தமிழ்நாடு அரசுமருத்துவமனைக்கு எப்ப போனாலும் மொத்த கட்டமைப்பும் மலைக்க வைக்குது. ஆரம்ப சுகாதார நிலையங்கள்ல இருந்து பெரியாஸ்பத்திரி வரைக்கும் ரொம்ப இலகுவான ஒரு தொடர்கன்னி இருக்கு. நோயாளியின் வரலாறு தொடர்ச்சியா எல்லா நிர்வாகங்களாலயும் தன்னியல்பா இணைக்கப்படுது.
ஆரம்ப சுகாதார நிலையத்துல பரிந்துரை செஞ்சு எழுதின சின்ன நோட்டுப்புத்தகம் பெரிய டாக்டர் வரைக்கும் போய் ஆய்வகம் மருத்துவப்பிரிவு தகவல் சேமிப்புன்னு எப்பவும் மக்கள் கூடுற இடங்கள்ல பெருசா ஒரு கண்காணிப்பில்லாம செய்யுறது அவ்வளவு எளிதா நடக்குற காரியம் இல்லை.
மருத்துவர்கள் ஊழியர்கள் நோயாளிகள்னு இணைக்கிற முக்கியப்புள்ளி மொழி. நீட்ல இன்னும் சில வருசத்துல நம்மூர்ல இருந்து வந்த டாக்டர்ங்க காணாம போய் 'வேற இந்தியன்' வந்தா அவரு நம்ம மொழி பழகுவாரா? இல்ல "தப்யத் கராப் சாப்" னு நம்ம மாறிக்கணுமான்னு இப்பவே தொலைநோக்குல யோசிக்க ஆரம்பிக்கனும்.
அதுக்காக தமிழ்நாட்டு டாக்டர் தியாக உருன்னு அர்த்தம் இல்லை. அரசு மருத்துவரா இருந்தா மேற்படிப்புக்கு இட ஒதுக்கீடுன்ற நிலைல தான் பெரும்பாலான மருத்துவர்கள் வர்றாங்க. ஆனா இது அரசுக்கும் மருத்துவருக்கும் கூட்டு நன்மை. அதுல கிடைக்குற நேரடி மக்கள் பயன்லாம் கொஞ்ச நாள்ல காணாம போய்டும்.
சின்ன நகரங்கள்ல கூட சிப்ட்டுக்கு ஒரு டாக்டர்னு 24 மணி நேர சேவை, அதே ஊர்ல இருக்குற தனியார் மருத்துவமனைகள்ல இல்லை. ஏன் இல்லைன்னு ஒரு நிமிஷம் யோசிச்சம்னா நம்ம உரிமையும் அரசோட கடமையும் தெளிவா புரியும். ஆம்புலன்ஸ் வசதி கர்ப்பிணிகளுக்கான தொடர் கண்காணிப்பு + ஸ்கானிங்,
சர்க்கரை நோயாளிகளுக்கான தொடர் மருத்துவம் மாத்திரைகள்ன்னு இன்னும் நெறையா சொல்லலாம். கண் முன்னாடி வெற்றிகரமா இயங்குற ஒரு சுகாதார அமைப்பு இந்தியா மாதிரி ஒரு நாட்ல நம்ம ஆட்சியாளர்களால் செயல்படுத்த முடிஞ்சிருக்கு. இப்படி சாத்தியப்பட்டிருக்கிற அமைப்புல குறைகள் நிச்சயமா இருக்கும்.
ஆனா வேரோட பிடுங்குற மாதிரி ஒரு தகுதி தேர்வை கொண்டு வந்து நம்மளை எல்லாம் அது தான் சிறந்தததுன்னு ஏத்துக்க சொல்றானுங்க. நம்மாளுங்க அதுக்கும் தயாரா இருக்குறது தான் வருத்தமா இருக்கு. நம்ம நாட்டோட தகுதி திறமை நமக்கு தெரியாததா?
/நேரடி மக்கள் பயன்லாம் கொஞ்ச நாள்ல காணாம போய்டும்/ இது அதீதமா இருக்குறதா மருத்துவ நண்பர் சொன்னது. பாலிசி அளவுல கை வச்சா தான் நேரடி பலன்கள் கிடைக்காம போகும். ஆனா மருத்துவர் -நிர்வாகம்-நோயாளிகள் உறவு வேற்று மொழி மருத்துவர்களால் கொஞ்சம் கொஞ்சமா பலவீனப்படும்.