பரிணாம வளர்ச்சி கொள்கையில் தக்கன பிழைத்தல் அல்லது தகுதியுடையதே தப்பி பிழைக்கும் எனும் கோட்பாடு அருமையான ஒன்று. சமூக இயற்கை சூழ்நிலை மாற்றங்களுக்கு ஏற்ப மாறி கொள்ளவில்லையெனில் தப்பி பிழைப்பது கடினம். முன்னொரு காலத்தில் அன்றைய சூழ்நிலைகளுக்கு ஏற்ப உருவாக்கப்பட்ட தத்துவங்களும் 1/11
கட்டமைப்புகளும், விதிகளும் இன்றைய கால கட்டத்திற்கு பொருந்தாமல் அல்லது பயனற்று இருந்தால் அதை மாற்றி புதியன படைக்காத ஒரு சமூகம் முன்னேறி செல்ல வாய்ப்புகள் குறைவு. மன்னராட்சி, சர்வாதிகார ஆட்சி, பணம் படைத்தோரின் ஆட்சி, மததலைவர்களின் ஆட்சி என்ற அன்றைய காலகட்டத்தில் இந்த பாரை ஆண்ட2/12
ஆட்சிமுறைகளுக்கு மாற்றாக மக்களாட்சி தத்துவம் முன்னெடுக்கப்பட்டது. அதனால் இந்த மனித சமூகம் பயனடைந்துள்ளது என்பதில் மாற்று கருத்து இல்லை. ஆனால் அந்த தத்துவம் இன்று எந்தெந்த ஆட்சி முறைகளுக்கு எதிராக நின்றதோ அவர்களின் கோர கரங்களில் மாட்டி தவிக்கிறது.அதிக வாக்கு பெற்றால் வெற்றி 3/11
என்ற ஒற்றை நோக்குடன் வாக்குகளை பெற என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என பண, படை, ஊடக
பலம் கொண்டவர்கள் ஆடும் அதிகார விளையாட்டிற்கு ஊமை பார்வையாளர்களாக மட்டுமே மக்கள் இருக்க வேண்டிய நிலைக்கு தள்ளபட்டுள்ளனர். யார் கையில் பணம் இருக்கிறதோ அவர்கள் அவர்களை பற்றிய வெற்று பிம்பத்தை 4/11
பலம் கொண்டவர்கள் ஆடும் அதிகார விளையாட்டிற்கு ஊமை பார்வையாளர்களாக மட்டுமே மக்கள் இருக்க வேண்டிய நிலைக்கு தள்ளபட்டுள்ளனர். யார் கையில் பணம் இருக்கிறதோ அவர்கள் அவர்களை பற்றிய வெற்று பிம்பத்தை 4/11
ஊடக உதவியுடன் கட்டமைக்கிறார்கள். வாக்குகள் விலை பேசப்படுகின்றன. மது புட்டிகள் முன் மக்களாட்சி தத்துவம் தடுமாறுகிறது. இத்தனை ஆண்டுகள் ஆன பிறகும், எளியவர்களின் உணர்வுகளை பிரதிபலிக்கின்ற ஆட்சி நடத்துவோர் இங்கு வெகுகுறைவு. எவரோ ஒருத்தரின் உற்றார், உறவினர்கள் பயன்பெறும் தொழிலாக 5/11
மக்களாட்சியின் வடிவான கட்சி அரசியல் மாறி இருக்கிறது. கால மாற்றத்திற்கேற்ப மக்களாட்சி முறையிலும் மாற்றம் தேவை. இல்லையெனில் அது ஆதிக்க சக்திகளினால் மழுங்கடிக்கப்பட்ட ஆயுதமாக மாறி விடும். அரசியல் என்பது மக்களுக்கு சேவை என்ற மனப்பான்மை கொண்டவர்களுக்கானது என்ற நிலை வேண்டும் 6/11
கொள்ளையர்களுக்கும், ரவுடிகளுக்கும் அதில் இடமில்லை என்ற நிலை வரவேண்டும். திறமையுள்ள தகுதியுள்ள யாரும் மக்களை வழிநடத்தும் தலைவராக மாற வாய்ப்பளிப்பதாக அரசியல் மாற வேண்டும்.ஒரு செயலை அதே முறையில் திரும்பதிரும்ப செய்து வேறு வேறு விளைவுகளை எதிர்பார்க்கும் விந்தை மனிதர்களை போலத்தான்7/11
அதே அரசியல் நடத்தும் வெவ்வேறு கட்சிகளை தேர்வு செய்து மாற்றத்தை எதிர்பார்ப்பதும். மாற்ற வேண்டியது அரசியல் கட்சிகளை அல்ல. அரசியலை.. மக்களாட்சி கொள்கையின் குரல்வளையை நெறித்து கற்கால நிலையை நோக்கி செல்ல ஆண்டைகள், அரசர்கள் தங்களை சூழ்நிலைக்கேற்ப மாற்றிக் கொண்டு மக்களாட்சி வழியிலே 8/11
புகுந்து அவர்களின் அரசாட்சி நடத்துகின்றனர். செங்கோல்கள் இல்லை ஆனால் குறுநில மன்னர்கள் ஆட்சி,வாரிசு ஆட்சி இல்லை ஆனால் வாரிசுரிமை போர், பரம்பரைக்கு மட்டுமே ஆட்சிபீடம் சொந்தம் என்று மறைமுக வழியில் மக்களாட்சி தத்துவம் மாய்க்கப்படுகிறது. அதற்கு ஏற்றாற்போல் அரசியல், ஆட்சி இயந்திரம்9/11
தன்னை மாற்றிக் கொள்ள வில்லையெனில் மக்களாட்சி தத்துவம் மரணித்து போகும். மன்னராட்சி காலத்திலே குடவோலை முறை கண்டு மக்களாட்சிக்கு அடித்தளமிட்ட மண் இது. இன்று மக்களாட்சி காலத்தில் மன்னராட்சி தொடர்வதை மட்டும் ஏற்குமா?. மாற்றங்கள் பலவற்றின் ஆரம்ப இடமான இந்த மண்ணில் மக்களாட்சி 10/11
மன்னராட்சியாக மாறுவதை தடுப்பதற்கான மாற்று முயற்சியும் உருவாகியுள்ளது. உங்கள் தலைமுறை தப்பி பிழைக்க தகுதியுடையவர்களை தேர்ந்தெடுங்கள். மாற்று அரசியலை ஆதரியுங்கள் சேவையை மட்டும் மையமாக கொண்ட தூய்மையான அரசியல், மக்கள் தலைவர் வழி காட்டும், ஆன்மீக அரசியலை ஆதரியுங்கள்.
#Vote4Rajin
#Vote4Rajin