#Thread
#Cobra_effect
பட்டாம்பூச்சி விளைவவை (Butterfly Effect ) பற்றி நாம் அறிவோம் .
நாகபாம்பு விளைவு ,அதாவது Cobra Effect பற்றி பலரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை.
தெரிந்துகொள்வோம் வாருங்கள்..

நம் இந்தியாவை ,ஆங்கிலேயர்கள் ஆட்சி செய்து கொண்டிருந்த போது,தலைநகர் தில்லியில், விஷத்தன்மை உள்ள நாகப்பாம்புகளின் எண்ணிக்கை அதிகரித்து காணப்பட்டுள்ளது .
இதனால் கவலையுற்ற பிரிட்டிஷ் அரசாங்கம்,பாம்புகளின் எண்ணிக்கையை குறைக்கும் நோக்கத்தில், பொதுமக்களிடம் ஒரு திட்டத்தை அறிவித்தது.

அதாவது " கொல்லப்படும் நாகப்பாம்புகளுக்கு,எண்ணிக்கை அடிப்படையில் தக்க சன்மானம்,வெகுமதி வழங்குவதாக அறிவித்தது.
இந்த திட்டத்திற்கு ஆரம்பத்தில் நல்ல வரவேற்பு கிடைத்தது.மக்களும் இறந்த பாம்புகளை காட்டி,சன்மானத்தை பெற்றுக்கொண்டே இருந்தனர்.

காலப்போக்கில்,சிலர் சன்மானம் பெறுவதற்காகவே பாம்புகளை வளர்க்க ஆரம்பித்து விட்டனர்.
இதனை அறிந்த ஆங்கிலேய அரசு,இந்த வெகுமதி திட்டத்தை நிறுத்தியது.
வெகுமதி கிடைக்காத விரக்தியில் பாம்பை வளத்தவர்களே,அவைகளை தப்பிக்க விட்டனர்.

இதனால்,முன்பு இருந்த எண்ணிக்கையை விட பல மடங்கு பாம்புகளின் எண்ணிக்கை உயர்ந்தது.
ஆக,முன்பு இருந்த நிலைமையை விட , இந்த திட்டத்தால், நிலைமை இன்னும் மோசமாகியது.
இதை தான் ,நாகபாம்பு விளைவு (Cobra Effect ) என அழைக்க படுகிறது.

ஒரு பிரச்சனைக்கான தீர்வு, அப்பிரச்சினையை தீர்ப்பதற்கு பதிலாக, அதனை மேலும் தீவிரப்படுத்துவதே , Cobra Effect .
இதே மாதிரியான சம்பவங்கள் இந்தியாவில் மட்டும் அல்ல,உலகின் பல நாடுகளில் நடந்துள்ளது.

சீன நாட்டில் 1958 ஆம் ஆண்டு , மாவோ ஸிடாங்((Mao Zedong) என்பவரால் Four Pest Campaign என்ற திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது
அதாவது,எலி,ஈ,கொசு மற்றும் குருவிகளை அழிக்கும் திட்டம்.

காரணம் ,
எலிகளால் பிளேக் நோய் ,
கொசுக்களால் மலேரியா நோய்,
ஈக்களால் காற்றில் பரவக்கூடிய நோய்கள் மற்றும்
தானிய வகைகள் ,பழங்களை குருவிகள் உண்ணுவதால் உற்பத்தி பாதிப்பு
இக்காரணங்களால்,இந்த திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது .

எலிகளின் வால் ,இறந்த ஈக்கள் ,கொசுக்கள் மற்றும் குருவிகளை கொண்டு வருவப்பவர்களுக்கு தக்க சன்மானம் அளிக்கப்பட்டது.
மக்கள் குருவிகளை கொன்று, கூடு,முட்டைகளை அழித்தனர்.

இந்த திட்டத்தால் 1.5 பில்லியன் எலிகள்,1 பில்லியன் குருவிகள்,220 மில்லியன் pounds ஈக்கள் ,24 மில்லியன் pounds கொசுக்கள் அழிக்கப்பட்டன.
திட்டம் வெற்றிபெற்றதாக நினைத்து கொண்டிருந்த போது ,இரண்டு வருடங்களில் இதன் தாக்கம் வெளிப்பட ஆரம்பித்தது.

குருவிகளின் மறைவால், வயல்வெளிகளில் பூச்சிகளின் எண்ணிக்கை அதிகமாகி ,பல்லாயிரம் கிலோ உணவு தானியங்களை வேட்டையாடியது.உணவு உற்பத்தி, விளைச்சல் முன்பிருந்தததை விட பல பல மடங்கு குறைந்தது .
நாட்டில் பஞ்சம் தலைவிரித்தாடியது. பசியால் கிட்டத்தட்ட 43 மில்லியன் மக்கள் இறந்தனர்.

ஆக , மனிதனால் என்றுமே இயற்கையை வெல்ல முடியாது.வெல்ல நினைத்தால் வீழ்வது அவனே !!