🌺என்ன.... புரிகிறதா மக்களே??🌺

“தமிழக மாணவர்களைக் காப்பாற்றுங்கள்.... நீட் தேர்வைத் தடை செய்யுங்கள்...”

மீடியா: அப்படின்னு நான் சொல்லலை... ஆனா இவுக ஏதோ சொல்றாக...

மக்கள்: ஓ... கொரோனாவுக்காக் சொல்லுதாகளா?

மீ: இல்லல்ல... அந்த பரிச்சையே வேணாமாம்.

மக்: ஏன்? நம்ம பொன்னாத்தா
மவனுக்கு நல்ல மார்க்கு எடுத்ததால காசே வேணாமுன்னு சொல்லிப்புட்டாங்களே வைத்தியரு படிப்புக்கு... அப்பறம் ஏன்?

மீ: அப்டியில்ல... எல்லாரும் பொன்னாத்தா மவன் போல படிக்க முடியுமா?

மக்: வானாம்... நம்ம சின்னான் மவ... அவகூட நல்ல மார்க்கு வாங்கி வைத்தியருக்கு படிக்கிதே! அதுக படிக்கலையா?
மீ: இல்லப்பா... ஏழைங்க எப்புடி படிக்கிறதுன்னு கேக்காக....

மக்: த... குசும்பு தான... பொன்னாத்தா கீரை வித்து பொளக்கிது. சின்னான், மீனு விக்கிறான். அவுக மக்கா தானே ரெண்டும்?

மீ: புரியாம பேசுத. வைத்திக்கு படிக்க நெனச்சு, மார்க்கு வாங்க முடியாத புள்ளைக நாண்டுக்கிட்டு சாகுதாம் பாவம்.
அதத் தடுக்கத்தேன் பேசுதாக.

மக்: இது என்ன ராசா கூத்து? என் மவன் கூடத்தான் பண்ணண்டாப்பு பெயிலுன்னு நாண்டுகிட்டான். அதுக்காக பண்ணண்டாப்பு பரிச்சயே வக்கக் கூடாதுன்னா அது எப்புடி?

மீ: அவன் ஏன் பாஸாவலன்னு தான கேள்வியே? ஆயிருந்தா உசுரோட இருந்திருப்பான்ல?
மக்: வெவரங்கெட்டு உளறாத. ஏழை புள்ள எப்புடி படிக்குமுனு கேக்குறவன் கண்ணுக்கு, அதே ஏழை சனத்துல வைத்திக்கு சேருற நிறைய புள்ளைங்க தெரியலையா?

மீ: இல்லப்பு. அவுக ஒரு புள்ள கூட பரிச்சையால சாவக்கூடாதுன்னு சொல்லுதாக.

மக்: தப்பில்ல... அதுக்கு? பரிச்சை வேணாம்பாகளா? அதுக்கு முந்தி வவுப்பு
எடுக்குற வாத்திங்க, நல்லா எளுதி பாஸாவுற மாதிரி சொல்லித் தரணும். எங்க?

இப்ப எம்மவ இஸ்கூல்ல பாதி நேரம் வாத்தி தூங்குது. இல்லன்னா தன் வேலையப் பாக்குது. பின்னால வூட்டுக்கு வா டூசனுக்குன்னு சொல்லுது. இப்புடி வவுப்பெடுத்தா எப்புடி புள்ள படிக்கும்? இதுகளால நல்ல வாத்திக்கும் கெட்ட பேரு.
மீ: அப்ப வாத்தி தான் காரணங்கறியா சாவுக்கு?

மக்: இல்லப்பு. ஒரு புள்ளய நல்லா படிக்க வக்கிறதும் சரி, அதே படிக்க முடியாத புள்ளக்கி நல்லவிதமா தெகிரியம் சொல்லுறதும் சரி, ஒரு நல்ல வாத்தியாலதான் முடியும். பரிச்சைக்கு நம்பிக்கையோட போறபடி புள்ளங்களை வளக்கத்தானே வாத்திய நம்பி அனுப்புதோம்?
இந்த வயசுல அதுக வாத்தி பேச்ச மட்டுந்தானே கேக்கும்? அப்ப அவுகளுக்கும் இதுல பங்கிருக்குங்குறேன்.

மீ: அப்ப வாத்திய மாத்திட்டா எல்லா புள்ளயும் படிச்சுருங்கற?

மக்: மொசப்பய... உளறிக்கிட்டே இரு. எந்த புள்ளக்கி எந்த படிப்பு வருமுனு கண்டு, அதுக்கு படிக்கச் சொல்லி வாத்தி சொல்லித் தரணும்.
அடுத்து பெத்தவுகளும், புள்ள தெறமக்கேத்த படிப்புல சேக்கணும். நம்ம ரங்கன் மவனைப் பாரு... கொஞ்ச காலம் நம்ம பாய் மவனோட, அவுக செருப்புக் கடையிலதேன் எப்பவும் ஒக்காந்து படிச்சான்.

பொறவு பண்ணண்டாப்பு முடிச்சு, ஏதோ தோலு படிப்பு படிக்கனுமின்னு ரங்கனைக் கேட்டான்.
ஏண்டானதுக்கு, “நானும் செருப்புக் கடை வக்கனும்பா. எனக்கு அது நல்லா வருது. ரொம்பப் புடிச்சிருக்கு”ன்னான். படிச்சான், எங்கெங்கயோ வேல பாத்தான்... இப்போ, ஒரு பெரிய பாக்டரி கட்டிப்புட்டான்... அவங்கீள கிட்டத்தட்ட 2000 மக்கா வேலைக்குப் போவுது.

என் சின்னதம்பி மச்சான் கூட அங்குனதான்
வேல பாக்கான். இவுக முன்னேறலையா? மொதோ, புள்ளைக மனசுல பயத்தைக் குடுக்கக் கூடாது பெத்தவுக. வவுத்துக்கு நாலுவாயி சோத்துக்கும், துணிக்கும் தானே படிப்பு? வேற எதுக்கு சம்பாதிக்கோம்?

இதுக்கு என்ன படிப்பு படிச்சா என்ன? அது ஏன் வைத்திக்கு தான் படிக்கோனும், அதுக்குத்தான்... இதுக்குத்தான்னு
புள்ளைகள படுத்தனும்? துன்ற சோத்துக்கு பிச்சை எடுக்காம, படுத்ததும் தூக்கமில்லாம பொரளாம, கந்தத்துணி இல்லாம, அடுத்த வேளக்கி மட்டும் வச்சு, மனுசவுக நாலு பேருக்கு நல்லது செஞ்சுட்டு இருந்தாலே போதும். நிம்மதியா இருந்து சாவலாம்.

அத்த வுட்டுப்புட்டு இந்தியப் படிக்காத, அரசு சொல்லுற பாடம்
படிக்காத, வைத்திக்கும், இஞ்சினிக்கும் தவுர வேற எதுக்கும் படிக்காத, உன் திறமைக்கேத்ததப் படிக்காத, புடிச்ச சோலி செய்யாத, உன்ன இந்த சாதின்னு பாப்பான் சொன்னான்... அவனண்ட ஒட்டாத, ஆனா உன் சாதி இது... அவன் சாதி அது...

ஒக்கா மக்கா.... குடிச்சா தப்பில்ல... அதுவும்
எங்க கடையில மட்டுங்குடி, சாமி கும்புடாத, கோயிலுக்குப் போவாத, தேரு இழுக்காத, மணி அடிக்காத, சந்தனம் வக்காத, காவி கட்டாத, பொட்டப் புள்ளயா அடக்கமா இருக்காத...

கட்டிக்காமயே எவுககூடவும் இரு தப்பில்ல, புருசன் தப்பு செஞ்சா நீயும் செய்யி தப்பில்ல, ரெண்டு பொம்பளங்களோ ரெண்டு ஆம்பளங்களோ
கட்டிக்கிட்டு குடும்பம் நடத்து தப்பில்ல, ரொம்பப் படிச்சு மார்க்கு வாங்கனுமின்னு அவசியமில்ல, நீ சும்மா எத்தயோ எழுது போதும் கவர்மெண்டு படிக்க வக்கனும்,

நீ பெயிலானாலும் வேலை குடுக்கனும், அதுவும் படிச்சவனுக்கு போல சம்பளம் கேளு, குடுக்கலன்னா உன் சாதியாலன்னு சண்ட போடு....
இப்புடியெல்லாம் பேசுதாகளே அப்பு.... இப்ப வாற அரசியலாளுக... இதெல்லாம் சரின்னு நெனக்கியா?

நான் இஸ்கூலு படிக்கயில மூதுர, நன்னெறி, நல்லகதன்னு என்னென்னவோ சொல்லித் தந்தாக சின்ன வயசுல. அதுல இப்போ ஒன்னு கூடக் காணலயேப்பு... இதான் படிப்பா?

பீடி புடிச்சு நெஞ்சுமாசு வருதுன்னு சொல்ல வேண்டிய
வைத்தி, ஆயாசமா வெள்ளபீடி புடிக்கிது... இதேன் வைத்திக்கு படிச்ச லச்சனமா? ஒரு புள்ளக்கி இத்தோட கஸ்டம் தெரிஞ்சும் வெள்ளபீடி புடிக்குதுன்னா அது சம்பத்துக்குதேன் அப்பு...

ஆத்தா வாத்தைக்கு அடங்குற வூட்டுப் புள்ள போதும் அப்பு நாளக்கி நல்ல தலமொற வளர. பணமும் படிப்பும் வச்சுக்கிட்டு
இப்புடி கெட்டுப் போவுறதா முக்கியம்? அன்னைக்கு டிவி பொட்டியில சொல்லுதாக, ஒரு வைத்திக்கு படிக்கிற இஸ்கூலுல புள்ளைகளுக்கு அவுகளே உள்ளாற சாராயக்கட வச்சிருக்காகளாம்...

இத்தக் கண்டிக்க துப்பில்ல, புள்ளைகளுக்கு ஒளுக்கபாடம் தரத் துப்பில்ல, அடிக்காத புள்ளயும் ஒடிக்காத முருங்கயும்
நல்லா வளருமா? வாத்திய அடிக்காதன்னு படுத்துனா, அவனும் போடான்னு கண்டுக்காம போவுறான். இத்த சரிசெய்ய துப்பில்ல. புள்ளைகள புடிச்சதப் படிடா தம்பின்னு தட்டிக்குடுத்து சொல்லித்தந்து படிக்க வக்கத் துப்பில்ல... வந்துட்டாய்ங்க பேசுறதுக்கு.

இவுக வூட்டுப் புள்ளைக மட்டும் இந்தி கத்துக்கரலாம்,
ஆனா நம்ம புள்ளைக ஏதோ ஒரு பாசய காசில்லாம படிச்சி முன்னேறக்கூடாது... இல்ல? கேட்டா “அப்புடி ஒங்க புள்ளயும் படிக்கிற அளவுக்கு ஏளங்க முன்னேறனு”ங்குறான் ஒருத்தன். படிக்க வுட்டாத்தானடா முன்னேற?

பெயிலானவன நல்லா படிக்க வச்சி, வைத்திக்கு சேரவையி... எங்க காலத்துல என்ன இத்தினி பேரா படிப்பால
செத்தாக? வாராங்காட்டி, வர்றதப் படிக்க வக்கிறத வுட்டுப்புட்டு இவுகளே பெத்தவுக மனசுல வைத்திக்கும் இஞ்சினிக்கும் படிச்சாதேன் மவுசுன்னு பதிய வக்கானுக.

புள்ளைக அப்பன் ஆத்தா அடிக்குமேங்குற பயத்துலயே தான் சாகுது... அத்த எவன் பேசுறான்?

இவனுக வெள்ள சொக்கா போட்டு காசு சம்பாதிக்க, ஊரான்
வூட்டுப் புள்ளைக சாவக்காட்டி வியாபாரமாக்குறான்...

தா... அவனக்கேளு... எந்த வவுப்புக்கும் பரிச்சயே வேணாம். எல்லாம் பாஸு. எல்லாம் டாக்டரு...
நாளப்பின்ன இவனுகளுக்கு வவுத்தால போவுறதுல ஆரம்பிச்சு... ஆபரேசன் முடிக்கும் எல்லாத்தைக்கும் இந்தப் புள்ளைகளாண்ட தான் வருவேன்னு ஒவ்வொருத்தனையும்
மேடையில நம்ம முன்னக்க சத்தியம் செய்யச் சொல்லு... செய்வானா பாரு... பொறவு வந்து அவனப் பேசச் சொல்லு...

இந்த ஒளறலுக்கு ஒரு கூட்டம், அதுல முக்குத்துணியில எழுதி வேற பேசுறானுக...

ஹையோ... ஹையோ... ஏ... அடியேய்... செம்பருத்தி... கருவாட்டுக் கொளம்பு வச்சிருக்கேன்... எடுத்துப்போடி ஆத்தா...
ஹூம்! நம்மதேன் இவனுகளக் கேள்வி கேக்க முடியாம உசுருக்கு பயந்து கெடக்கோம். நம்ம புள்ளகளாவது நாளக்கி எந்திரிச்சு பேசட்டும்.

எங்க படிப்பு, நாங்க பரிச்ச எழுதி படிச்சுக்குறோம்... நீங்க ஓரமா ஒக்காருகன்னு. படிச்சவன் இதுகளத் தூக்கி வீசுனாத்தான் திருந்துங்க போல... நான் வாரேன் அப்பு....
மீ: ஆத்தா... அது வந்து...

மக்: போ... போ... வேற சோலியப் பாருப்பு.... இவனுக பின்ன சுத்திக்கிட்டு, உம்புள்ள படிப்பக் கெடுத்து வக்காத...

மீ: 🙄🙄🤒🤒

🍁வாஸவி நாராயணன்🍁
@threader_app compile
You can follow @VasaviNarayanan.
Tip: mention @twtextapp on a Twitter thread with the keyword “unroll” to get a link to it.

Latest Threads Unrolled:

By continuing to use the site, you are consenting to the use of cookies as explained in our Cookie Policy to improve your experience.