"நாம் ஏன் உடற்பயிற்சிகளைக் கைவிடுகிறோம்?" நண்பர் @athishaவின் இந்தப் புத்தகம் கிண்டிலில் இன்று வெளியாகியிருக்கிறது. உடனடியாக unlimitedல் வாங்கி வாசித்து விட்டேன். படிப்பதற்கு சுமார் 70 - 75 நிமிடங்கள் மட்டுமே ஆகும் இந்தப்புத்தகத்தைப் படித்தால் உங்களுக்கு என்ன கிடைக்கும்...
என்பதை சொல்வதற்கு முன் அதிஷாவுக்கும் எனக்குமான தொடர்பைப் பற்றி கொஞ்சம்.. நான் அதிஷாவை இதுவரையில் நேரில் பார்த்ததில்லை. போனில் கூட பேசியதில்லை. ஆனால் அதிஷாவின் எழுத்துக்கள் மூலம் நான் பெற்றவை ஏராளம்.
2014ன் கடைசியில் காரணமேயில்லாத ஆனால் காட்டுத்தனமான ஒரு மனச்சிதைவில் சிக்கி கஷ்டப்பட்டுக் கொண்டிருந்தேன். ஏன் வந்தது, எப்படி வந்தது என்று தெரியாத ஒரு phobia. உடம்புக்குள் ஏதோ ஒரு தீர்க்க முடியாத பிரச்சனை என்கிற மனப்பிராந்தி.
இணையத்தில் கண்ட நோய்களின் symptomsஐ வாசித்துவிட்டு, அந்த நோய் எனக்கு வந்துவிட்டது என்கிற மாதிரியான கற்பனையில் பயந்து சாவேன். ஒருவாரம் கிட்னி, மறுவாரமே இதயம், அதற்கு அடுத்த வாரம் ஏதாவது ஒரு விதமான cancer, என்று கூகிளானின் புண்ணியத்தில் விதவிதமான சுய diagnosisகள் செய்து
கடுமையான பயத்தில் specialist மருத்துவரிடம் போவேன்.அவர் பல testகளும் எடுத்து விட்டு "ஒன்னுமில்லையே, எல்லாம் நல்லாத்தானருக்கு"என்று சொல்வதை நம்பாமல் அடுத்த மருத்துவரிடம் போவேன். சென்னை, கோவை என விதவிதமான மருத்துவர்கள், விதவிமான testகள்.. விதவிதமான "ஒன்னும் ப்ரச்சனயில்லையேப்பா"க்கள்
ஆனால் மனச்சிதைவு மட்டும் மாறவேயில்லை. சரி, இனி உடல் சார்ந்த மருத்துவர்களிடம் போவதில் பயனில்லை, மனம் சார்ந்த மருத்துவர் யாரையாவது பார்த்து psychiatric treatment ஆரம்பிக்க வேண்டியதுதான் என்று முடிவு செய்த ஒருநாளில்தான் அதிஷாவின்
Chennai marathon training மற்றும் running experience பற்றிய blog ஒன்றை வாசித்தேன். சூப்பர் ஸ்டார் மாதிரி சொல்லவேண்டுமானால் அதற்குப்பிறகு என் வாழ்வில் நடந்ததெல்லாமே அதிஷயம், அற்புதம். அதிலிருந்து மிகச்சரியாக ஐந்து மாதங்களில் நான் என்னுடைய முதல் அரை மராத்தானை ஓடினேன்.
ஓடிவிட்டு போட்ட postஐ இப்படித்தான் ஆரம்பித்தேன் "ஒரு நல்ல விஷயத்தை செய்வது பெரிது. அப்படிச் செய்வதைப் பற்றி எழுதுவது அதனினும் பெரிது. அப்படி எழுதுவதன் மூலம் அதற்கான inspirational Factorஐ அப்படியே மற்றவர்க்கு கடத்துவதென்பதெல்லாம் வரம். அந்த வரம் அதிஷாவுக்கு வாய்த்திருக்கிறது"
( https://www.facebook.com/ramcomedy/posts/10153871105789239)
அதற்குப்பிறகு அவர் லடாக்கில் போய் half marathon ஓடி வந்தார்... பதிவெழுதினார்... வாசித்தேன்... பிறகு நானும் போனேன்... போய் barefootலேயே ஒரு half marathon ஓடிவிட்டு வந்தேன். ( https://www.facebook.com/ramcomedy/posts/10157030104049239)
இந்தமாதிரி பல magical momentகளைக் கொண்டது எனக்கும் அதிஷாவின் எழுத்துக்குமான தொடர்பு.

இப்படியாக அந்த தென்னைமரத்தில் மாட்டைக் கட்டி வைத்தார்கள் மாதிரி, இப்படிப்பட்ட அதிஷாதான் நாம் ஏன் உடற்பயிற்சிகளைக் கைவிடுகிறோம்? என்ற புத்தகத்தை எழுதி கிண்டிலில் வெளியிட்டிருக்கிறார்.
fitness 101 , fitness for dummies என்கிற மாதிரியான ஒரு புத்தகம். இந்த genreல் தமிழில் முதல் முயற்சி என்றே நினைக்கிறேன். fitness சார்ந்த எல்லாத் தடங்களையும் அலசியிருக்கிறார், Both physical and emotional.
எது, ஏன், எப்படி, எதற்கு, எதனால் என்ற fitnessன் பல perceptionகளையும் அக்குவேறு ஆணிவேறாக பிரித்துப் போட்டிருக்கிறார்.
ஒரு doctor 100 கிலோ உடல் எடையோடு உங்கள் முன்னால் உட்கார்ந்து கொண்டு "நீங்க கொஞ்சம் obeseஆ இருக்கீங்க... cholesterol borderlineல இருக்கு. walking போங்க"
என்று சொன்னால் நமக்கு கேட்பதற்கு எரிச்சலாகத்தானிருக்கும். நீ மொதல்ல walking போய் உடம்பக் கொறய்யான்னு சொல்லலாம் போல் தோன்றும். அந்த விதத்தில்தான இந்தப்புத்தகத்தை எழுதிய அதிஷா தனித்து நிற்கிறார். ஒரு நாளைக்கு ஒன்றரை பாக்கெட் சிகெரெட் புகைத்துக் கொண்டிருந்தவர் பிறிதொரு நாளில்
Sub90 minutes Half Marathon ஒன்றை அசால்ட்டாக ஓடி முடித்தார். வலியும் மகிழ்ச்சியும் ஒருசேர கடந்து வந்த அந்தப்பாதையில் தான் கற்றுக் கொண்ட மொத்த வித்தையையும் இந்தப்புத்தகத்தில் இறக்கியிருக்கிறார் அதிஷா.
Sugar borderlineல இருக்கு எப்படியாவது fitness routine ஒன்னு start பண்ணனும் என்று நினைப்பவரா, கையைக் குடுங்கள். இந்தப்புத்தகம் உங்களுக்குத்தான்.

"நாங்கெல்லாம் பல ultra marathons அசால்ட்டா ஓடுனவங்க,ஆனா இப்போ 2 வருஷமா gap ஆகிருச்சு ப்ரோ. ஒன்னுமே பண்றதில்ல"ன்னு சொல்பவரா?
கையையும், காலையும் சேர்த்துக் குடுங்கள்...
இந்தப்புத்தகம் உங்களுக்கும்தான். சொல்லப்போனால் இந்தப்புத்தகம் நம் அனைவருக்கும்தான். உங்கள் வாழ்வில் பல பிரச்சனைகளுக்குமான ஒரு மாத்திரை, ஒரே மாத்திரையாக இந்தப்புத்தகம் அமையக்கூடும்.
இன்றே வாங்குங்கள், வாசியுங்கள். உடற்பயிற்சியின் மூலம், உங்கள் வாழ்க்கைக்கான அதிஷயம், அற்புதத்தை கண்டடையுங்கள். Kindle Link : https://amzn.to/3jQ1CdJ 
You can follow @ramkumarcomic.
Tip: mention @twtextapp on a Twitter thread with the keyword “unroll” to get a link to it.

Latest Threads Unrolled:

By continuing to use the site, you are consenting to the use of cookies as explained in our Cookie Policy to improve your experience.