இந்த #Google_Ads & #Google_Adsense என்றால் என்ன.!
என்ன வித்தியாசம்..!
அது பற்றிய #Thread #இழை
வாங்க ஜாலியா பயணிப்போம்..!🧞
#Online_Advertisement
#Digital_Advertising

ஒரு குட்டி Story 🙄

ஒரு பிரபல நிறுவனத்தின் தலைவரும் அவரது மகனும் ஒருநாள் ரயிலில் பயணம் செய்து கொண்டிருந்தனர்.!
அப்போது மகன் கேட்டான் "அப்பா நம்ம நிறுவனம் தான் மிகவும் பிரபலமாயிற்றே, மக்கள் நம் பொருட்களை தான் அதிகம் பயன்படுத்துகிறார்கள், பிறகு ஏன்னப்பா அதற்கு விளம்பரம் என்ற பெயரில் இவ்வளவு பணத்தை வீணாக செலவு செய்கிறீர்கள்..!"
அதற்கு தந்தை புன்னகைத்தவாரே கேட்டார் " இப்போ ஓடிட்டு இருக்கிற
இந்த ரயில்ல இருந்து இதோட இஞ்சினை கழட்டிவிட்டால் என்னப்பா ஆகும்..!"
மகன் பளிச்சென்று சொன்னான்
"கொஞ்ச நேரம் இதே வேகத்துல ரயில் ஓடும், அப்புறம் கொஞ்சம் கொஞ்சமாக வேகம் குறைந்து ஒருகட்டத்தில் நின்றுவிடும்"
தந்தை நிதானமாக தொடர்ந்தார் "இந்த இஞ்சின் மாதிரி தான்..ப்பா விளம்பரங்களும்..!,
அத நிப்பாட்டிட்டா நம்ம வியாபாரமும் இதே மாதிரி கொஞ்ச நாள் இதே வேகத்துல ஓடும், அப்புறம் கொஞ்சம் கொஞ்சமாக வேகம் குறைந்து ஒருகட்டத்தில் நின்றுவிடும்..!"
மகனுக்கு இப்போது, வியாபாரத்திற்கு விளம்பரங்கள் எவ்வளவு அவசியம்
(மன்னிக்கவும் 🤫) அத்தியாவசியம் என புரிந்துவிட்டது..!
ஆம், விளம்பரங்கள் இது இல்லாமல் இவ்வுலகில் வணிகம் என்பதே இல்லை.
கடலை மிட்டாயில ஆரம்பிச்சு
கம்ப்யூட்டர் வரையிலும்,
கல்வி ல தொடங்கி
கப்பல் பயணம் வரையிலும் எல்லாவற்றிக்கும் விளம்பரம் தான்..!
இந்த விளம்பரங்கள் எல்லாம் நமக்காகத்தான்.
ஆமா நாம்தான்,
அதாவது வாடிக்கையாளர்கள் தான் ஒரு வியாபாரத்தின் ஆணிவேர்.

இப்படி
"விளம்பரங்கள் சூழ் வணிக உலகு" ல தான் நாம் குடித்தனம் நடத்திகிட்டு இருக்கோம்.

இந்த விளம்பரங்களை பொதுவாக இரண்டா வகைப்படுத்தலாம்.
1.வணிகம் சார்ந்தது (Business Ads)
2.வணிகம் சாராதது (Non Business Ads)
🔥 வணிகம் சாரதது
இதுல பார்த்தா
1.அரசாங்க அறிவிப்பு
2.பிறந்தநாள், திருமணநாள் வாழ்த்துக்கள், வரவேற்புகள்
3.கட்சி சார்ந்த அல்லது அமைப்பு சார்ந்த அல்லது தனிநபர் பற்றிய விளம்பரங்கள்
4.பொதுவான அறிவிப்புகள் (கோவில் கும்பாபிஷேகம், இரத்ததான முகாம்)
இன்னும் ஏராளமா இதுபோல வகைப்படுத்தலாம்.
🔥வணிகம் சார்ந்தது
(Business or Commercial Ads)
இவ்வகை விளம்பரங்கள் பொதுவே
ஒன்றை,
📜அறிமுகப்படுத்துதல்(Introducing)
📜சந்தைப்படுத்துதல்(Marketing)
📜பிரபலப்படுத்துதல்(Branding or Popularizing)
என்று வணிகம் மற்றும் வருவாய் (Revenue) என்ற இரண்டை மட்டுமே குறிக்கோளாக கொண்டிருக்கும்.
90 களுக்கு முன்பு வரை இந்த Print Media (அச்சு) தான் மிகப்பிரபலமான ஒன்று.
அதனால் செய்தித்தாள்கள்,வார இதழ்கள்,Posters, Bit-Notice இவற்றின் மூலம்தான் பெரும்பாலான விளம்பரங்கள் தரப்பபட்டன. அச்சு வடிவில் இருந்த விளம்பரங்கள் 90 களுக்கு பின் தொலைக்காட்சி, வானொலி இவற்றின் தயவால் ஒலி, ஒளி
(Audio & Video) வடிவங்களாக அசுர வேகத்தில் பரிணாம வளர்ச்சி அடைந்தது.!
2000 வது ஆண்டிற்கு பிறகு ஏற்பட்ட தகவல் தொழில்நுட்ப வளர்ச்சி இந்த விளம்பரத்துறையிலும் பெரும் தாக்கத்தையும் கொண்டு வந்தது..!
இங்குதான் நம்ம Google அண்ணனும் Entry குடுக்காரு.
ஆம் விளம்பரங்களும் Digital‌ மயமாயின..!
அது என்ன Digital விளம்பரங்கள்..!
நீங்க ஒரு Website அ Browse பண்ணிட்டு இருக்கும் போது ,

🔥"Online ல் கபடி விளையாடி பணம் வெல்லுங்கள்" ன்னு OverNite ல ஒபாமா ஆகுற ஆசையை தூண்டும் Pop Ups

🔥"முப்பதே நாளில் முப்பது கிலோ உடல்பருமனை குறைக்க.!" ன்னு அதிகப்பிரசங்கித்தனம் பண்ணும் Links🤨
🔥திடீர்ன்னு ஒரு மூலையில இருந்து பறந்து வந்து(Screenல தான்) பூ தூவி "Congrats,You won 20 lakhs,To claim your prize click"ன்னு கொரளி வித்தகாட்ற Objects

🔥நாம் படிக்க கூடிய செய்திகளுக்கு இடையிடையே வந்து Distrub பண்ற பெட்டி விளம்பரங்கள்

🔥Page திறந்தவுடனையே AutoPlay ஆகும் Videos
இதெல்லாம் தாங்க Digital Ads.
இதெல்லாம் சாத்தியமாக்கும்
Google Advertising Networkன் இரு கண்மணிகள் தான் இந்த
🔥Google Ads
🔥Google AdSense

#Google_Ads
வியாபரம் பண்றவங்க எல்லாம் தங்களோட Products அ online ல விளம்பரப்படுத்த இங்கே தான் அணுகனும். Email ID மற்றும் உங்களைப்பற்றிய, ஒரு
சில Formal நலம் விசாரிப்புகள், அவ்வளவுதான் உங்க Registeration முடிஞ்ச்சு.
இனிமே நீங்க விளம்பரங்கள் தரலாம்.
நீங்க கொடுக்கிற Ads ,
🙋அதோட Audience views,
🙋அவங்க அத Click செஞ்சு View பண்றது ,
🙋Web Page ல space occupancy, எத்தனை தடவை திரும்ப திரும்ப வரனும், (Ad Frequency)
🙋யாரை Reach பண்ணனும்
(ASL-Age, Sex, Location)
அதாவது எந்த பாலினம்,
எந்த வயதை சார்ந்தவர்கள்,
எந்த ஊருல வாழ்றவங்க
இப்படின்னு Products யார்,யாரை Reach பண்ணுமோ அவங்களை தேர்ந்தெடுத்து விளம்பரம் பண்றது.
இத தான் Target Audience or Viewers ன்னு சொல்றாங்க..
இந்த மாதிரி சில T&C ய பொறுத்து தான் விளம்பரத்திற்கான Rate Fix ஆகும். அதுவும் Online ல Real Time Auction ல..! 🙄

#Google_AdSense
இப்போ உங்களிடம் ஒரு Website இருக்கு. அத Daily ஒரு 10000 பேரு பாக்குறாங்கன்னு வச்சுக்குவோம், உங்களுக்கு வருமானம் வரப்போகுதுன்னு அர்த்தம்.
ஆமா உங்க Website ல சின்னதாவோ, பெருசாகவோ இடம் குடுத்தா போதும். Google உங்களுக்கு பணம் குடுத்து அந்த இடத்துல அவங்க விளம்பரம் பண்ணிப்பாங்க..!
இதுக்கு நீங்க Google AdSense ல பதிவு பண்ணனும். இது கொஞ்சம் நீளமான நலம் விசாரிப்பு தான்🤔
உங்களை பற்றிய வழக்கமான கேள்விகள்,
அப்புறம்,
உங்க Website பற்றிய தகவல்கள், புள்ளிவிவரங்கள்,etc..
நீங்க தரக்கூடிய Ad Space,
அனுமதிக்க கூடிய Ad formats ன்னு கொஞ்சம் Detailingஆ தரனும்😂

உங்க Site Popularity&Traffic
Publishings,
Content Reach,
Ad clicks,Ad space
Ad frequency
இதெல்லாம் வச்சுதான் உங்களுக்கு Payment☺️
Ok. Ok. வரேன்..☺️
புரியற மாதிரி சொல்லனும்னா, நண்பர் தோசை மாவு வியாபாரம் பார்க்கிறார்.!
அது பத்தின விவரங்களை Posters ஆ அடிச்சிட்டாரு. இனிமே அத நல்லா மக்கள் கூடுற இடமா, அவங்க கண்ணுலபடுறப்ல பார்த்து ஒட்ட வேண்டியது தான். அந்த Poster ஒட்டற வேலையைத்தான்
#Google_Ads பார்க்குது.
எங்க, எப்படி, எத்தனை, எந்த Size ல ஒட்டனும்ங்கறத பொறுத்து Poster ஒட்டுறவருக்கு நாம் காசு குடுக்கனும்.
Google Adsம் இந்தமாதிரி நம்ம ஏற்கனவே பார்த்த சில Terms & Conditions பொறுத்து விளம்பரம் கொடுக்கறவங்கள்ட்ட இருந்து காசு வாங்குது.
சரி, இந்த Posters அ முடிவெட்டுற கடை, Cycle கடைல
எல்லாம் ஒட்டுனா ஏதாவது பிரையோஜனம் இருக்கா..!
ஊ..ஊஹும். ஆனா இதையே நண்பரின் தோச மாவு கடை இருக்கும் Area ல பெண்கள் கூடும் இடங்களா பார்த்து அதாவது, தண்ணி பிடிக்கும் இடம்,
விளக்கு பூஜை நடைபெறும் கோவில், பஸ் Stop,
பெண்கள் அதிகம் வேலை பார்க்கும் நிறுவனங்கள் இப்படின்னு ஒட்டுனா..🤔
ஆமா, வியாபாரம் அமோகமாக நடக்கும். (Target Audience)
இந்த மாதிரி விளம்பரம் செய்ய அந்த இடத்தோடு Owner நமக்கு இடம் தரனும்,
அவங்க இடத்துல விளம்பரம் வைக்க இடத்தோட Owner க்கும் நாம் காசு தரனும். எந்த இடங்கள்ல யாரு அதிகம் வருவா,எந்த மாதிரி Reach ஆகும்.இதெல்லாம் நமக்கு தெரிஞ்சிருக்கனும்.
'விளம்பரம் செய்ய இடம் வாடகைக்கு விடப்படும்'
ன்னு உள்ள இடங்களை சரியா தேர்வு செய்து, அத தரம் பிரிச்சு, அந்த இடங்களை தேவைக்கேற்ப Poster ஒட்டறவருக்கு கொடுக்கற வேலையத்தான் இந்த Google AdSense பார்க்குது.

So, இந்த Online விளம்பரங்கள் கொடுக்கின்ற Business Firms கிட்ட, நம்ம
GoogleAds வழியாக காசு வாங்கி அதை AdSence மூலமா நல்ல Webpages ஆ தேர்ந்தெடுத்து, Page ownersக்கும் நல்லா காசு கொடுத்து அந்த Web pages ல விளம்பரம் போட்டு கல்லா கட்டுற வித்தை தான் இந்த Online Digital Ads.
இந்த வித்தையை செய்யும் வித்தைகாரன் தான் Google Advertising Network.!
😂😂😂
எழுதனும்னா, இதோட Features, Job & Earning opportunities ன்னு இன்னும் நிறையவே ☺️
(அப்படியே Poll பண்ணிடுங்க..!)😂
நன்றி மக்களே..!
🙏🙏🙏

@sArAvAnA_15 @teakkadai1 @nkchandar @bharath_kiddo @_VarunKannan @karthick_45 @tamil_typist @KingKuinsan @Ganesh_Twitz @ividhyac
You can follow @theroyalindian.
Tip: mention @twtextapp on a Twitter thread with the keyword “unroll” to get a link to it.

Latest Threads Unrolled:

By continuing to use the site, you are consenting to the use of cookies as explained in our Cookie Policy to improve your experience.