நானும் @padmapri யும் எப்படி ரஜினி ரசிகைகள் ஆனோம் அதற்கான விதை எப்போது விதைக்கப்பட்டது என்பது பற்றிய thread சில சம்பவங்கள் மட்டுமே இதில் தொகுத்துள்ளேன். இதை எழுதியவர் @padmapri. அவளின் accountல் problem இருப்பதால் நான் post செய்கிறேன்
#45YearsOfSuperstarRajini
1975ல் என் அப்பா தன் பெற்றோரோடு தியேட்டரில் சென்று பார்த்த படம் அபூர்வராகங்கள்.அப்போது அவரின் வயது 10.அன்றைக்கு அவருக்கு தெரியாது அந்த காந்தகண்கள் உடைய இளைஞன் @rajinikanth அவரை மட்டுமல்லாது அவரின் தலைமுறையே தன் ஈர்ப்பு சக்தியால் வசிக்கப் போகிறான் என்று.
#45YearsOfSuperstarRajini
1975ல் தொடங்கி இன்று வரை ரஜினி படங்களை ஒரு சில வேற்று மொழி படங்கள் தவிர்த்து தியேட்டரில் தான் எங்கள் அப்பா பார்த்துள்ளார்.ஏனென்றால் அந்த காலகட்டத்தில் தொலைக்காட்சி பிரபலம் இல்லை, அவர்களின் பொழுதுபோக்கு சினிமா தான்.
#45YearsOfSuperstarRajini
என் பாட்டி சினிமா விரும்பி. அவர்களுக்கு எந்த படம் ரிலீஸ் ஆனாலும் உடனே பார்த்துவிடவேண்டும்.என் தாத்தாவுக்கு சினிமா சுத்தமாக பிடிக்காது அதனால் பாட்டியை படம் பார்க்க அனுப்ப மாட்டார். இதில் ஆச்சரியம் என்னவென்றால் என் தாத்தா சரவணா தியேட்டரில் stall owner
#45YearsOfSuperStarRajini
மூன்று முடிச்சு படத்தில் ரஜினியின் நடிப்பை பார்த்து வியந்த என் பாட்டியும் கொள்ளு பாட்டியும் 'அவர்கள்' படம் பார்த்த பின்பு ரஜினியின் ரசிகர்கள் ஆகவே மாறி விட்டனர்.அந்த ஸ்டைலும் வில்லத்தனமும் அவர்களை ஈர்த்தது
#45YearsOfSuperstarRajini
என் அப்பா ரஜினியை விரும்ப ஆரம்பித்தது 16 வயதினிலே படத்திலிருந்து.என் கொள்ளுப்பாட்டி பார்த்த கடைசி படமும் அதுதான்.இது எப்படி இருக்கு என்ற வசனத்தை என் கொள்ளுப் பாட்டி என் அம்மாவிடம் சொல்லுவாராம்.என் பாட்டிக்கு வாழ்நாளில் மறக்க முடியாத படம் காயத்ரி தான்
#45YearsOfSuperstarRajini
அப்போது பாட்டி மதுராந்தகத்தில் இருந்தார்கள்.தாத்தா வேலைக்காக தினமும் ரயிலில் காலை 10 மணி அளவில் புறப்பட்டு மெட்ராசுக்கு வந்துவிடுவார்.தாத்தா கிளம்பியவுடன் பாட்டி 6 வயதான என் அம்மாவை உறங்க வைத்து வீட்டை பூட்டிவிட்டு காயத்ரி படம் பார்க்க சென்று விட்டார்
#45YearsOfSuperstarRajini
காயத்ரி படத்தை பார்த்துவிட்டு பஸ்ஸில் ஏறிய என் பாட்டிக்கு அதிர்ச்சி. தாத்தாவும் அந்த பஸ்ஸில் இருந்தார்.வீட்டுக்கு வந்தவுடன் மிகப்பெரிய சண்டையானது.முள்ளும் மலரும் ஆறிலிருந்து அறுபது வரை பார்த்துவிட்டு என் பாட்டி நாள் முழுக்க அழுது கொண்டே இருப்பாராம்.
#45YearsOfSuperstarRajini
எங்க அப்பா இளமை ஊஞ்சலாடுகிறது படத்தை செங்கல்பட்டு அங்கமுத்துவில் பார்த்துவிட்டு ஸ்கூலில் 'சிக்லெட்' 'டிகே' வசனங்களை பேசி காண்பித்தார். அதேபோல் படத்தில் ரஜினி ஸ்டைலாக கையெழுத்து போடுவார். அதனையும் முயற்சி செய்து பார்த்தார்
#45YearsOfSuperstarRajini
தில்லு முல்லு,நெற்றிக்கண் படம் தான் என் அம்மாவை ரஜினியின் தீவிர ரசிகையாக மாற்றியது. சக்கரவர்த்தி ரோலை வேறு யாராலயும் இந்த அளவிற்கு செய்திருக்க முடியாது என்று புகழ்வார். பாட்டிக்கும் அம்மாவுக்கும் அந்த படத்தில் வரும் ஒவ்வொரு வசனமும் மனப்பாடமாகத் தெரியும்
#45YearsOfSuperstarRajini
என் பாட்டிக்கு ஆடுபுலி ஆட்டம், இளமை ஊஞ்சலாடுகிறது, நினைத்தாலே இனிக்கும் ஆகிய படங்களில் கமலை விட ரஜினியை தான் புடிக்கும்.என் அப்பாவைத் தீவிர ரஜினி ரசிகராக மாற்றிய படங்கள் பிரியா,ஜானி,பொல்லாதவன், முரட்டுக்காளை,பில்லா, மூன்றுமுகம் தம்பிக்கு எந்த ஊரு
#45YearsOfSuperstarRajini
புதுக்கவிதை படத்தில் ரஜினி பைக் ஓட்டுவதை பார்த்துவிட்டு என் அப்பா jawa பைக் வாங்கி ஓட்ட கற்றுக்கொண்டார்.1983 க்குப் பின் அப்பா சென்னையில் செட்டில் ஆகிவிட்டார்.ரஜினி படத்தை ஆல்பர்ட்,அலங்கார், ஏவிஎம் ராஜேஸ்வரி,லிபர்டி தியேட்டர்களில் கண்டு களிப்பார்
#45YearsOfSuperstarRajini
எங்க அம்மா அபிராமி தியேட்டரில் பார்த்த முதல் ஹிந்தி படம் ஜான் ஜானி ஜனார்தன்.அம்மாவிற்கு துளிகூட ஹிந்தி தெரியாது. இருந்தாலும் ரஜினிக்காக அந்த படத்தை பார்த்தார்.ஏற்கனவே மூன்று முகத்தை இதற்கு முன் இரண்டு தடவை தியேட்டரில் பார்த்துள்ளார்
#45YearsOfSuperstarRajini
எங்க அப்பாவுக்கு fdfs ஆரம்பித்தது படிக்காதவன் படத்தில் இருந்து.அதுவும் அன்றைய நாள் மறக்க முடியாத நாளாக இருந்தது. @VettriTheatres ல் படம் பார்த்துவிட்டு செங்கல்பட்டு செல்லும் போது இடுப்பளவு வெள்ளத்தில் சென்றார் அன்றிலிருந்து தர்பார் வரை அவர் fdfsதான்
#45YearsOfSuperstarRajini
என் அப்பா பார்த்த முதல் ஹிந்தி படம் Andha Kanoon. என் அம்மா பார்த்த முதல் ஆங்கில படம் Bloodstone.என் பெற்றோருக்கு 1989ல் திருமணம் ஆனது. அவர்கள் திருமணம் ஆன பின்பு பார்த்த முதல் படம் ராஜாதி ராஜா. கணவன் மனைவி இருவரும் ரஜினியின் ரசிகர்கள் ஆக இருப்பது வரம்
#45YearsOfSuperstarRajini
அம்மா அப்பா இருவரும் கூட்டுக்குடும்பத்தில் இருந்தனர். என் அம்மா மாமியார் கொடுமை அனுபவித்தார்.அப்பாவும் குடும்ப ஒற்றுமைக்காக பொறுத்துக் கொண்டார்.அப்போது இருவருக்கும் ஆறுதல் தந்தது ரஜினி படம்தான்.என்ன கஷ்டம் வந்தாலும் ரஜினி படத்தை பார்த்து விடுவார்கள்
#45YearsOfSuperstarRajini
என் அப்பா அவங்க அம்மாவுக்கு தெரியாமல் மனைவியை பணக்காரன்,அதிசய பிறவி படத்திற்கு அழைத்து சென்றார். என் அப்பா ரஜினி படத்தை குறைந்தது நான்கு முறையாவது வெவ்வேறு தியேட்டர்களில் பார்த்துவிடுவார்.
#45YearsOfSuperstarRajini
தளபதி படத்தின் போதுதான் அப்பா ஏர்போர்ட்டில் தலைவரை முதன் முதலாக சந்தித்து ஆட்டோகிராஃப் பெற்றார். அதேபோல் தளபதி படத்திற்கு டிக்கெட் கிடைக்கவே இல்லை Rs.100க்கு உதயம் தியேட்டரில் பார்த்தார்.அந்த ஆட்டோகிராஃப் 5 வருடங்களுக்கு முன்பு தொலைந்துவிட்டது
#45YearsOfSuperstarRajini
என் அம்மா,அவரின் மாமியார்,நாத்தனார் அனைவரும் பொங்கல் பண்டிகையின் போது பார்த்த படம் மன்னன்.அவர்கள் @VettriTheatresல் extraசேரில் அமர்ந்து பார்த்தனர்.அந்த அளவுக்கு கூட்டம்.அம்மாவும் அப்பாவும் வள்ளி, அண்ணாமலை,வீரா படங்களை பாட்டிக்கு தெரியாமல் பார்த்தனர்
#45YearsOfSuperstarRajini
பாட்ஷா படம் என் அப்பா எங்கேயும் டிக்கெட் கிடைக்காமல் வெல்கோவில் பார்த்தார். பின் அம்மா 100நாள் கழித்து அவங்க அம்மா வீட்டிற்கு புரசைவாக்கம் வந்தபோது @padmapri கூட்டிக்கிட்டு பாட்ஷாவை சாரதா தியேட்டரில் பார்த்தார். @padmapri பார்த்த முதல் ரஜினி படம் 3வயதில்
#45YearsOfSuperstarRajini
என் பெற்றோர் தனிக்குடித்தனம் வந்த பிறகு பார்த்த முதல் படம் முத்து அன்று முதல் இன்று வரை முத்து படம் போடும் போதெல்லாம் ரஜினியை அடிக்கும் போது கண் கலங்கி விடுவார்.என்னை ஸ்கூலில் விட்டுவிட்டு அம்மா சகோதரிகளோடு சென்று அருணாச்சலம் படத்தை பார்த்தார்
#45YearsOfSuperstarRajini
நாங்கள் நினைவுதெரிந்து ரஜினி ரசிகர்கள் ஆன தருணம் படையப்பா படத்தை உறவினர்களோடு சேர்ந்து 17 பேர் வித்யா தியேட்டரில் பார்த்தபோது தான்.எங்களின் முதல் fdfs படம் சிவாஜி தான்.ரஜினி படம் fdfs என்பது வாழ்வில் மிகப்பெரிய சந்தோஷத்தைத் தரும் என்று உணர்ந்த தருணம்
#45YearsOfSuperstarRajini
அன்றிலிருந்து இன்றுவரை எங்களுக்கு fdfsதான். என் அப்பா ரஜினியின் அறிமுகம், அவர் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டதது,சூப்பர் ஸ்டாராக வளர்ந்தது,96 அரசியலில் ஏற்பட்ட தாக்கம்,அவர் சிங்கப்பூரில் இருந்து தெம்பாக திரும்பியது என்று அனைத்தையும் கண்டுள்ளார்
#45YearsOfSuperstarRajini
எங்கள் பரம்பரையில் நாங்கள் 4காம் தலைமுறை ரஜினி ரசிகர்கள்.அதே ரத்தம் அப்படித்தான் இருக்கும். ரஜினி படம் பார்க்க எப்படி ஆர்வத்தோடு செல்வமோ அதேபோல் அவருக்கு வாக்களிக்க நாங்கள் மட்டுமில்லை ஒட்டுமொத்த தமிழகமும் ஆர்வத்தோடு காத்து கொண்டிருக்கிறது🤘
#45YearsOfSuperstarRajini
@VP3107 and @padmapri edited video for #45YearsOfSuperstarRajini https://twitter.com/VP3107/status/1294578296135401473?s=19
You can follow @VP3107.
Tip: mention @twtextapp on a Twitter thread with the keyword “unroll” to get a link to it.

Latest Threads Unrolled:

By continuing to use the site, you are consenting to the use of cookies as explained in our Cookie Policy to improve your experience.