நேற்று @ganeshjayabalan ப்ரோ,

#educationpolicy2020 னு ஒரு திரேட் ஆங்கிலத்தில் போட்டாரு அதில் இருக்குற சிறப்பம்சத்தை பற்றி விளக்கிருந்தார்,

அவர் சொல்லாமல் விட்டதை நம்ம மக்களுக்கு புரியுற மாதிரி விளக்கலாம்னு இந்த பெரிய திரேட் அனைவரும் தவறாமல் ஆழ்ந்து படித்து உள்வாங்குங்கள்.
புதியக்கல்வி கொள்கை திமுக எதிர்ப்பு ஏன்?

மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையைப் தமிழகத்தில் தவிர மற்ற மாநிலங்களில் இதைப்பற்றி மக்களும் அரசும் வரவேற்கிறார்கள்.

ஒரு சில மாநிலங்களில் மட்டும் இதில் திருத்தங்களைப் பரிந்துரைக்கின்றனரே
தவிர திட்டத்தையே கொண்டு வரக்கூடாது
என எவரும் எதிர்க்கவில்லை,
தமிழ் நாட்டில் மட்டும் இந்த கூச்சல்கள், எதிர்ப்புகள்,ஆர்ப்பாட்டங்கள்,அலப்பறைகள்

காரணம் #திருட்டு_திமுக

புதிய கல்விக் கொள்கை என்பது மத்திய அரசாங்கமும் பிரதமரும் எழுதித் தயாரித்த ஒன்று அல்ல கல்வியில் செய்ய வேண்டிய மாற்றங்கள் பற்றிய முயற்சிகள் 2015 ம்
ஆண்டே தொடங்கப்பட்டு விட்டது. கிராமங்களில் இருந்து நகரங்கள் வரை அனைவருக்கும் தரமான, சமமான கல்வியைக் கொடுப்பதற்காகவும்
கருத்துக்கேட்புகள் இணையதளத்திலும், நேரில் கருத்து கேட்பு கூட்டங்கள் நடத்தியும் அனைவரின் கருத்துக்கள் பெறப்பட்டது.

இதன் பின் 2015 மே மாதம்
அமைச்சரவை செயலாளர் தலைமையில் புதிய தேசிய கல்விக் கொள்கை
உருவாக்கத்திற்கான குழு உருவாக்கப்பட்டது. இக்குழு மே 2016 இல் தனது அறிக்கையை சமர்ப்பித்தது.

இந்த அறிக்கையின் அடிப்படையில் மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகமானது, "தேசிய கல்விக் கொள்கைக்கான சில உள்ளீடுகள்"
என்ற ஒரு வரைவினை வெளியிட்டது. இதைத் தொடர்ந்து புதிய தேசிய
கல்விக் கொள்கை உருவாக்கத்திற்கான குழுவானது மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தால் 2017 ஜூன் மாதம் உருவாக்கப்பட்டது.

இவ்வளவு நீண்ட கால ஆய்வுகள், தரவுகள், ஆலோசனைகள் பரிந்துரைகளை பெற்று சமர்ப்பிக்கப்பட்டுள்ள
புதிய கல்விக் கொள்கையை #திருட்டு_திமுக எதிர்க்க என்ன காரணம்?

முழுமையான வரைவு இன்னும் வரவில்லை. வரைவின் சுருக்கம் தான் வந்துள்ளது அதற்கே இந்த கதறல்

#திருட்டு_திமுக எதிர்த்தால் அது நாட்டுக்கு நல்லது என மக்கள் உணர ஆரம்பித்து விட்டார்கள் அதிமுகவும் வேறு வழியில்லாமல் அமைதி காக்கிறது
கதறலுக்கான காரணம் இதோ :-

வரைவு X1 :
தேசியக் கல்வி ஆணையம் அமைத்து மேற்கண்ட பரிந்துரைகள் அமலாக்கப்பட்டால் பணத்திற்காகப் பல்கலைக்கழகத் துணை வேந்தர், பதிவாளர் பதவிகளைக் கோடிகளில் விற்க முடியாது.

இது திராவிடக் கட்சிகளுக்கு விழுந்த முதல் அடி.
பரிந்துரை 1V :

இது தொழிற்கல்விக்கானது அனைத்து தொழிற்கல்வியும் உயர் கல்வி அமைப்பின் ஒரு ஒருங்கிணைந்த பகுதியாக இருக்கும். தனித்து இயங்கும் சட்ட, மருத்துவ, பொறியியல், வேளாண் கல்லூரிகள்,
பல்கலைக்கழகங்கள் அனைத்தும் மூடப்படும்.

அனைத்துத் தனியார் தொழிற்கல்வி அமைப்புகளும்
அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும். அரசின் கட்டுப்பாட்டில் வராத கல்லூரிகள் மற்றும் பல்கலைக் கழகங்கள் மூடப்படும். தன்னாட்சிக் கல்லூரி, சுயநிதிக் கல்லூரி,
தனியார்ப் பல்கலைக்கழகம் என்று லட்சங்களில் பணத்தைப் பெற்றுக் கொண்டு தரமற்ற மாணவர்களைச் சேர்ப்பது,
அவர்களைத் தேர்ச்சி பெற வைப்பதற்கென்றே தரமற்ற பாடத்திட்டங்களையும், முறையற்ற தேர்வுகளையும் வைத்து அவர்களைத் தேர்வு பெற வைத்து அனுப்புவது மொத்தமாக எல்லாத்துக்கும் ஆப்பு தான்.

இதை விட ஒரு பெரிய விடியல் நடிகர்களுக்கும்,அரசியல்வாதிகளுக்கும் டாக்டர் பட்டம் கொடுக்க முடியாது.
தமிழ்நாட்டில் உள்ள தனியார் பொறியியல், மருத்துவ கல்லூரிகள், பல்கலைக் கழகங்கள் அனைத்தும் திருட்டு திராவிட அரசியல்வாதிகளுக்கும், அவர்களின் பினாமியாக உள்ள கல்வித் தந்தைகளுக்கும் சொந்தம். அரசியலுக்குக் முதுகெலும்பாய் இருக்கும் கல்வி வியாபாரம் மொத்தமும் கிட்டத்தட்ட நக்கிட்டு போய்டும்.
வெள்ளையும் சொள்ளையுமாக திரியும் கல்வி தந்தைகளும், திராவிடக் கொள்ளையர்களும்
பிச்சையெடுக்கும் நிலைக்கு வந்து விடுவார்கள்.

பரிந்துரை 3:

இது ஆசிரியர் கல்விக்கானது ஆசிரியர் தயாரிப்பு திட்டம் மிகக் கடுமையானதாக இருக்கும் உயிர்த் துடிப்புள்ள பல்துறை உயர்கல்வி நிறுவனங்களில் நடைபெறும்.
வகுப்பு நிலை - குறித்த , பாடங்கள் குறித்த பல்துறை நிறுவனங்களால் வழங்கப்படுகின்ற நான்காண்டு ஒருங்கிணைந்த இளங்கலைக் கல்விப் பாடத் திட்டம் ஆசிரியராவதற்கு முக்கியமான தகுதியாக இருக்கும் தரம் குறைந்த மற்றும் செயல் படாத கல்வியியல் கல்லூரிகள் மூடப்படும்.
இனிமேல் பி.எட் படிப்பு அதாவது ஆசிரியர் கல்லூரி என்று 10x10 ரூம் வைத்து நடத்த முடியாது பாடத்திட்டம் சல்லடையாகச் சலித்து எடுத்தவர்களைத்தான் ஆசிரியராக்கும்

தமிழ்நாட்டில் ஆசிரியர் கல்லூரிகளை வைத்து லட்சங்களையும், கோடிகளையும் அள்ளிய திருட்டு திராவிட கல்வித் தந்தைகள் கதி நடுரோடு தான்.
பரிந்துரை 1. f :
ஆசிரியர்கள் உறுதியான வெளிப்படையான முறைகள் மூலம் வேலைக்குத் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் பதவி உயர்வுகள் தகுதியின் அடிப்படையில் மட்டுமே இருக்கும். குறிப்பிட்ட இடைவெளியில் அவர்களின் பணி
மதிப்பீடு செய்யப்படும் கல்வித்துறை உயர் அதிகாரிகள் ஆகவும்,
ஆசிரியர் பயிற்சி பயிற்றுனர் ஆகவும்
அவர்களுக்கு வழி ஏற்படுத்தித் தரப்படும். இந்த பரிந்துரையும் எண் 3 பரிந்துரையும் தான் கல்வித்தந்தைகள், ஆசிரியர் சங்கக் கும்பல் இரண்டையும் சேர்த்து கதற வைக்கிறது.

இந்த பரிந்துரைகள் படி சரியான கல்வித் தகுதியும் அறிவாற்றலும் உள்ளவர்கள் மட்டுமே
ஆசிரியர் கல்வியை முடித்து வெளிவர முடியும். அப்படி ஆசிரியர் பயிற்சியை முடித்தவர்களை மட்டுமே தங்களது பள்ளியில் ஆசிரியர் பணிக்கு வைக்க முடியும். முறையான ஆசிரியரை வேலைக்கு அமர்த்தினால் அரசாங்கப் பள்ளிகளில் கொடுக்கும் சம்பளத்தைக் கொடுத்தால் மட்டுமே வேலைக்கு வருவார்கள்.
இரண்டாவதாக பத்தாவது வரை ஆல்பாஸ் என்று ஆசிரியர் நினைத்துக் கொண்டிருக்க முடியாது . குறிப்பிட்ட இடைவெளிகளில் அதாவது உதாரணமாக ஐந்து வருடங்களுக்கு ஒரு முறை அவர்களின் வேலையைப் பணி
மதிப்பீடு மற்றும் அவர்களின் திறனைத் தேர்வு செய்யும் போது ஒரு ஆப்பு கட்டாயம் இறங்கும்.
இதனால் தான் சில சங்கங்கள் திருட்டு திராவிட கல்வித் தந்தைகளுடன் சேர்ந்து கொண்டு புதிய கல்விக் கொள்கையைக் கடுமையாக எதிர்க்கின்றனர்.

பரிந்துரை 4.J :
2020 ம் ஆண்டிற்குள் தேசியப் பாடத்திட்ட வடிவமைப்பு மறு ஆய்வு செய்யப்பட்டு மாற்றியமைக்கப்படும்.
இந்தப் பாடத்திட்டம் அனைத்து பிராந்திய மொழிகளிலும் கிடைக்க வழி வகை செய்யப்படும்,

மத்திய அரசின் கட்டுப்பாட்டில் கல்வியாளர்களைக் கொண்ட குழுவிடம் பாடதிட்டங்களை மாற்றி அமைக்கும் அதிகாரம் வரும் போது திருட்டு திராவிடத்தின் வரலாற்றுப் பொய்களைக் குழந்தைப் பருவத்திலேயே திணிக்க முடியாது.
புரியும்படியாகச் சொன்னால் ஈவேரா யுனெஸ்கோ விருது வாங்கினார் அவர் சாதியை ஒழித்தார்,......
பெண்களுக்காக போராடினர் இப்படியெல்லாம் எதிர்காலத்தில் பாடம் எழுதித் தமிழனை ஏமாற்ற முடியாது.
இது திருட்டு திராவிடத்திற்கு விழுந்த சம்மட்டி அடி.
பரிந்துரை 8.a to l
(இது நீண்ட பகுதி அதன் சாராம்சத்தின் அடிப்படை மட்டும்)
இது அரசு, மற்றும் தனியார் பள்ளிகளை ஆரம்பிப்பதில் அனுமதி வழங்குவது முதல் அதைத் தொடர்ந்து கண்காணித்தும் ஆய்வுகள் செய்தும் பள்ளிகளைத் தரவரிசைப்படுத்துவதற்குத் தனி அமைப்பு ஏற்படுத்த வேண்டும் என்று சொல்கிறது.
மொட்டை மாடியில் பள்ளி நடத்துவது, விளையாட்டு மைதானம்,கழிப்பறை, குடிதண்ணீர்,விளையாட்டு ஆசிரியர் இல்லை அவ்வளவு ஏன் குட்டிச்சுவர் கூட இல்லாத பள்ளிகள் அத்தனைக்கும் இந்த பிரிவு ரிவிட் அடிக்கிறது. தனியார் பள்ளி முதலாளிகளும் திருட்டு திராவிட கூட்டமும் ஏன் கதறுகின்றனர் எனப் புரிகிறதா...?
ஒட்டு மொத்தக் கல்வி வியாபாரிகளுக்கும் விழுந்த மரண அடிதான் புதிய கல்விக் கொள்கை இதையெல்லாம் மறைக்கத்தான் இந்தி திணிப்பு, தமிழ் அழிந்து விடும், தமிழன், தமிழ் மொழி, பெரியார் மண் என மாமா ஊடகங்களின் மூலம் விவாதங்களை நடத்தி மக்களைத் திசை திருப்புகின்றனர்.
திருட்டு திராவிட விசமிகள் கல்வியை வியாபாரப் பொருளாக்கி அதை விற்கவேண்டும் என்பதற்காகவே தரமற்ற கல்விப் பாடத்திட்டம் கொண்டு வந்தனர் அரசு பள்ளிகளில் இலவசமாக கிடைப்பது தரமற்ற கல்வி, தனியாரிடம் சென்றால் தரமான கல்வி கிடைக்கும் என்ற நிலைக்கு மக்களையும் தமிழகத்தையும் கொண்டு வந்து விட்டனர்
அந்தத் தரமான கல்வியைக் கொடுக்கும் தனியார் கல்வி வள்ளல்கள் யார்?

திருட்டு திராவிட கூட்டம் தான்.

சரி, திருட்டு திராவிட கூட்டம் மட்டும் எப்படித் தரமான கல்வியைக் கொடுக்கின்றனர் என்ற கேள்வியை முன்வைத்தால் அவர்கள் சிபிஎஸ்சி எனப்படும் மத்திய பாட திட்டத்தினைக் கற்பிக்கின்றனர்.
மக்களுக்கு இலவசமாக தகுதியான பாடத்திட்டத்தை வழங்காமல் இலவசக் கல்வி என்ற பெயரில் குழந்தைகளின்
கல்வி திறனை ஒரு புறம் நாசமாக்கி விட்டு மறுபுறம் அவர்கள் நடத்தும் பள்ளிகளில் தரமான கல்வியை நமக்குப் பணத்திற்கு விற்கிறார்கள்

அவர்கள் நடத்தும் பள்ளிகளில் மூன்றாவது மொழியாக இந்தி மொழி உண்டு
ஆனால் அரசுப் பள்ளிகளில் மூன்றாவது மொழி இல்லை. இது அனைத்தையும் கோர்வையாக்கிப் பார்த்தால் தெளிவாகப் புரியும். இலவசமாக நமது குழந்தைகளுக்கு கிடைக்க வேண்டிய மூன்றாவது மொழியறிவை தடுத்து அதைப் பணம் உடையவர்கள் மட்டும் அவர்களிடம் விலை கொடுத்து வாங்குவதைச்
சட்டப்பூர்வமாக்கி வைத்துள்ளனர்.
பணக்காரர்களின் குழந்தைகளுக்கு மட்டும் கூடுதலான அறிவை வைத்து ஆண்டவன் படைக்கிறானா...?

தொழிற் கல்வி மற்றும் உயர் கல்விக்கான நுழைவுத் தேர்வையும் (NEET,JEE) கடுமையாக எதிர்க்கின்றனர் அதற்கு இவர்கள் கூறும் காரணம் தமிழகத்தின் சமச்சீர் பாடத்திட்டத்தில் படித்த மாணவர்கள்
சிபிஎஸ்சி பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களுடன் போட்டியிட முடியாது என்பது.கொஞ்சம் கூட வெட்கமாக இல்லையா இதை சொல்ல?

இவர்கள் கொண்டு வந்த கல்வித் திட்டம் வெறும் குப்பை என்று அவர்களே மறைமுகமாக ஒத்துக் கொள்கிறார்கள் இதற்கு ஏன் இப்படி சுற்றி வளைத்து சொல்ல
வேண்டும்?
இப்போதைய கல்வி என்பது போட்டித் தேர்வுகளில் வெற்றி பெறுவதற்கு உதவாத கல்விக் கொள்கை என்று பகிரங்கமாக ஒத்துக் கொள்வதில் என்ன பிரச்சனை இவர்களுக்கு?

2019-20 பட்ஜெட்டில் தமிழக பள்ளிக்கல்வித் துறைக்கு ஒதுக்கப்பட்ட தொகை ரூ 34,181.73 கோடி.
இதை ஒரு புரிதலுக்காக 34,000 கோடிகள் என வைத்துக்கொள்ளலாம்.

கடந்த 2018-19-ம் கல்வி ஆண்டில் 37,459 அரசுப் பள்ளிகளில் 44 லட்சத்து 13 ஆயிரத்து 336 மாணவர்கள் படித்தனர்.

ஒரு கணக்கீட்டிற்காக 45,00,000 மாணவர்கள் என்றே வைத்துக் கொள்ளலாம் பட்ஜெட்டில்
ஒதுக்கப்பட்ட பணத்தில் ஒரு மாணவனுக்கு
ஆகும் செலவைக் கணக்கிடுங்கள்.
340,000,000,000 ÷ 45,00,000
= 75,555
அதாவது என்னதான் குருட்டுக் கணக்காகப் பார்த்தாலும் ஒரு மாணவனுக்கு வருடம் ஒன்றிற்கு அரசு செலவிடும் தொகை எழுபத்தைந்தாயிரம் ஒரு மாணவனுக்கு எழுபத்தைந்தாயிரம் அரசு செலவு செய்தும்
அவன் போட்டித் தேர்வுக்கு தயாராக முடியாத ஒரு கல்வியைத்தான் கொடுக்க முடிகிறது என்றால் பிறகு எதற்கு இந்த கல்வி முறை?

தரமான கல்வியை அரசுப்பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு கொடுப்பதில் தோற்று விட்டது இந்த 53வருட திருட்டு திராவிட கூட்டம் என எடுத்துக்கொள்ளலாமா ?
அரசியல்வாதிகள், அதிகாரிகள், செல்வந்தர்கள் குடும்பத்தினருக்கு மட்டும் சிபிஎஸ்சி மூலம் தரமான கல்வியுடன் மூன்றாவது மொழி கற்கும் உரிமை உண்டு.
ஏழைகள்,வியாபாரிகள், நடுத்தர வர்க்கத்தினர் குடும்பத்தினர் மெட்ரிகுலேசன் மூலம் தரமான கல்வியை ஆங்கில வழியில் பெறலாம்.
ஆனால் குப்பன் சுப்பன் குடும்பத்தினர் சமச்சீர் கல்வியைத் தமிழ் வழியில் படித்து மற்றவர்களுடன் போட்டியிட முடியாமல் தலைமுறை தலைமுறையாக அரசியல்வாதிகளுக்கு கொடி பிடித்தும், அரசின் இலவசங்களைப் பெற்றும் பிழைக்க வேண்டும்.

இந்த #திருட்டு_திமுக இந்தி எதிர்ப்பு என்கிற
பெயரில் இன்னும் எத்தனை காலத்திற்குத் தமிழனை மடையனாக்கி வைத்திருப்பார்கள் கொத்தடிமைகளும் அவர்களுக்கு முட்டுக்கொடுத்து தன் பிள்ளைகளுக்கு
கிடைக்க வேண்டிய தரமான கல்வியை இழக்கிறார்கள்,

இனியாவது விழித்துக்கொள்வோம் #திருட்டு_திமுக வை வேரோடு கருவருப்போம்

நன்றி வணக்கம் 🙏
#SSR
You can follow @SSR_Sivaraj.
Tip: mention @twtextapp on a Twitter thread with the keyword “unroll” to get a link to it.

Latest Threads Unrolled:

By continuing to use the site, you are consenting to the use of cookies as explained in our Cookie Policy to improve your experience.