தமிழில் வரலாற்று புத்தகங்களை தேடினால் ஒரு விஷயத்தை அவதானிக்க முடிகின்றது

1930க்கு பின்னரான அதாவது இந்த ராம்சாமி கோஷ்டி அட்டகாசம் செய்ய தொடங்கிய காலத்தில் இருந்து தமிழக எழுத்துலகில் தமிழக வரலாறுகள் மறக்கபடிக்கபட்டன‌

அண்ணாதுரையும் அவரின் உடன்பிறப்புக்களும் ஐரோப்பிய வரலாறுகளையே
இங்கு புகுத்தின , அதுவும் உருப்படியாக புகுத்தினார்களா என்றால் இல்லை

அரைகுறை சீசர் வரலாறு, நெப்போலியனின் தொல்விக்கு பொய்யான காரணம் என சொல்லி சொல்லி புகுத்தினார்கள், தமிழக வரலாற்றை புதைத்து அதில் ஐரோப்பிய வரலாறு, ரஷ்யாவின் மார்க்ஸிம் கார்க்கி ,டால்ஸ்டாய் என கொண்டு நிரப்பினார்கள்
தமிழக சேர சோழ பாண்டி மன்னர்களை பற்றியோ, அவர்களின் வரலாறு பற்றியோ துளியும் எழுதவில்லை

அதை கல்கி எழுதினார், சாண்டில்யன் எனும் பாஸ்யம் அய்யங்கார் எழுதினார் இன்னும் வெகுசிலரே எழுதினர், பாலகுமாரனின்உடையார் அதில் கடைசியாக வந்த பகுதி

ஆக திராவிட கோஷ்டி தமிழக மன்னர்கள் பற்றி எழுதவே
இல்லை, அதிலும் கருணாநிதி அவருக்கு தகுந்தபடி திருகுறள்,கண்ணகி என வளைத்தார்

இளங்கோவின் சிலம்பில் வரும் தெய்வம் கருணாநிதியின் பூம்புகாரில் வரவே இல்லை,அது வராது

அண்ணாதுரை கூட "சிவாஜி கண்ட இந்து ராஜ்யம்" என மராட்டியன் கதையினை தொட்டாரே தவிர தமிழக புலித்தேவன் போன்றோர் பக்கமே வரவில்லை
கிளியோபாட்ரா வரலாற்றை எழுதிய அண்ணாவுக்கு தமிழக‌ வேலுநாச்சியார் கதையினை எழுத மனமில்லை, காரணம் அவள் சிவபக்தை

ஒன்றா இரண்டா இவர்களின் வஞ்சக மோசடிகள்?

ஏன் இப்படி செய்தார்கள்?

திராவிட கோஷ்டிக்கு எழுத்து வராதா? இல்லை தமிழக வரலாறு தெரியாதா?. அவர்களுக்கா தெரியாது எல்லாம் தெரியும்
ஆனால் அதை தொட்டால் தமிழன் இந்து என்பதை சொல்லவேண்டும்,அவனின் கோவில் பணியினை சொல்லவேண்டும்,அவன் இந்துவாக இந்தியனாக இருந்தான்,பார்ப்பான் தமிழ் மன்னனுக்கு கட்டுபட்டான் என்றெல்லாம் உண்மையினை சொல்ல வேண்டும்

இதனால் வஞ்சகமாக தமிழக வரலாறுகளை புதைத்து அதில் ஐரோப்பிய வரலாற்று கட்டங்களை
கட்டினார்கள் அந்த அயோக்கிய திராவிட கூட்டம்

கல்கி,சாண்டில்யன்,பாலகுமாரன் அதில் தனித்து நின்று நம் வரலாற்றை நமக்கு சொன்னார்கள்

இதில் யார் தமிழுக்கு,தமிழகத்துக்கு பாடுபட்டவர்கள் என்றால் இந்த இரண்டாம் வரிசையே,ஆனால் இவர்கள் இங்கு கொண்டாடபடவுமில்லை,உரிய அங்கீகாரம் கொடுக்கபடவுமில்லை
ஏன்?

அவர்கள் இத்தமிழின் வரலாற்றை , தமிழக வரலாற்றை சொன்னவர்கள், அதிலும் கடவுள் நம்பிக்கை உடையவர்கள், அதைவிட முக்கியம் பிராமணர்கள்

பின் எங்கிருந்து அங்கீகாரம் கிடைக்கும்?

இந்த படுபயங்கர மோசடியின் பெயர்தான் திராவிட பகுத்தறிவு, திமுக செய்த தமிழின, தமிழ் கலாச்சார பாதுகாப்பு
You can follow @Wolfrik1.
Tip: mention @twtextapp on a Twitter thread with the keyword “unroll” to get a link to it.

Latest Threads Unrolled:

By continuing to use the site, you are consenting to the use of cookies as explained in our Cookie Policy to improve your experience.