மஹேந்திர சிங் தோனி.
சச்சினுக்கு பிறகான காலக்கட்டத்தில் ஏறக்குறைய சச்சினுக்கு நிகரான ரசிகர் ஆதரவுடன் 15 வருடங்கள் இந்திய கிரிக்கெட்டில் கோலோச்சுவது என்பது சாதாரணமானதல்ல. அதற்கு தோனி கடந்து வந்த பாதைகளும் சாதாரணமானதல்ல.
#DhoniThePrideOfIndia
சச்சினுக்கு பிறகான காலக்கட்டத்தில் ஏறக்குறைய சச்சினுக்கு நிகரான ரசிகர் ஆதரவுடன் 15 வருடங்கள் இந்திய கிரிக்கெட்டில் கோலோச்சுவது என்பது சாதாரணமானதல்ல. அதற்கு தோனி கடந்து வந்த பாதைகளும் சாதாரணமானதல்ல.
#DhoniThePrideOfIndia
நான் கிரிக்கெட் ஆட ஆரம்பித்த சமையத்தில் fieldingல் எங்க நிக்கிற என்று கேட்ட மாத்திரத்தில் நான் சொன்னது 'Wicket keeping'ண்ணா என்பதே. லாங்கில் நின்றால் பாதி கிரவுண்டை நம் தலையில் கட்டிவிடுவர், கீப்பிங் என்றால் ஸ்டெம்ப் பக்கத்திலேயே நின்றால் போதும் என்று நினைத்து கேட்டேன்.
லாங்கில் நின்றிருந்தால் கூட அவ்வளவு ஓடியிருக்க மாட்டேன் போல, ஒவ்வொரு பந்திற்கும் உக்காந்து எழுந்து பந்தை பாக்கெட் பண்ணி பக்கத்து fielderக்கு எறிந்து சமையத்தில் bowlerருக்கே எறிந்து அடுத்த நாள் நானே கேட்டு லாங் ஆஃப் சென்று செட்டில் ஆனேன்.
அன்றிலிருந்து உலகத்தில் எந்த ஒரு அணி மேட்ச் ஆடினாலும் அதில் கீப்பிங் யாரு, அவன் background என்ன என்று ஸ்பெஷல்லா தேடி படிப்பதுண்டு. 2000ம் வருடத்திற்கு பின் ஏனோ இந்திய அணியில் சரியான விக்கெட் கீப்பர் அமையப்பெறாத காலம்.
அதற்கு முன் நயன் மோங்கியா என்றொரு விக்கெட் கீப்பரை வைத்து ஓரளவு ஓடிக்கொண்டிருந்தது. சமையத்தில் அவர் விக்கெட் கீப்பர் தானா என்றே சந்தேகம் வரும். மருந்துக்கும் பேட்டிங் வராது. டெயிலன்டர்களான ஸ்ரீநாத் கும்ப்ளே கூட சில பல மேட்ச்களில் நிலைத்து நின்று ஆடியிருப்பார்கள்.
இங்கிலாந்தில் அலெக்ஸ் ஸ்டூவர்ட், ஆஸியில் கில்க்றிஸ்ட், தென் ஆப்பிரிக்காவில் பவுச்சர், ஸ்ரீலங்காவில் கலுவதருணா, நியூஸியில் ஆடம் பெரோரே, ஜிம்பாப்வேயில் ஆண்டி பிளவர் என்று எந்த அணியை எடுத்தாலும் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன்கள் வரிசை கட்டி வெளுத்தள்ளிகொண்டிருந்தனர்.
அதே நேரம் இந்திய அணையில் 2000-2004க்குள் மட்டும் 7 விக்கெட் கீப்பர்கள் மியூசிக்கல் சேர் ளாடிக்கொண்டிருந்தனர். அதில் சாபா கரீம் மட்டும் ஓரளவு பேட்டிங் ஆடக்கூடியவர். கும்ப்ளே அவர் கண்ணையும் பதம்பார்த்து வீட்டுக்கு அனுப்பினார்.
ஜான்ரைட் பயிற்சியாளராக பொறுப்பேற்று கேப்டன் கங்குலியின் ஒத்துழைப்போடு செய்த மெருகேற்றலில் மிகமுக்கியமானது மெயின்ஸ்ட்ரீம் பேட்ஸ்மேனான டிராவிடை விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக்கியது. 50 ஓவர்களும் கீப்பிங் செய்து openerகள் சொதப்பும் சமையத்தில் ஒன்டவுன் இறங்கி ஆடுவதெல்லாம் ஏலியன் லெவல்.
இந்த நேரத்தில் தான் தோனி அணிக்குள் வருகிறார். முதல் மேட்சிலேயே டக் அவுட் அதுவும் ரன் அவுட். போச்சு இதுவும் அட்டக்கத்தியா என்று நினைத்த அடுத்த மேட்சிலிருந்து சும்மா பொறி பறக்குது. அன்றிலிருந்து Opening தவிர தோனி ஆடாத பேட்டிங் பொசிஷன் இல்லை.
என்ன தான் சச்சின் பேட்டிங்கில் எட்டு போட்டு லைசென்ஸ் வாங்கிருந்தாலும் ஒரு கேப்டனாக அவரால் சோபிக்க முடியவில்லை. 2003 உலகக்கோப்பையில் டிராவிட் தலைமையிலான அணி லீக் மேட்சிலயே வெளியேறி வீடு திரும்பியது.
கங்குலிக்கு பிறகு நல்ல கேப்டன் இல்லையோ என்றெண்ணிய நேரத்தில் 2007 டி20 உலகக்கோப்பை வர, தோனி தலைமையிலான இளம் இந்திய அணி களமிறக்கப்படுகிறது. சீனியர்கள் இல்லாத இந்திய அணி இதற்கு முன் 1998லேயே காமன்வெல்த் விளையாட்டுக்கு அனுப்பப்பட்டிருந்தது. படுதோல்வி வேறு.
முதல்முறையாக ICCயால் நடத்தப்படும் டி20 போட்டிகள், இளம் அணி, நாக் அவுட் முறை வேறு. அடுத்த பிலைட் முடிச்சு வந்துடுவாங்க என்றிருந்த எண்ணத்தில் அரைலிட்டர் எண்ணெய்யை உலகக்கோப்பை வைத்தே அள்ளி ஊற்றினார் தோனி.
களநிலவரம் அறிந்து ஆடுவதாகட்டும், முடிவுகள் எடுப்பதாகட்டும் அவருக்கு நிகர் அவரே. DRSக்கு முந்தைய காலத்தில் LBWக்கு அம்பயர் அவுட் குடுத்தால் அவ்ளோ தான். பந்து லெக் ஸ்டெம்ப் தாண்டி வெளியே போகுதா என்பதை சில நேரங்களில் விக்கெட் கீப்பர்களின் மூவ்மென்ட் வைத்து அம்பயர்கள் கணிப்பதுண்டு.
தோனியின் unorthodox கீப்பிங் பெஹவியரில் அம்பயர்கள் half-end decisionகள் நம்பக்கம் சாதகமாக வந்திருக்கிறது. ஆரம்ப காலத்தில் ஸ்டம்ப்க்கும் அவருக்குமான இடைவெளியை பயிற்சி அனுபவத்தின் வழி சரிசெய்து மின்னல்வேக ஸ்டம்பிங் செய்வதில் வல்லவரானார்.
தோனியின் ஆன் பீல்ட் decisionகள் பல ஒரு நல்ல கேப்டனுக்கான சிறப்புகளுள் ஒன்று. DRSல் அவர் அப்பீல் செய்து தவறானதாக சரித்திரம் இல்லை. பேட்டில் பட்டு சென்ற பந்தை பிடித்து அவர் கொண்டாடும் மாத்திரத்தில் பேட்ஸ்மேன்களே நடையை கட்டியதுண்டு.
அணி வீரர்களின் திறமையறிந்து fielding நிறுத்துவதாகட்டும், பௌலர்களை rotate செய்வதாகட்டும், போட்டியின் தன்மைக்கேற்ப order மாத்துவதாகட்டும், அவருக்கென்று ஒரு தனித்துவம் இருந்திருக்கிறது.
கடந்த இரண்டு ஆண்டுகளாக BCCI அவரை ட்ரீட் செய்த விதம் ஏற்புடையதல்ல, இருந்தும் களத்தில் இருப்பதைப்போன்றே சலனமின்றி இருந்திருக்கிறார். He is a truly inspiring hero and a leader. Of course, he is special in so many ways!
#DhoniRetired
#DhoniRetired