92காலகட்டங்கல்ல அம்மையார் #ஜெயலலிதா தன்னோட உடன்பிறவாச் சகோதரி #சசிகலா கூட சேந்துட்டு #கும்பகோணம்_மகாமகத்துக்கு குளிக்க போய் செஞ்ச கூத்துல அப்பாவிக இறந்தது இப்போதைய இளைய தலைமுறைகளுக்கு தெரியட்டும்னு ஒரு #திரெட் போடலாம்னு..
#கும்பகோணம்
#மகாமகம்
#வரலாறு #திரெட்...

#கும்பகோணம்
#மகாமகம்
#வரலாறு #திரெட்...

1992 பிப்ரவரி 18-ம் தேதி கும்பகோணம் மகாமகம். அதற்கான நாள் நெருங்க நெருங்க பலவிதமான சர்ச்சைகளும், இனம் புரியாத அச்சமும் தமிழகத்தில் பரவிக் கொண்டிருந்தன. .

கும்பகோணம் மகாமகக் குளத்தில் முதல் அமைச்சர் ஜெயலலிதா நீராடப் போகிறார் என்ற செய்தி மேலும் பதற்றத்தை உருவாக்கியது. கும்பகோணம் முழுவதும் ஜெயலலிதாவின் வானுரய கட்-அவுட்களால் நிறைந்து போனது..

அ.தி.மு.க-வினர் தீவிர வசூல் வேட்டையில் இறங்கினர். 17-ம் தேதியே போலீஸ் கெடுபிடிகள் தொடங்கின..

ஜெயலலிதா நீராடுவதற்காக பல லட்சங்களைக் கொட்டி குளியலறை அமைக்கப்பட்டது. “முதல்வர் வந்து நீராடிவிட்டுப் போகும்வரை பக்தர்கள் யாரும் குளத்தில் இறங்கக்கூடாது” என்று போலீஸ் கட்டுப்பாடு விதித்தது..

திகிலடைந்தவர்கள் மகாமகத்துக்கு முதல் நாளே நீராடிவிட்டுக் கிளம்பினர். மகாமகத்தன்று காலை 8.30 மணிக்கு குளத்தருகே பக்தர்கள் மெதுவாகக் கூடத் தொடங்கினர்..

போலீஸ் அவர்களைக் கட்டுப்படுத்தியது. அந்தக் கட்டுப்பாடு எல்லாம், 9.30 மணி வரை மட்டுமே. அதன்பிறகு, குளத்தில் நின்ற மக்கள் கூட்டம் வேகமாகக் கூடிக் கொண்டே போனது. போலீஸால் அதைக் தடுக்க முடியவில்லை..

ஜெயலலிதா நீராடுவதைப் பார்க்க மக்கள் கூட்டம் முண்டியடித்துக் கொண்டு அந்த இடத்தை நோக்கி முன்னேறிக் கொண்டே இருந்தனர்..

ஜெயலலிதா வருவதற்கு ஒரு மணி நேரத்துக்கு முன்பே குளத்தருகே வந்த தேவாராம் ஐ.ஜி. பைனாகுலரில், மக்கள் நெருக்கியடித்து அவதிப்படுவதைப் பார்த்துக் கொண்டிருந்தார்..

ஆனால், அவர் கையை விட்டு எல்லாம் போய் இருந்தது. அவரால் வேடிக்கை மட்டுமே பார்க்க முடியும் சூழல் அப்போது. சரியாக காலை 11.32 மணிக்கு ஜெயலலிதா நீராடுவதற்காக பிரத்யோகமாக அமைக்கப்பட்டு இருந்த பகுதிக்கு வந்தார். .

அங்கிருந்து கூட்டத்தைப் பார்த்துக் கையசைத்தார்.ஜெயலலிதா கை அசைத்ததை அவருக்கு நேர் எதிரில், வடக்கு வீதிப்பக்கம் இருந்தவர்களால் பார்க்க முடியவில்லை. இடையில் இருந்த ஒரு கோயில் அவர்களை மறைத்தது.
எனவே, அந்தப் பகுதியில் இருந்தவர்கள் முன்னுக்கு வந்து பாங்கூர் தர்மசாலா கட்டடத்தின் வெளிப்புறம் இருந்த கிரில் வைத்த கட்டைச் சுவர் மீது ஏற முயன்றனர். அதைத் தொடர்ந்து இரும்பு கிரில் கட்டைச் சுவரோடு சாய்ந்தது. அதில் நசுங்கி பலர் இறந்தனர்.

அந்தத் துயரம் ஏற்படுத்திய ஓலம், பதற்றத்தில் பாதிக்கப்பட்டவர்கள் தெறித்து ஓடத் தொடங்கினர். அதே நேரத்தில் குளத்துக்குள் இருந்தவர்கள் வெளியில் ஏறி ஓடத் தொடங்கினர்..

இதனால், நேரேதிரில் பதற்றத்தோடு ஓடிய கும்பல், கூட்டம் ஒன்றும் புரியாமல், ஒன்றோடு ஒன்று மோதி, கீழே விழுந்து, நசுங்கி, மூச்சுத் திணறி உயிரைவிட்டது..

அதற்கு நூறு அடி தூரத்துக்குள் சசிகலா ஒரு குடத்தில் மகாமகக் குளத்தின் தண்ணீரை அள்ளி அள்ளி ஜெயலலிதாவின் தலையில் ஊற்றினார். அதன்பிறகு ஜெயலலிதா அதேபோல் சசிகலாவின் தலையில் தண்ணீரை ஊற்றினார்..

கொஞ்சம் தள்ளி மக்கள் உயிரை விட்டுக் கொண்டிருந்தனர். நிகழ்ச்சியை வர்ணித்தவர்களின் வர்ணனை ஒலியில் மக்களின் மரண ஓலம் ஜெயலலிதா-சசிகலாவின் காதுகளில் விழவில்லை..

போலீஸ் தரப்பில் பலியானவர்களின் எண்ணிக்கை 48 என்று சொல்லப்பட்டது. ஜெயலலிதாவும் சசிகலாவும் கும்பகோணத்தில் இருந்து தனி ஹெலிகாப்டரில் இரண்டறை மணிக்கு மேல்தான் கிளம்பினார்கள்..

ஆனால், இறந்த உடல்கள் வைக்கப்பட்டு இருந்த குடந்தை மருத்துவமனைப் பக்கமோ... காயம்பட்டவர்கள் சிகிச்சை பெற்ற அவசர சிகிச்சைப் பிரிவையோ திரும்பிக்கூட பார்க்கவில்லை..

ரெட் கிராஸ்’ அமைப்பின் ஆம்புலன்ஸ்கள் மட்டும் இறந்தவர்களையும் காயம்பட்டவர்களையும் தேடி அலறிக் கொண்டிருந்தது.. அம்மையார் ஆட்டத்துல இது மாதிரி இன்னும் பல இருக்கு என்பது வரலாறு..
