கணும்.
5d. டைட் செஞ்சப்புறம் ஒரு வீடியோ
6a. அப்பப்போ descaling powder போட்டு வெறும் மெஷின் சைக்கிள் ஓட விடுவேன் அட்லீஸ்ட் வருஷம் 2 முறை. இருந்தாலும் உள்ள எவ்வளோ அழுக்கு இருக்குன்னு பாப்போம்.
6b. முடிஞ்சா அளவுக்கு சுத்தம் பண்ணி, மெஷினை மாட்டியாச்சு. தண்ணி & மின் இணைப்புகளை கொடுத்து இன்னைக்கு துணி துவைச்சாச்சு. 

