திமுகவால் தான் பகுத்தறிவு வளர்ந்தது/நாமெல்லாம் படித்தோம்னு சொல்றதுக்கும்..பாஜக தான் இந்து மக்களின் காவலாளினு சொல்றதுக்கும் பெரிசா வித்யாசமில்லை..

40 வருடமா திமுகவினர் இந்து கடவுள்களை அவமதிக்கின்றனர்..அப்போலேந்தே பிஜேபி கண்டிச்சு தான்..இந்து மதம் இவ்வளவு நாள் வாழுதா என்ன? (Cont) https://twitter.com/soundar_murugan/status/1295752448649211905
நான் உட்பட பல இந்துக்கள் அமெரிக்காவில் வாழ்க்கின்றனர்.. 90% சதவீதம் கிறிஸ்த்துவர்கள் வாழும் நாடு.. பிஜேபி தான் எங்கள் இந்து உணர்வுகள் சாகாமல் பாதுகாக்குதா என்ன?

நான் படித்தற்கு திமுக காரணம் என்பதை எப்படி ஏற்க முடியாதோ..அதே போல
பல காலமாக என் வீட்டில் ஒலிக்கும் கந்த ஷஷ்டிக்கு பிஜேபி தான் துணை என்பதையும் ஒத்து கொள்ள முடியாது..

கறுப்பர் கூட்டம் இகழ்ந்தாலும் இகழாவிட்டாலும்..பிஜேபி கண்டிச்சாலும் கண்டிக்காவிட்டாலும்.. என் கடவுள் உணர்வை என் அனுமதியின்றி யாராலும் அழிக்க முடியாது..

அவனவன் அரசியல்..
பண்றதுக்கெல்லாம் நம் உணர்வை பகடை காயா ஆக்குவானுங்க..

பல மாமாங்கமா இழுத்துட்டு இருந்த கேஸை உடனடியா முடிச்சி.. சசிகலாவை உள்ள வைத்தது போல.. வேலூர் வீட்டில் கைப்பற்றின பணத்துக்கு துரைமுருகனை ஏன் உள்ள வைக்கல பிஜேபி..? சாதிக் பாட்சா கேசுல கொலை பண்ணவனே அப்ரூவரா மாறியும் கூட ஆ.ராசாவை
ஏன் கைது பண்ண படவில்லை? சும்மா நடிக்கிறானுங்க பிஜேபி..அதிமுக அமைச்சர்கள் பண்ணாத ஊழலா? அவங்களை ஏன் கண்டுக்க மாட்ராங்க?

ராஜகோபால்னு ஒரு பிஜேபி ஆதரவு பத்திரிக்கையாளர் ஒருவர் கூறுகிறார்.. 2021ல் யாருக்கும் மெஜாரிட்டி வராதபட்சத்தில் அதிமுகவை ஆட்சியில் அமர்த்த வேண்டும் என்பதே பிஜேபி
ஆசைனு

இந்து உணர்வால் யார் வலையிலும் விழாதீங்க சகோ.. உங்களை மீறி யாரும் உங்க உணர்வுகளை புண்படுத்தி விடமுடியாது..மதத்தை அழித்துவிட முடியாது..

#my2cents
You can follow @vaisu_tweets.
Tip: mention @twtextapp on a Twitter thread with the keyword “unroll” to get a link to it.

Latest Threads Unrolled:

By continuing to use the site, you are consenting to the use of cookies as explained in our Cookie Policy to improve your experience.