Pre-Owned Car
புதுக்கார் வாங்கினால் அதிக செலவாகும், எனவே இருக்கும் பணத்திற்கேட்ப Pre-Owned Car/ Used Car வாங்க நினைப்பவர்களுக்கு சில டிப்ஸ்.
பெட்ரோல் கார்கள் எளிமையானவை, பராமரிப்பு செலவு டீசல் கார்களை விட குறைவாக இருக்கும்.
புதுக்கார் வாங்கினால் அதிக செலவாகும், எனவே இருக்கும் பணத்திற்கேட்ப Pre-Owned Car/ Used Car வாங்க நினைப்பவர்களுக்கு சில டிப்ஸ்.
பெட்ரோல் கார்கள் எளிமையானவை, பராமரிப்பு செலவு டீசல் கார்களை விட குறைவாக இருக்கும்.
Used car யில் மாருதி சுசூகி, ஹோண்டா, டோயாடா கார்கள் வாங்கவும். Ford, ஸ்கோடா, VW கார்கள் மலிவு விலையில் கிடைத்தாலும் பராமரிப்பது சிரமம். Used காரை தெரிந்தவர்களிடம் வாங்க வேண்டும். பொதுவாக மருத்துவர்கள், அரசு உயர் அலுவலர்கள் கார்கள் நல்ல நிலையில் இருக்கும்.
Used car dealers, இணையம், Authorised car dealers (True Value) etc., வாங்கும் போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இவர்களிடம் எப்படி கார் வாங்குவது என்பதை பார்ப்போம்.
Low running car ie. 10 வருடம் பழைய 20,000 km ஓடிய கார்கள் வேண்டாம், அவற்றின் mechanical condition யை அறிய முடியாது. ABS & Air Bag இல்லாத பழைய கார்கள் வேண்டாம். காருக்கு 2 சாவிகள் உண்டு. டூப்ளிகேட் சாவி இல்லாத காரை வாங்க வேண்டாம். டூயூ கட்டாமல் சீஸ் ஆன கார்கள் வேண்டாம்.
காரை ஓட்டுவதற்கு (Test drive) முன் காரின் ஆவணங்களை சரிபார்க்க வேண்டும். RC கிளினா இருக்க வேண்டும். DRC என இருந்தால் Duplicate registration certificate. வேறு மாநில கார், தமிழ்நாட்டில் மறுபதிவு செய்திருந்தால் Documents, NOC of parent state, original RC, Tax receipt சரிபார்க்கனும்.
RC Book யில் உள்ள சேசிஸ் எண் & இன்ஜின் எண்ணை யை காரில் உள்ள எண்ணுடன் சரிபார்க்கவும். காரில் சேசிஸ் & இன்ஜின் எண் தெளிவாக இல்லை எனில் Rejected. காரில் VIN (Vehicle Identification No) யை வைத்து கார் எந்த வருடம் உற்பத்தி செய்யப்பட்டது என்பதை அறியலாம்.
VIN MFG date டன் RC யில் உள்ள தேதி ஒத்து போகனும். இல்லை எனில் தவறு உள்ளது & Rejected. காரின் இன்சூரஸ் பேப்பரை பார்க்கவும். Accident claim இருந்தால் எந்த மாதிரியான விபத்து என பாக்க வேண்டும். விபத்துக்குள்ளான கார் வேண்டாம் Rejected.
ASS யில் பராமரித்த, Service history உள்ள கார்களுக்கு முன்னுறிமை அளிக்கவும். Service history யில் உள்ள கிமீ, Odometer யில் உள்ள கிமீ யுடம் பொருந்த வேண்டும். Service history கிமீ அதிகமாகவும் odometer யில் கிமீ குறைவாகவும் இருந்தால் odometer யை டேம்ப்பர் செய்துள்ளார்கள் Rejected.
RC, இன்சூரன்ஸ் & Service History சரியாக உள்ள காரை டெஸ்ட் டிரைவ் பண்ண வேண்டும். நல்ல மெக்கானிக்கை அழைத்து செல்லவும். டெஸ்ட் டிரைவ்க்கு நண்பர்கள் வேண்டாம். மதியம் 12 -1 மணிக்கு காரை பார்க்க நல்ல நேரம். நல்ல வெயிலில் காரை பார்த்தால், paint quality, டென்ட், கீரல்கள் தெளிவாக தெரியும்.
மதியம் test drive பண்ணும் போது காரில் உள்ள AC யின் condition தெரியும். காரை நீண்ட test drive க்கு உள்ளாக்கவேண்டும். காரை டிராபிக், குண்டும் குழியுமாக உள்ள சாலைகள், highway என ஓட்டி டெஸ்ட் பண்ணவும்.
சில சமயம் காரில் slow speed யில் vibration இருக்காது ஆனால் High speed யில் vibration இருக்கும். சில கார்களில் வேகமாக போகும் போது vibration இருக்காது. Slow speed யில் vibration இருக்கும். இதே மாதிரி different RPM யில் Vibration இருக்கும். இந்த மாதிரியான கார்களை தவிர்த்து விடவும்.
காரின் அதிகபட்ச RPM 7000 ன்னா 6500 வரை ஓட்டி பார்க்கவும். காரின் உண்மையான கண்டிஷன் தெரிந்து விடும். நீங்கள் அழைத்து சென்ற மெக்கானிக் OK சொல்லிவிட்டால், காரை Authorised Service Centre எடுத்து செல்லவும்.
ASSயில் காரில் என்ன வேலை பார்க்க வேண்டியுள்ளது எதை எல்லாம் மாற்ற வேண்டும் என்பதை ரிப்போர்ட்டாக கொடுபார்கள். இதற்கு 2000 வரை செலவாகும். நீங்கள் டீலர்/ விற்பவரிடம் பேரம் பேச ASS ரிப்போர்ட் உதவும்.
Buyer is King. Used car யை பொருத்தவரை வாங்குபவர் சொல்வது தான் விலை. 2-3 பேருடன், முழு பணத்தை கையில் வைத்துக்கொண்டு பேரம் பேச வேண்டும். பணத்தை காட்டினால் எப்பேர் பட்ட ஆளும் இறங்கி வருவான்.
மாருதி True value, Toyota trust, Cars 24 etc., tested and certified car ன்னு சொல்லி அதிக விலைக்கு விற்பார்கள். நம்பி வாங்க வேண்டாம். மேலே குறிப்பிட்ட அனைத்து வழிமுறைகளையும் பின்பற்றவும்.
கார் வாங்கிய உடனே ASS யில் முழு சர்வீஸ் பண்ணவும். 5 வருடங்கள் பழைய டயர் & 3 வருடங்கள் பழைய பேட்டரி எனில் உடனே மாற்றவும். இவ்வளவு உழைப்புக்கு பின்னும் நல்ல கார் கிடைக்கும் என்பது உத்திரவாதம் இல்லை. All the Best.