மருத்துவ கருக்கலைப்பு சட்டம், அது மிகத் தேவைப்படும் பெண்களிடம் தோல்வியுறுகிறது

:(
1971ஆம் ஆண்டு மருத்துவ கருக்கலைப்பு (எம்டிபி) சட்டத்தின் கீழ் கருக்கலைப்பு செய்வதற்கான கோரிக்கையை, சென்னை உயர் நீதிமன்றம் மறுத்ததை அடுத்து, பலாத்காரத்துக்கு உள்ளான ஒரு பெண், தம்மை பலாத்காரம் செய்வதவரின் குழந்தையை பெற்றெடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
பாதிக்கப்பட்ட பெண்ணை முதலில் ஒரு மருத்துவர் 19வது வாரத்தில் பரிசோதித்தார்; சட்டப்படி அனுமதி இருந்தும், கருக்கலைப்பு செய்ய மருத்துவர் மறுத்துவிட்டார்.
எம்டிபி சட்டம், 20 வாரங்கள் வரை கருக்கலைப்பு செய்ய அனுமதித்தாலும், 20 வாரங்களுக்கு குறைவான கருவை கலைக்ககோரும் 40 மனுக்கள், ஏப்ரல் 2016 முதல் 2019 ஜூலை வரை நாடு முழுவதும் உள்ள நீதிமன்றங்களில் தாக்கல் செய்ய வேண்டியிருந்தது, ஏனெனில் மருத்துவர்கள் கருக்கலைப்பு செய்ய மறுத்து விட்டனர்
இதில் 33 வழக்குகள், பலாத்காரத்தால் பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் தொடரப்பட்டவை.
பாதுகாப்பான கருக்கலைப்பு செய்ய பெண்களைஅனுமதிக்காததன் மூலம், நீங்கள் அவர்களுக்கு இரு வாய்ப்புகளுடன் விட்டுவிடுகிறீர்கள்: ஒன்று, மரணம் (பாதுகாப்பற்ற மற்றும் சட்டவிரோத கருக்கலைப்பால்), அல்லது தயாராகாத ஒரு கர்ப்பத்தால் பெண்களுக்கு ஏற்படும் உளவியல் மற்றும் உணர்ச்சி விளைவுகள்”.
கருக்கலைப்பு தொடர்பாக நீதிமன்றங்களின் தாமதமான விசாரணை, மற்றும் கருக்கலைப்பு மீதான களங்கம் ஆகியவை தான் முக்கிய காரணங்களாக உள்ளது.
எம்டிபி சட்டம் தெளிவற்றது மேலும் காலாவதியானது.

அதன்படி, பாலியல் பலாத்காரம், மன வளர்ச்சி மற்றும் உடல் வளர்ச்சியுடன் கரு இருந்தால், கருத்தடை செயலிழந்தால் என காரணங்களுக்காக 20 வாரங்கள் வரை கலைக்க அனுமதி தருகிறது.
திருமணமாகாத பெண்கள் கருத்தடையை காரணம் கூற முடியாது.
20 வாரங்களுக்கு பின் கருவில் அசாதாரண நிலை கண்டறியப் பட்டால் அது தேவையற்ற கருவாக மாறக் கூடும்.

ஆனால் இவைகள் எல்லாம் கருத்தில் கொள்ளப்படுவதில்லை. அது கட்டாயப் பிரசவம் ஆக்கப்படுகிறது.
இளம்வயது பிரசவத்தின் விளைவுகளை இவை கருத்தில் கொள்வதில்லை :

பாலாத்காரம் மூலம் உருவாகும் கருவின் பொருட்டு தாயின் உடல்நலம் மட்டுமே கருத்தில் கொள்ளப்படுகிறது.

வன்கொடுமை மூலம் பாதிக்கப்பட்டவரின் கருவை கலைக்க அனுமதிக்காதது மனித உரிமை மீறல் என ஐ. நா தெரிவித்துள்ளது.
சிறுமிகளுக்கு "பிரசவத்தால் "ஏற்படும் பாதிப்பு தான் மரணத்திற்கு முக்கிய காரணம் என்று உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது.
கருக்கலைப்பு என்பது பிரசவத்தை விட சிறந்தது என டால்வி கூறுகிறார்.

இதையெல்லாம் தவிர்த்து கருக்கலைப்பு செய்யும் முழு உரிமை பெண்களுக்கு உண்டு என்பதை ஏற்கமறுக்கின்றனர்.
நமக்கு இப்போது தேவை sex education. இதை பண்ணால் இவையெல்லாம் கடைப்பிடிக்கப்பட வேண்டும் என்பதை Adults க்கு சொல்லி தரனும்.

ஒருவேளை இவை இல்லாமலோ, இவை பயனற்று போனாலோ, இவை தவிர வன்கொடுமையினால் தேவையற்ற கரு உண்டானால் அவை சாதாரணமான சிகிச்சை போல மருத்துவமனை மேற்க்கொள்ள வேண்டும்.
Abortion is basic right என்ற நிலைமை தான் சரியானது.

அது ஒரு உயிர் பாவம் புண்ணியம் அச்சச்சோ என்ற கூறுபவர்களுக்கு ஒன்று தெரிவதில்லை, 10 வார கரு ஒரு திராட்சை பழ அளவுள்ள சதைக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை அந்த பெண்ணுக்கு கொடுக்கலாம்.
மாடுகளுக்காக மனிதனை கொல்லும், பாலியல் சுகத்திற்காக குழந்தை மற்றும் பெண்களை வன்கொடுமை செய்யும், அவ்வளவு ஏன் சாதி மதத்திற்க்காக பெற்ற பிள்ளைகளை கொல்லும் பிற்போக்குவாதிகள் தான் திராட்சை பழ அளவுள்ள கருவுக்கு வக்காலத்து வாங்குகின்றனர்.
ஒரு பெண் நியாயமான காரணங்களுக்காகவோ, அல்லது மன உடல் நலனுக்காகவோ, அல்லது இப்பொழுது வேண்டாம் என்ற காரணத்திற்காகவோ அல்லது காரணமே இல்லாவிட்டாலுமே அவளுக்கு கருக்கலைப்பு செய்ய உரிமை உண்டு. அவள் உடல் மீது அவளுக்கு முழு அதிகாரம் உண்டு.
You can follow @Nightmirror_im.
Tip: mention @twtextapp on a Twitter thread with the keyword “unroll” to get a link to it.

Latest Threads Unrolled:

By continuing to use the site, you are consenting to the use of cookies as explained in our Cookie Policy to improve your experience.