Health Insurance #1

நாம் ஒரு ஃபீவர், சளி இருமல் என்றால் மருத்துவரிடம் செல்கிறோம். அவர் ஊசி போட்டு மாத்திரை தருவார். செல்லும் போதும் 200-500 ரோ எடுத்து செல்வோம். ஏன் என்றால் நமக்கு தெரியும் எவ்ளோ செலவாகும் என்று. காரணம் நாம் நம் budget க்கு ஏத்த மருத்துவரை சென்று பார்ப்போம்
சிலர் 100-200 consulting, மற்றவை maximun 300 க்குள் என ஸ்டாண்டர்ட் ஆக செலவு ஆகிறது. ஆனால் ஒரு திடீர் மருத்துவ செலவு accident, cataract surgery, fracture போன்றவை நடந்தால் நாம் அருகில் என்ன நல்ல ஆஸ்பத்திரி இருக்கிறதோ அல்லது ஆம்புலன்ஸ் நம்மை எங்கு இட்டு செல்கிறதோ அங்கே செல்வோம்.
ஆனால் அங்கே ஒரு பிரச்சினை. ஆம் பாமார மக்களின் தலையாய பிரச்சினை. பணம். உள்ளே செல்லும் போது ஒரு பயம் வந்துவிடும். savings இருப்பின் சரி. இல்லை என்றால் வீட்டில் சொன்ன உடனே எந்த நகை யை அடகு வைக்கலாம், யாரிடம் கடன் கேக்கலாம் என்று தான் முதலில் யோசிக்க தோன்றும். ஆனால் யோசித்து பாருங்க
வருடம் ஒருவருக்கு ஒரு சிறிய தொகை அனுப்பி விட்ட, திடீர் செலவுகளை அவர்கள் பார்த்து கொள்வார்கள். அவர்கள் தான் health இன்சூரன்ஸ் கம்பெனிகள். வருடா வருடம் ஒரு பிரீமியம் கட்டி விட்டால் உங்கள் மருத்துவ செலவுகள் கவனித்து கொள்வார்கள். மருத்துவ காப்பீடு அனைவரின் budgetடில் தேவையான செலவு
செலவு இல்லை உங்கள் செலவுகளை தடுக்கும் முதலீடு. health insurance மூன்று கூறுகள் கொண்டது. 1. விலை 2. பயன்கள் 3. Claimகள்

1. விலை

Health Insurance கவரேஜ் சில லட்சம் முதல் சில கோடிகள் வரை உள்ளது.

நீங்கள் 3 லட்சம் ரூபாய்க்கு கவரேஜ் எடுதுள்ளீர்கள் என்று கொள்வோம். ஒரு மருத்துவ
அவசரத்திற்கு 2L செலவாகி விட்டது என்று கொள்வோம். அந்த நிறுவனம் உங்களுக்கு 2L வரை அந்த நிறுவனம் தர வேண்டும். "L வரை" என்று சொன்னேன். அதாவது மருத்துவர் consultation, Bed charges(குறிப்பிட்ட அளவு), surgery, பின்பு 3 மாத checkup வரை அவர்கள் தர வேண்டும். இதில் நிறைய clause உள்ளது
இந்தியாவில் சராசரி 26 கம்பெனிகள் இத்துறை யில் இயங்குகிறது. ஒவ்வொன்றும் 9-10 விதமான plans வைத்துள்ளன . மொத்தம் 260 plans உள்ளன. அனைத்தும் compare செய்ய முடியாது. ஒரு நடுத்தர குடும்பத்திற்கு 3-15 லட்சம் வரை காப்பீடு போதும்.

இதில் பிரீமியம் (செலுத்த வேண்டிய தொகை)வருடா வருடம்
கூடிக்கொண்டே போகும். குடும்ப இன்சூரன்ஸ் ஃபேமிலி floater என்று சொல்வார்கள். அது செலவு கூட ஆனாலும் அனைவருக்கும் சேர்த்து வந்துவிடும்.
யாராவது எங்கள் கம்பெனி மருத்துவ காப்பீடு பத்தி explain செய்கிறேன் என்று சொன்னால் அவர்களிடம் நீங்கள் அடுத்த 10 வருடதிர்க்கு வருட வாரியாக
எவ்வுளவு உயரும் என்று எழுதி கேளுங்கள். அதோடு நில்லாமல் உங்களுக்கு 40 வயது என்றால் 50,60 வயதில் பிரீமியம் எவ்வுளவு கட்ட வேண்டும் என்று எழுதி கேளுங்கள். full details சை excel லில் போட்டு மெயில் அனுப்ப சொல்லுங்கள். எதும் எழுத்தில்/mail லில் வையுங்கள். call செய்தால் record செய்யுங்க
இன்சூரன்ஸ் agent களுக்கு பெரும்பாலும் உங்கள் முதல் பிரீமியம் அமௌண்ட் டை bonus சாக கம்பெனி குடுக்கும். அதற்கு ஆசை பட்டு அவர்கள் 10 லட்சம் வேண்டாம் 20 லட்சம் கவர் எடுங்கள் என்பார்கள். சில ஆயிரம் தான் கூட என்பார்கள். நம்பாதீர்கள். தேவை என்றால் மட்டும் பெரிய அமௌன் நோக்கி செல்லவும்.
அவர்களை வேலை வாங்குவதற்கு அஞ்சாதீர்கள். அவர்கள் உங்களுக்கு உதவ தான் உள்ளார்கள். நல்லபடியாக நடத்துங்கள். மரியாதையாக பேசுங்கள். corona அவர்கள் தொழிலையும் ஆட்டி பார்த்து விட்டது .ஆனால் பாவம் பார்த்து உங்கள் காசை இழக்க கூடாது. நாமும் நாயடி பட்டு சம்பாதித்த காசு நீங்கள் கட்ட
முடியாமல் தவித்தா அவர்கள் கட்ட போவதில்லை.

ஜாக்கிரதை. சரி அடுத்த விஷயம்

இரண்டாவது கூறு பயன்கள் (Benefits)

எட்டு எட்டா மனித வாழ்வை பிரிப்பது போல 8 விஷயங்கள் கவனிக்க வேண்டும். அவை நாளை.

நண்பர்களிடம் share செய்யுங்கள். RT செய்யுங்கள். நன்றி
You can follow @_VforViking.
Tip: mention @twtextapp on a Twitter thread with the keyword “unroll” to get a link to it.

Latest Threads Unrolled:

By continuing to use the site, you are consenting to the use of cookies as explained in our Cookie Policy to improve your experience.