#CreditCards 😊
#கடன்_அட்டை
(EMI -2)

#இழை #Thread

முந்தைய பதிவில் சில அடிப்படைகளை பார்த்தோம்..!😊
(படிக்காதவர்களுக்கு Link கீழே.!)
சரி வாங்க, "யாரெல்லாம் கடன் அட்டையை தவிர்ப்பது நலம்" - என இந்த பதிவில் அலசுவோம்..!🧞

#EMI #Loan #Finance #Banking

https://twitter.com/theroyalindian/status/1302986094720376833?s=19
முன்னாடி கேபிள் டிவில எல்லாம் ஒரு சில படங்கள் போடுறதுக்கு முன்னாடி..
"வயதானவர்கள்,
இதயம் பலவீனமானவர்கள், குழந்தைகள்,
கர்ப்பிணி பெண்கள்
இத்திரைப்படத்தை பார்ப்பதை தவிர்க்கவும்"
ன்னு Slide போடுவாங்க..!
(இதன் நோக்கம் படம் பார்க்க கூடாது என்பது அல்ல, Risk எடுக்காதீர்கள் என்பதே )😊
அது போல, கடன் அட்டையை வாங்க யார் யார் எல்லாம் Risk எடுக்க வேண்டாம் அல்லது தவிர்க்கலாம், அப்படின்னு ஒரு Slide போடலாம்.
(இதுக்குன்னு வரையறை எல்லாம் கிடையாது, எல்லாம் ஒரு புரிதலுக்காகவே😊)

🔥 #அந்தஸ்தின்_அடையாளமா🤔
"என்னோட பெருளாதார சூழ்நிலை (Financial Situation)நல்லாதான் இருக்கு,
ஆனாலும், Credit வைச்சிருக்கிறது ஒரு பெரிய பெருமை அல்லது அந்தஸ்த்தின் அடையாளம்" அப்படின்னு ஒரு நினைப்பு இருந்தா அதை அப்படியே குழிதோண்டி பொதச்சிட்டு Credit Card பக்கமே போயிடாதீங்க..!
ஏன்னா வங்கிகளுக்கு இந்த மாதிரி 'Financially Good' Persons தான் Preferred Target. (விருப்ப தேர்வு).!
🔥ஒரு விஷயம் நல்லா புரிஞ்சிக்கோங்க, தேவை இருந்தா வாங்குங்குறது வேற..! ஆன இந்த அந்தஸ்து பெருமை ன்னு எல்லாம் நினைச்சு CC வாங்காதீங்க..! (வாங்குறது கடன் அதுல என்ன பெருமை🙄)

🔥 #இலவச_விரும்பிகள் 😂
அப்புறம் ஒரு Group இருப்பாங்க..! இலவசம் ன்னு சொன்னா போதும் ஏதுவா இருந்தாலும் சரி அதை..
வாங்க முதல் ஆளாக Line ல நிப்பாங்க.!
"இது ரொம்ப தவறுங்க.!"🤦
இப்போ கிரெடிட் கார்டுகளை எல்லாம் வங்கிகள் நேரடியாக அல்லாமல் ஏஜென்டுகள் மூலமாக தான் நமக்கு Promote பண்றாங்க.! அவங்களுக்கு Monthly இவ்வளவு Credit Card ன்னு Target இருக்கு..! அதை Achieve பண்ண Maximum இந்த மாதிரி Free ன்னு
ஏதாவது சொல்லுவாங்க! ஒரு‌சில (Amazon Pay மாதிரியான)
கடன் அட்டைகளை தவிர பெரும்பாலான அட்டைகள் இலவசம் கிடையாது.!

🔥 #புரிதல்_அவசியம்
Credit Card ல
📜Joining Fees
📜Annual Fees or Charges
ன்னு ரெண்டு இருக்கும்.!
இதுல ஏதாவது ஒன்றோ அல்லது ரெண்டுமே கிடையாது சார், Freeன்னு சொல்லுவாங்க.!
அவங்க தர்ற Pamphlet ல கூட
"No joining fees and No Annual fees"
ன்னு பெருசா போட்டு கீழ சிறுசா
*Conditions Apply ன்னு ஒன்னு போட்டு இருக்கும்..!🙄 பாருங்க,
அங்கதான் ஆப்பு அசால்ட்டா தூங்கிட்டு இருக்குன்னு அர்த்தம்..!😂

இதெல்லாம் கார்டு வாங்கும்போது கவனிக்க மாட்டோம்..!
ஆனா கார்டு வந்ததுக்கு அப்புறம் முதல் மாதம் Bill வரும் பாருங்க அப்போது தெரியும்..!
Bill அ பார்த்தா Joining Fees 500+18% GST ன்னு போட்டிருக்கும்..!
Free ன்னு சொன்னாங்களே ன்னு Phone பண்ணி கேட்டா சொல்லுவாங்க பாருங்க ஒரு Reason.!
"Joining Fees Free தான் சார், அனா அதுக்கு நீங்க Card
Receive பண்ண 10 நாட்களுக்குள்ள மினிமம் 3000ரூ க்கு Purchase பண்ணியிருக்கனும் Sir." ன்னு சொல்லி இன்னும் வெறுப்பேத்துவாங்க. சரி இதையெல்லாம் ஏன்ய்யா முதல்லையே சொல்லலேன்னு கேட்டா "Terms & Conditions ல Clear ஆ போட்டிருந்தோம்மே சார், நீங்க படிக்கலையா" ன்னு வேற கேட்டு Plate அ அப்படியே
நம்ம பக்கம் திருப்புவாங்க பாருங்க.,
(அவங்க Mind Voice: "இதெல்லாம் சொன்ன நீ எங்க டா வாங்குவ")😂
இந்த டென்ஷன்னோட கிரெடிட் கார்டு வாங்கும்போது வந்த கவரை பிரித்து பார்ப்போம்.!
அதுக்குள்ள நிறைய பேப்பர் இருக்கும்
Welcome offer, Bonus, Discount அது இதுன்னு சொல்லி ஏகப்பட்டது இருக்கும்😂
இதெல்லாம் நல்ல வளவளப்பான Paperல்ல கலர்ல Print போட்டிருப்பாங்க. இந்த எல்லா Paperலையும் *Terms&Conditions Apply ன்னு சிறுசா கீழே போட்டிருக்கும்!

இந்த Pampletsக்கு நடுவே
"குரூப்ல டூப்" Range க்கு சரியா வெளுக்காத வேட்டி கலருல ஒரு சில Papers B&W Printingல சின்ன Fontsல இருக்கும்.😂
அது தாங்க முக்கியமான
அந்த
"Terms and Conditions" Sheet.! 😂
எவ்ளோ பெரிய Business Tactics பாருங்க..!
(அதாவது பார்த்தவுடனே நமக்கு படிக்க தோணக்கூடாது, அல்லது சாதாரணமான வேற ஏதோ Paperன்னு தூக்கி போடுற மாதிரி இருக்கும்)
படிச்ச தெரிஞ்சுகிட்டா அப்புறம் அவங்களுக்கு என்ன பிசினஸ்.!
அத படிக்க படிக்க தான் பல தரமான உண்மைகளும், சூட்சுமங்களும் தெரிய வரும்..!
ஒரு சிலருக்கு அந்த ஆங்கில மொழிநடையே புரிந்தது கொள்ள கடினமாக இருக்கும்.!
(இதெல்லாம் எவ்வளவு கொடுமை)😕
Agent எவ்வளவு லாவகமாக நம்ம தலையில கட்டிடான்னு அப்பதான் உணருவோம்.

Annual Fees ஆவது Free ன்னு நினைச்சா
அதுல 'வருஷத்துக்கு குறைந்தபட்சம் இவ்வளவு தொகை கடன் அட்டை வழியாக செலவு செய்திருக்க வேண்டும்' என போடப்பட்டிருக்கும்..!
(அந்தத் தொகை ஒரு மிகப்பெரிய தொகையாக இருக்கும்)

எனவே இலவசமாகக் கொடுக்கிறார்கள் என ,சரியான புரிதல் இல்லாமல் ஏமாற வேண்டாம்..!🤗
🔥 #டேபிள்மேட்_வியாபாரமா 😂
"எங்க எதிர்த்த வீட்டு மாமா அந்த Credit Card வச்சிருக்காரு..
மேல்வீட்டு அண்ணே இந்த Credit Card வச்சிருக்காரு..
என்னோட நண்பன் இரண்டு கிரெடிட் கார்டு வச்சிருக்கான்.."
இப்படி மத்தவங்கள பார்த்து நாமளும் ஒன்னு வாங்குவோமே ன்னு தேவையே இல்லாம வாங்காதீங்க..!
🔥 #செலவா_விரயமா 😊
பொதுவா நம்ம Friends&Family வட்டத்தில் ஒருசிலர் இருப்பாங்க..
அவங்களை பத்தி பேசும்போதே
📜"ஐயோ அவனா.. அவனுக்கு கடன் குடுத்தா திரும்ப வராதே.!"
📜"அவனா வெட்டியா தேவையே இல்லாம காச தண்ணியா செலவு பண்ணுவானே..!"
இந்த மாதிரியான Categoryல நம்மளையும் வச்சிருந்தாங்கன்னா,
Credit Card வாங்கும் முன் சற்று யோசிக்கவும்..!

"தேவைக்கு பண்ணா தான் அது செலவு.
தேவையில்லாம பண்ணா அது விரயம்."

இது ஒன்றும் பெரிய குற்றமில்லையே.. பிழைதான் மாற்றிக்கொள்ளலாம்..!
ஆனால் இதை நாம் தான் சுயபரிசோதனை (Self Analysis) செய்து தெரிந்து கொள்ளனும்..!😊
நம்ம இந்த Category ல இருக்கிறோம்மா இல்லையா என கண்டுபிடிக்க முடியவில்லையா..!
சரி கவலைய விடுங்க..! நீங்க
Singles ன்னா அப்பாகிட்ட கேளுங்க,
Locked ன்னா உங்க Life Partner ட்ட கேளுங்க.!
நம்முடைய நலம் விரும்பி இவஙக தான். இவங்க நம்மள பத்தின மிகச் சரியான மதிப்பீடுகளை சொல்லிடுவாங்க.!😊
இல்ல நா பிரண்ட்ஸ் கிட்ட தான் கேட்டு தெரிஞ்சுப்பேன்னா பிரண்ட்ஸ் ட்ட கேட்டு தெரிஞ்சுக்கலாம்..!
ஆனா நீங்க சொல்லறதுக்கெல்லாம் "ஆமாம் சாமி" போட்டு, உங்கள
உசுப்பேத்தி விடாத நண்பர்களா பார்த்து கேட்பது உத்தமம்..!😊
கேட்டதுக்கு அப்புறம் நல்லா நிதானமா யோசிச்சு முடிவு பண்ணுங்க..!
🔥 #வள்ளல்_பரம்மபரையா 😳
ஒரு சிலர் இருப்பாங்க.., யாரு இல்லைன்னு வந்து கேட்டாலும் கையில, பாக்கெட்டுல இருக்கிறத அப்படியே எடுத்து கொடுத்துடுவாங்க..!
(இந்த காலத்திலும் இப்படி எல்லாம் இருக்காங்களான்னு நினைக்காதீங்க.. நிறையபேர்
இருக்காங்க...🙂)இது தப்பில்லை..
ஆனா இதுலையே இன்னும் சிலர் ஒரு படி மேல போய் கடன் வாங்கி கூட அடுத்தவங்களுக்கு உதவுவார்கள். அவ்வளவு இரக்க குணம்.!
(ஆனா உலகம் அப்பேர்பட்டவர்ளை பார்த்து 'பெரிய வள்ளல் பரம்பரைன்னு நெனப்பு'ன்னு தான் ஏளனம் செய்யும்)
இந்த உதவும் குணமும், கருணை மனமும் விமர்சனத்திற்கு அப்பாற்ப்பட்டது..!
சில நேரம் இது உரியவருக்கு பேருதவியாக கூட இருக்கலாம். அதனால் அப்படிப்ட்வர்களுக்கு ஒரே ஒரு வேண்டுகோள்.நீங்கள் Credit Card வாங்குவதை தவிர்ப்பது நல்வது.!ஏனெனில் உங்களது இரக்கமனமும் உதவும் குணமும் கூட உங்களுக்கே ஒரு சில நேரம் இந்த கிரெடிட் கார்டு இருப்பதன் காரணமாக எதிரியாக அமையலாம்..!
🔥 #மேலும்_சில
📜வங்கிகளில் உங்களுக்கு உள்ள Deposits ஐ அடிப்படையாகக் வைத்தும் கூட Credit Card வாங்கலாம். இந்த Deposit நம் எதிர்கால தேவைக்காக போட்டு வைத்திருக்கும் பணம். இதன் மூலம் வாங்கும் Credit Cardகளில் Bill Pending, Payment Issues இந்த மாதிரி பிரச்சினை வந்தால் சில நேரம்
அது நம் முதலுக்கே (Deposits) ஆபத்தாக முடிந்து விடும்.!

📜"ஏற்கனவே ஒரு Home Loan அப்புறம் ஒரு Personal Loan வேற போய்கிட்டு இருக்கு" இந்த மாதிரியான சூழ்நிலைகளில் எழும் பொருளாதார நெருக்கடிகளை சமாளிக்க கடன் அட்டையை வாங்காதீர்கள். இது நிலைமையின் தீவிரத்தை இன்னும் மோசமாக்கிவிடும்.!🙄
📜சில நேரங்களில் இந்த கிரெடிட் கார்டு Promote பண்ற ஏஜென்டுகள் தங்களுடைய சில சோக கதைகளை சொல்லி நம்மை கிரெடிட் கார்டு வாங்குமாறு Request பண்ணாங்கன்னா.., கோபப்படாதீங்க.
ஆனால், அதேநேரம் உங்களுக்கு Credit Card வாங்க விருப்பம் இல்லை எனில் சுமூகமாக மறுத்து விடுங்கள்..!
ஏனெனில் அவர்களுக்கு இரக்கப்பட்டு நாம் நமது கைகளை நாம் சுட்டுக் கொள்ள கூடாது.!🙄

மேற்சொன்ன அத்தனை வகைப்படுத்தலுக்கு பின்னும் ஒவ்வொரு தனிப்பட்ட மனிதர்களின் அனுபவ கதைகள் உள்ளன. நாம் இதையெல்லாம் வெறும் ஒரு செய்தியாக பலமுறை கடந்து போய் இருப்போம்.
உங்களை பயமுறுத்த வேண்டும் என்று இவை எழுதப்படவில்லை...
உங்களுக்கு பயன்படவேண்டும் என்றே இவை எழுதப்பட்டுள்ளது..!😊

அப்போ இந்த கடன் அட்டை எல்லாம் யாருதான் வாங்குவது என்று கேட்கிறீர்களா..!
மேற்சொன்ன வகைப்படுத்தலில் வராத எல்லோருமே வாங்கலாம்..!😊
(அவர்களையும் வாங்க வேண்டாம் என்று சொல்லவில்லை ரிஸ்க் எடுக்க வேண்டாம் என்று தான் சொல்கிறோம்)
கடன் அட்டையை பயன்படுத்தும் விதத்தில் பயன்படுத்தினால் எந்த பாதகமும் இராது. இதில் பல நன்மைகள் உள்ளன..!
அதற்கு நாம் நமக்கு பொருத்தமான கடன் அட்டையை தேர்வு செய்வது அவசியம். அது எப்படி என்பது பற்றியும், மேலும் இந்த Credit Cards வழங்கும்

🔥Reward Points
🔥Cash Back
🔥Discounts
🔥Offers

இதெல்லாம் பற்றியும் வரும் பதிவுகளில் காணலாம்..!
கடந்த பதிவில்,
EMI என்பது Easy Monthly Installments என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. அதன் சரியான Banking Term 'Equated Monthly Installments' என்பதாகும். சுட்டிக்காட்டிய நண்பர்களுக்கு நன்றி..!😊

நன்றி மக்களே..!
🙏🙏🙏
You can follow @theroyalindian.
Tip: mention @twtextapp on a Twitter thread with the keyword “unroll” to get a link to it.

Latest Threads Unrolled:

By continuing to use the site, you are consenting to the use of cookies as explained in our Cookie Policy to improve your experience.